பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? – ஆரூர் தமிழ்நாடன்

பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? உழவர்களே! நாட்டின் அட்சயப் பாத்திரமான நீங்கள் பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? தாய் வீடான  தமிழகம் திரும்புங்கள்! நீங்கள் இதுவரை வடித்த கண்ணீரைக் கொண்டே இருபோகச் சாகுபடியை இங்கே முடித்திருக்கலாம். அழுகிய காயங்களிடம் மருந்து கேட்காதீர்கள்! வெளிச்சத்தின் புத்திரர்களே! விழி ஈரம் துடைத்துத் தாய் வீடான தமிழகம் திரும்புங்கள்! அதிகாரப் பசியெடுத்த ஆதிக்கக் கழுகுகளுக்கு இதயம் இல்லை. செவிகளும் கூடச் சேர்ந்தாற்போல் செத்துவிட்டன அவற்றின் கண்களும் கல்லறைக்குப் போய்விட்டன இறக்கத்தில் கிடக்கும் அவற்றிடம் இனியும் இரக்கத்தை எதிர்பார்க்கலாமா? தாய் வீடான தமிழகம்…

இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு

  இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு   சித்திரை 24 & 25, 2047  /  மே 07 & 08, 2016 மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூா் (மாவட்டம்) இரண்டு நாட்களும் காலை, நண்பகல், இரவு உணவு, தங்குமிடம், பயிற்சிக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசம்.   நண்பர்களே!   இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு  மேற்குறித்தவாறு, மே மாதம் 7,8  நாள்களில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூா் (மாவட்டம்)…

ஊர்ப்புற மேம்பாட்டில் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஏந்துகளின் தாக்கம்

  – கே.சி.சிவபாலன்                 ஆராய்ச்சி மாணவர் வேளாண் விரிவாக்கத்துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவை – 03                                     இந்தியாவின் மக்கட்தொகை 121 கோடியில்,  சிற்றூர்களில் மட்டும் 70 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். நமது நாட்டில் உள்ள ஆறு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் (6,36,000) சிற்றூர்களில் வசிக்கும் உழவர்களே நாட்டின் உணவுத் தேவைக்காகக் கூலங்களை(தானியங்க‌ளை) உற்பத்தி செய்கின்றனர். சிற்றூர்களை மேம்படுத்த வகுக்கப்பட்ட சிற்றூர் மேம்பாட்டுத் திட்டங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள், விடுதலை அடைந்த 65 வருடங்களில் இன்னமும் முழுமையாக…