தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 128 & 129; நூலாய்வு
கற்றிலனாயினும் கேட்க அஃதுஒருவற்கு ஒற்கத்தின் ஊ்ற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 128 & 129; நூலாய்வு கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 சித்திரை 07 , 2056 ஞாயிறு 20.04.2025 காலை 10.00 மணி தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்” – ஆளுமையர்கள்…
இலக்குவனார் திருவள்ளுவனுக்குப் படைப்பாற்றல் அரசு விருது
புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் பங்குனி 08, 2056, மார்ச்சு 22, 2025 அன்று புதுச்சேரியில் இலக்கியப்போடடிப் பரிசளிப்பு விழாவும் மகளிர் நாள் விருது வழங்கு விழாவும் கொண்டாடியது. இவ்விழாவில் ‘அகரமுதல’ ஆசிரியர் எழுத்தாளர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குத் தமிழ்ப் பொதுக் கட்டுரைப் பிரிவில் முதல் பரிசு வழங்கியதுடன் படைப்பாற்றல் அரசு விருது வழங்கிப் பாராட்டியது. புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கத்தின் நிறுவனர்,தலைவர், செயலர், பொருளர், பிற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியிருந்தனர்.
இலக்குவனார் திருவள்ளுவனுக்கு அடர் தமிழ்ப் போராளி விருது – பெருங்கவிக்கோ அளித்தார்
அன்னை சேது அறக்கட்டளை நடத்திய பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ இணையர் அன்னை சேதுமதியின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தலின் (ஐப்பசி 23, 2055 / 09.11.2024 சனி மாலை 5.30) பொழுது தமிழ்த் தொண்டறத்தார்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றன. தொடக்கத்தில் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற இயக்குநர் கவிஞர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையில் விருதாளர்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தினார். புலவர் மா.கணபதி தமிழ்ப்போராளி புலவர் த.சுந்தரராசன் படத்தினைத் திறந்து வைத்தார். கந்தசாமி (நாயுடு) கல்லூரி முதல்வர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் விருது வழங்குநரை அறிமுகப்படுத்தினார். அறிஞர்கள் சிலரின் உரைக்குப் பின்னர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார் தமிழ்வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஒளவை ந.அருள் அன்னை சேது மக்கள் சார்பில் தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயமும் பொற்கிழியும்…
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 112 & 113 ; என்னூலரங்கம்
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௯ – 649) ––– தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 112 & 113 ; என்னூலரங்கம் நிகழ்வு நாள் : ஐப்பசி 03, 2055 ஞாயிறு 20.10.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் புலவர் வை.வேதரெத்தினம்,…
தொல்காப்பியரும் திருவள்ளுவருமாக இணைந்தவர் இலக்குவனார் – ம.இராசேந்திரன் உரை
தொல்காப்பியரும் திருவள்ளுவருமாக இணைந்தவர் இலக்குவனார் – இலக்குவனார், தொல்காப்பிய விருதுகள் வழங்கு விழாவில் ம.இராசேந்திரன் உரை கனடா நாட்டின் தொல்காப்பிய மன்றமும் தமிழ் நாட்டின் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து கடந்த திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (20, 21, 22-09-2024) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினைச் சிறப்புற நடத்தியுள்ளன.. இந்நிகழ்வின் தொடர்ச்சியாகச், சென்னை எழும்பூரில் தே.ப.ச.(ICSA) மைய அரங்கத்தில் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் இலக்குவனார் தொல்காப்பிய விருதுகள்…
பாவலர் மு.இராமச்சந்திரனுக்குத் தமிழ் எழுச்சிப் பாவலர் விருது
தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் தமிழ்த்தேசியத் திருவிழாவில், பாவலர் மு.இராமச்சந்திரன் அவர்களுக்குத் தமிழ் எழுச்சிப்பாவலர் விருதினை இலக்குவனார் திருவள்ளுவன் வழங்குகிறார். உடன் தமிழ்க்காதலன், தமிழா தமிழா பாண்டியன், மூத்த தமிழறிஞர் அரு.கோபாலன், முதலானோர் உடனிருக்கின்றனர்.
ஆளுமையர் உரை 58,59 & 60 : தமிழ்க்காப்புக்கழகம்: இணைய அரங்கம்: 30.07.2023
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள்- 416) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 58,59 & 60 : இணைய அரங்கம்: நிகழ்ச்சி நாள்: ஆடி 14, 2054 /30.07.2023 ஞாயிறு தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழ்மாமணி இதழாளர் கவிஞர்…
தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக!
11ஆவது உலகத்தமிழ் மாநாட்டு நிறைவு விழா தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக! அரசுகளுக்கு வேண்டுகோள். ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08& 09.2023 ஆகிய நாள்களில் சென்னையில் செம்மண்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் 11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் ஆசியவியல் நிறுவனமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டின் நிறைவுவிழா நேற்று(09.07.2023 அன்று) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான்சாமுவேல் தலைமை வகித்தார். வேல்சு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிக்கல்வி…
‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள்
ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டி முடிவுகள் வருமாறு: முதல் பரிசு: முனைவர் தாமரை, திருச்சி இரண்டாம் பரிசு: முனைவர் தானப்பன், புதுதில்லி மூன்றாம் பரிசு: முனைவர் வதிலை பிரதாபன் முதல் பரிசிற்கான உரூ. 5,000 / தொகையில் கட்டுரையில் சில பிறமொழிச்சொற்கள் இடம் பெற்றிருந்தமையால், உரூ 2,000/ பிடிக்கப்பட்டு இருவருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்படுகின்றன….
இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை- இலக்குவனார் திருவள்ளுவன்
இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை இராசீவு கொலைவழக்கில் சிக்கித் சிறைத் துன்பத்தில் உழலும் எஞ்சிய அறுவரை உச்சநீதி மன்றம் இன்று (ஐப்பசி 25, 2053 / 11.11.2022) விடுதலை செய்தது. இராபர்ட்டு பயசு, செயக்குமார், சுதேந்திர இராசா(சாந்தன்), இரவிச்சந்திரன், சிரீஅரன் (எ)முருகன், நளினி ஆகிய அறுவரின் நலிந்த உடல்நிலை, சிறைவாழ்க்கையில் மேற்கொண்டுள்ள நன்னடத்தை, கல்வி, படைப்புகளில் ஈடுபடல் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சட்டப்படியும் மனித நேயத்துடனும் மூன்று தலைமுறையாகச் சிறைவாழ்க்கையில் துன்புறுவதைக் கருத்தில் கொண்டும் பேரறிவாளனை விடுதலை செய்த வழியில் இந்த அறுவரையும்…
திருக்குறளின் அறத்துப்பாலுக்குக் கதையெழுதிய மாணவர்கள்!
திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பதின் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம்வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள38 குறள்களுக்கு, 38 கதைகளை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர்கோ.மாலினி, இக்கதைகளைத் தொகுத்து ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும்நூலாக்கியுள்ளார். இந்நூலின் அட்டை ஓவியத்தையும் பள்ளி மாணவரே வரைந்துள்ளார். இப்பள்ளியின் தமிழ்த்துறை சார்பில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதியன்றுபள்ளி வளாகத்திலுள்ள ஆற்றல் அவைக்களம் அரங்கில் இந்நூலின் வெளியீட்டு விழாநடைபெற்றது. ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும் இந்நூலை பள்ளியின் தாளாளர் சக்தி சிரீதேவி வெளியிட, கவிஞர்…
“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” – சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்!
“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்! “தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம், தெய்வத் தமிழ்ப் பேரவை ஆகியன சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் எழுச்சியுடன் நடைபெற்றது. அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதகங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது – தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச், சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் அட்டோபர் 12 அன்று மாலை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்ற இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கினார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்றார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடிச் செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார். முன்னதாக, அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் வெளி வந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்டராமன் அவர்கள் எழுதியுள்ள “கருவறைத் தீண்டாமைக்கு ஒரு தீர்ப்பு – ஆதரிக்கும் திராவிட மாடல்” நூலின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. ஐயா பெ. மணியரசன் நூலை வெளியிட, திருக்கயிலாய வாத்தியக் குழு திரு.கோசை நகரான், ஆசீவகம் சமய நடுவத்தலைமை நிலையச் செயலாளர் திருவாட்டி. கீதா, ம.பொ.சி. பெயரன் திரு. திருஞானம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சீனிவாசன், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில், தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் திரு. வியனரசு, தமிழ்த் தன்னுரிமை இயக்கத் தலைவர் திரு. இராமச்சந்திரன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், திரளான தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்டராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாசுகர், பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் முதலான திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். நிறைவில், த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறினார். ================================= தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ================================= பேச: 9443918095, புலனம் : 9841949462 முகநூல் : www.fb.com/tamizhdesiyam ஊடகம் : www.kannottam.com இணையம் : www.tamizhdesiyam.com சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam