தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் , 1. தமிழ்க்கலை

(தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்): முன்னுரை – க. அன்பழகன் – தொடர்ச்சி) 1. தமிழ்க்கலை (சென்னை  ஒய்.எம்.சி.ஏ. பட்டி மன்ற முதல் ஆண்டு நிறைவிழாவில் பேசியது) தமிழ் நாட்டில் சில காலமாகப் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. அவ்வுணர்ச்சி ஆக்கத்திற்குப் பயன்படுமாக! இத்தகைய பட்டிமன்றங்கள் பல இந்நாட்டில் காணப்படல் வேண்டும். இயற்கைக்கு மாறான கொள்கைகளை அழித்துவிடுங்கள். ஆனால், இயற்கை நெறிப்பட்ட கொள்கைகள் இன்று அழிக்கப்பட்டு வருதலைக்காண வருந்துகிறேன். அது கூடாது. இத்துறையில் சிறப்பாக மகளிர் முயற்சி செய்தல் வேண்டும். ஆடல், பாடல், நகைச்சுவை இவை பெரிய கலைகளாம். என்…

தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்): முன்னுரை – க. அன்பழகன் + பதிப்புரை

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் முன்னுரை – க. அன்பழகன் தண்டமிழ்ப் பெரியார், சாந்தசீலர், ஒழுக்க ஒளி திரு. வி. க. அவர்களின், உயர்வெண்ணும் உள்ளத்தினின்றும் வெளிப்பட்ட ஒப்பற்ற கருத்தோடைகளிற் சில ஈண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழ் நாட்டின் மேடைகள் அனைத்தும், கட்சிகள் யாவும், சமயக் குழுக்கள் எல்லாம், அவரது பொன்னுரையால் பொலிவு பெற்றதை மறக்கவியலாது. தமிழும் தமிழரும் அவரது கருத்தோடையில் திளைத்து மறுமலர்ச்சி எய்தியுள்ளதையும் நாமறிவோம். அத்தகு பெரியாரின் உரை ஒவ்வொன்றும். நிகழ்ந்தபின் – தொகுக்கப்பட்டு அச்சியற்றப் பெற்றிருத்தல் வேண்டும். அதனால்,…

கலைமாமணி விருதுகளை இதழாளர்களுக்கும் வழங்குக ! – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைமாமணி விருதுகளை இதழாளர்களுக்கும் வழங்குக ! பல்துறைக் கலைஞர்களுக்கும் கலைமாமணி விருதுகள் தமிழ்நாட்டரசின் சார்பில் கலைபண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்கப் பெறுகின்றன. பொதுவாக எத்தகைய விருதுகள் வழங்கினாலும் அவை குறித்த எதிருரைகள் வருவது வழக்கமாக உள்ளது. ஆனால்,  கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் போதெல்லாம் எதிர் அலைகள் மிகுதியாகவே வீசப்படுகின்றன. “ திரைத்துறையினருக்கே கொட்டிக் குவிக்கின்றனர்; கலைஆற்றலின் மிகுதியைக் கருதாமல் ஆடைக் குறைப்பின் மிகுதியைக் கருத்தில் கொண்டு விருதுகள் வழங்குகின்றனர்; குறிப்பிட்ட சாதியினர்மட்டும்தான் தகுதியாளர்களா? அவர்களுக்கே விருதுகள் வழங்குவது ஏன்?;…

இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே! – இரா.திருமுருகன்

இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே!   பாட்டியல்கள் சிற்றிலக்கியங்களின் தொகை தொண்ணூற்றாறு என்று கூறினாலும் தமிழில் 360 வகைச் சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஆற்றுப்படை, பிள்ளைத்தமிழ், கோவை, உலா, தூது, பரணி, கலம்பகம், பள்ளு, குறவஞ்சி, அந்தாதி, புராணம் ஆகியவை பெருவழக்கில் உள்ளன. … …. ….   இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு சிற்றிலக்கியங்கள் தரும் இசைச் செய்திகள், சிற்றிலக்கியங்களில் காணப்படும் இசைப்பாடல்கள், இசைப்பாடல்களாகவே அமைந்த சிற்றிலக்கியங்கள் என்ற மூன்று வகையில் அடங்கும். -முனைவர் இரா.திருமுருகன்:…

நாட்டுப்புறப்பாடல், ஆடல் வகைகள்

நாட்டுப்புறப்பாடல், ஆடல் வகைகள் ஓராட்டு ஒப்பு கும்மி (கொம்மி) ஒயில் கொம்மி / கும்மி மாரியம்மன் பாட்டு தெம்மாங்கு தாலாட்டுப்பாடல் கும்மிப்பாடல் ஏற்றப்பாடல் உடுக்கைப்பாடல் ஒப்பாரிப்பாடல் காவடிச் சிந்து கோலாட்டு கழியல் பொய்க்கால் குதிரை சாமியாட்டம் சாட்டை வீச்சு களியான் கூத்து/ கணியான் கூத்து கழைக்கூத்து இராம நாடகம் குறவஞ்சி நாடகம் நொண்டி நாடகம் தரவு :  இலக்குவனார் திருவள்ளுவன்: தமிழ்ச்சிமிழ்

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே! – கோ.தெய்வநாயகம்

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே!      தொழில்நுட்பமும் கலைநுட்பமும் இணைந்து உருவாக்கப்படுவதே கட்டடக்கலை. இதன் செம்பொருள் உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே. உலகின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களாகத் தமிழர் விளங்கி உள்ளனர். எனவேதான் பிரித்தானியக் கலைக் களஞ்சியம் தமிழர்களைத் தலைசிறந்த “”கோயிற் கட்டடக் கலைக் கட்டுநர்கள்” எனக் குறிக்கின்றது. வாழ்வியல் மற்றும் சமயஞ்சார் கட்டடக் கலையின் எழிலார்ந்த வடிவாக்கங்களைத் தமிழர்கள் தொன்றுத் தொட்டே ஆளுமையுடன் படைத்துச் சிறந்தமையை இன்றும் தமிழகத்தின் ஊர்களிலும் கோயில்களிலும் கண்டு மகிழலாம். முனைவர்…

பாடல் வகைகள்

பாடல் வகைகள்   குழந்தைப் பாடல்கள்: தாலாட்டுப்பாடல்கள்: விளையாட்டுப் பாடல்கள்: வேடிக்கைப் பாடல்கள் தொழிற்பாடல்கள் தெம்மாங்குப் பாடல்கள் மணப்பாடல்கள்: வாழ்த்துப் பாடல்கள் வசைப் பாடல்கள் பிணப்பாடல்கள்: ஒப்பாரிப் பாடல்கள் மாரடிப் பாடல்கள் களியல் பாடல்கள் வழிபாட்டுப் பாடல்கள் கோலாட்டுப் பாடல்கள் குறிகாரன் பாடல்கள் குடுகுடுப்பைப் பாடல்கள் கோடங்கிக் காரன் பாடல்கள் திருவிளக்குப் பாடல்கள் துளசிவழிபாட்டுப் பாடல்கள் வருணன்வழிபாட்டுப் பாடல்கள் மாரியம்மன் வழிபாட்டுப் பாடல்கள் வள்ளி வழிபாட்டுப் பாடல்கள் பிள்ளையார் வழிபாட்டுப் பாடல் அம்பாள் பாடல் வண்டியோட்டிப் பாடல் களையெடுப்போர் பாடல் கதிர்அறுப்போர் பாடல் சூடடிப்போர்…

துபாயில் நடைபெற்ற நடன அரங்கேற்ற நிகழ்ச்சி

துபாயில் நடைபெற்ற செல்வி சிரத்தாவின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி    துபாய் : ஐப்பசி 26, 2047 / நவம்பர் 11, 2016 வெள்ளிக்கிழமை அன்று செல்வி சிரத்தா  சிரீராம(ஐய)ரின்  பரதநாட்டியம்  அரங்கேற்றம் மரு. இராசசிரீ(வாரியர்) தலைமையில் வெல்லிங்டன் அரங்கத்தில் வெகுசிறப்பாக  நடைபெற்றது.   குரு திருமதி மதுராமீனாட்சி சினீவாசு பாட்டும், நட்டுவாங்கமும் திரு  சிரீனி கண்ணூர் மிருதங்கம் , திரு சுரேசு நம்பூதிரிவில்யாழ்(வயலின்) , திரு பிரியேசு  புல்லாங்குழல் அனைத்தும் வெகு இனிமையாக  இருந்தன.  மலர் வணக்கம், அலாரிப்பில்  தொடங்கிக் கௌத்துவம், வண்ணம், பதம்,…

செல்வி முல்லை அமுதன் கார்த்திகாவின் நூல் அறிமுகமும் இசைப் படையலும்

‘சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்‘ நூல் அறிமுகமும் இசைப் படையலும்  தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈசுட்டுஃகாமிலுள்ள அட்சயா மண்டபத்தில் நிறைவேறியது. எழுத்தாளர் முல்லைஅமுதன் – செயராணி  இணையரின் மூத்த புதல்வி கார்த்திகா,  “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்” என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும்  படையலிட்டார். முற்பகுதியில் நூல் அறிமுகம், பிற்பகுதியில் இசைப்படையலும் இடம்பெற்றது.  தொடக்கத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை  அவையோர் இருந்து  களித்து மகிழ்ந்தமை…

இசைச்சொற்கள் அன்றும் இன்றும்

   இன்று ‘உச்சஃச்தாயி’, ‘மந்திரஃச்தாயி’, மத்திமஃச்தாயி’ எனப்படுவன அன்று வலிவு மண்டிலம், மெலிவு மண்டிலம், சம மண்டிலம் என்ற பெயரில் இருந்தன என்றும், இன்று, ‘கோமள தீவிர சுரங்கள்’ எனப்படுவன அன்று குறை நரம்பு, நிறை நரம்புகளாகப் பெயர் பெற்றிருந்தன என்றும், இன்று சம்பூர்ணம், சாடவம், ஓளடவம், சதுர்த்தம் என்று சொல்லப்படும் இராக வகைகள் அன்று முறையே பண், பண்ணியல், திறம், திறத்திறம் என்ற பெயர் பெற்றிருந்தன என்றும், கிரக பேதம் என்று இன்று சொல்லப்படுவது அன்று பண்ணுப் பெயர்த்தல் என்றும், பாலைத் திரிபு…

பண்ணும் பரதமும் வடக்கே தோன்றியது என்றால் அங்கே ஏன் இல்லை?

    சாரங்கத்தேவர்தான் கருநாடக இசையை உண்டாக்கியவர் என்றும், பரத முனிவர்தான் பரத நாட்டியத்தைக் கண்டு பிடித்தவர் என்றும் ஒரு கூட்டத்தார் கூறி வருகின்றனர்.   காசுமீரத்துச் சாரங்கதேவர்தான் கருநாடக இசையைப் படைத்தவர் என்பது உண்மையானால் காசுமீரத்திலும், மத்தியப்பிரதேசத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் இன்றுள்ள இசைவாணர்கள் மோகனத்தையும் (முல்லைப்பண்), யதுகுல காம்போதியையும் (செவ்வழி), மத்தியமாவதியையும் (செந்துருத்தி) பாடிக் கொண்டிருக்க வேண்டும். வடபுலத்துப் பரத முனிவர்தாம் பரத நாட்டியத்தைக் கண்டுபிடித்தவர் என்பது உண்மையானால், இன்று பஞ்சாபிலும், பீகாரிலும், வங்காளத்திலும் நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருக்க வேண்டும். கருநாடக இசையும்…