கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா?

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 90 : 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை-தாெடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை பருவம் பாழ்படுவதா?           சிறியவள் இல்லறச் செந்நெறிப் படாஅது                  பருவமும் உருவமும் பாழ்படப் புறநெறி 55           கருதின ளாகிக் கழிவது முறையோ? தேடருங் குறிஞ்சித் தேனினைப் பாழ்செயும் மூடரும் உளரோ? முக்கனி யாகிய தேமாங் கனியும், தீஞ்சுவைப் பலவும்,              கொழுங்குலை வாழைச் செழுங்கனி யதுவும் 60           அழுங்கல் எய்திட விழுந்து புழுதியில் நைந்து சிதைவதில்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 90 : 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு-தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை வஞ்சியின் ஏக்கம் பூங்கொடி அளவிலாப் புகழ்நிலை யுறினும் தேங்கெழில் சிதைவுறத் திருமணம் இன்றிக் கொஞ்சும் இளமை கொன்னே கழிய அஞ்சுபொறி அடக்கிய அறவோர் போல                    நெஞ்செழுங் காதலை நெருப்பினில் பொசுக்கிப்     5           பிஞ்சிற் பழுத்த பேதை ஆயினள்; எவ்வணம் இயம்பினும் எத்துணை மொழியினும் செவ்விய அவள்நிலை சிறிதும் பிறழ்ந்திலள் என்னே இவள்மனம் இருந்த வாறே!                  பின்னே வாழ்விற் பேதுறு வாளே  10…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல்- தொடர்ச்சி) பூங்கொடி சண்டிலியின் அழைப்பு பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன் பெரிதுறு விழுமமோ டிங்கெனைப் பிரிந்தோன் விரைவினில் வரூஉம் விறலி! எனக்கிசை        —————————————————————           தொக்கு – சேர்ந்து, வரூஉம் – வருவான்.  ++++++++++++++++++++++++++++++++++++ ஊட்டிய தலைவீ ! ஒன்றுனை வேண்டுவல்                பாட்டியல் பயில வேட்டவர் பலர்வட       270           நாட்டிடை வேங்கை நகரினில் வதிவோர் ஊட்டுவோர் ஆங்கண் ஒருவரும் இன்மையின் வாட்ட முறுவது வருங்கால் உணர்ந்தேன் அரிவைநீ அருளுடன்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 87 : நிலவுக் காட்சி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 86 : தேனருவி-தொடர்ச்சி) பூங்கொடி நிலவுக் காட்சி           தொகைப்படு விண்மீன் மினுக்கிட வானில்              வெண்மதி வட்டம் விட்டொளி கான்று    185           தண்புனல் கானம் தளிர்கொடியாவும் வெள்ளிய ஒளிமயம் விளைத்தது கண்டோம்; அள்ளிய விழியால் ஆர வுண்டனம் உள்ளந் துள்ளிய உவகைப் பாங்கினைத்                   தெள்ளிதின் இயம்பத் தெரிகிலேன் தோழி!     190 பாட்டின் மகிழ்ச்சி           உள்ளெழும் உணர்ச்சி உந்தி எழலால்    —————————————————————           வாலை – இளமை, நறவம் – தேன், மாந்திடும் –…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 86 : தேனருவி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 85 : பொதிகைக் காட்சி-தொடர்ச்சி) பூங்கொடி தேனருவி           வான முகட்டின் வாய்திறந் திறங்குதல்            மானை வீழ்ந்திடும் தேன்சுவை அருவியின்    140           ஓங்குயர் தோற்றமும் ஒய்ய்யெனும் ஓசையும் பாங்கிஎன் எருத்தையும் செவியையும் வருத்தின;   —————————————————————           மல்லல் – வளப்பம், தண்டாது – இடைவிடாது, கங்குல் – இரவு, மான – போல, ஒய்ய்யெனும் – ஒலிக்குறிப்பு, எருத்து – கழுத்து. ++++ வானுற நிவந்த வால்வெண் ணிறத்தூண் தானது என்னத் தயங்கி நின்றிடும்;                  …

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 85 : பொதிகைக் காட்சி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை – தொடர்ச்சி) பூங்கொடி பொதிகைக் காட்சி           தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்;             முடியும் நடுவும் முகிலினம் படர்தரக்     110           கொடிபடர் சந்தனக் கடிமணம் அளாவிச் சில்லெனுந் தென்றல் மெல்லென வீச நல்லிளஞ் சாரல் நயந்திடத் துளிப்ப அலரும் மலரும் அடருங் கடறும்              பலவும் குலவி நிலவும் மாமலைக்           காட்சியும் மாட்சியும், கடும்புனல் அருவியின் வீழ்ச்சியும் கண்டவை வாழ்த்தினென் வாழ்த்தினென் தென்மலைச் சிறப்பினைச் செப்புதல் எளிதோ? கன்மலைக்…

 கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 83 : 18. இசைப்பணி புரிந்த காதை-தொடர்ச்சி) பூங்கொடி           இசைப்பணி புரிந்த காதை சண்டிலி வருகை           மணக்கும் தென்றல் மாமலை எழிலும், கோடை தவிர்க்கும் குளிர்மலைப் பொழிலும், நீடுயர் தண்ண்ணிய நீல மலையுடன் கண்டுளங் குளிர்ந்த காரிகை ஒருத்தி             சண்டிலி என்பாள் சார்ந்து வணங்கித்    55           `தமிழிசை வளர்க்கும் தையாஅல் நின்னுழை அமிழ்தம் நிகர்க்கும் அவ்விசை பயிலும் ஆர்வங் கொண்டுளேன் ஆதலின் அருள்நலங் கூர்விழி யாய்நின் குழுவினுள் எனையும்                   சேர்த்தருள் செய்’கெனச்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 83 : 18. இசைப்பணி புரிந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 82 : பூங்கொடி இசைவு தருதல்-தொடர்ச்சி) பூங்கொடி 18. இசைப்பணி புரிந்த காதை அருண்மொழி மகிழ்ச்சி           எழிலி பயிற்றிய இசைத்திறம் பூண்ட விழிமலர்ப் பூங்கொடி வியன்புகழ் ஊர்தொறும் பரவிப் பரவிப் பாரகம் அடங்கலும் விரவி மலர்ந்தது விளைந்தது நற்பயன்;           தான்புனை கவியைச் சான்றோர் ஏத்திட         5           ஈன்றநற் கவிஞன் ஏமுறல் போல ஈன்றாள் அருண்மொழி இவள்புகழ் செவிப்பட ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே;   எழிலியின் மகிழ்ச்சி           இசையின் அரசியாம் எழிலிதன் கொழுநன்            …

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 82 : பூங்கொடி இசைவு தருதல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 81 : தமிழைப் பழிக்க விடுவதோ!-தொடர்ச்சி) பூங்கொடி எழிலிபாற் பயின்ற காதை பூங்கொடி இசைவு தருதல்           `அன்னையிற் சால அன்புளம் காட்டி           என்புலம் ஓம்பி இலங்கிட அருளினை!         95           நின்பணி அஃதேல் நேருதல் அன்றி மறுமொழி கூற யானோ வல்லேன்? மறையுமென் வாழ்வு வளர்தமிழ்ப் பணிக்கே என்றுளம் கொண்டேன் என்பணிக் கஃதும்           நன்றெனின் இன்னே நவிலுதி தாயே’ 100 காவியப் பாவை           என்றலும், எழிலி யாப்பின் இயலும் பாவும் வகையும் பாவின்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 81 : தமிழைப் பழிக்க விடுவதோ!

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 80 : 17. எழிலிபாற் பயின்ற காதை – தொடர்ச்சி) பூங்கொடி எழிலிபாற் பயின்ற காதை தமிழைப் பழிக்க விடுவதோ!           இவர்தம் பாடல் எழிலுற அச்சுச்            சுவடி வடிவில் சுற்றுதல் கண்டோம்;    65           விடுத்தஇச் சுவடிகள் அடுத்திவண் வருமவர் படித்தவர் விழியிற் படுமேல் நம்மைப் பழிப்பவர் ஆவர்; பைந்தமிழ் வளர்ச்சி இழித்துரை கூறுமா றிருந்ததே என்பர்;                  செழித்துயர் தமிழைப் பழித்திட நாமே        70 விடுத்திடல் நன்றோ? விளம்புதி மகளே! நிலைத்திடுங் கவிதை தொடுத்திடுங்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 80 : 17. எழிலிபாற் பயின்ற காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 79 – தொடர்ச்சி) பூங்கொடி 17. எழிலிபாற் பயின்ற காதை பூங்கொடி எழிலியின் இல்லம் அடைதல்           ஆங்ஙனம் புகன்ற அடிகள்தம் வாய்மொழி பூங்கொடி ஏற்றுளத் திருத்தினள் போந்து கொடிமுடி நல்லாள் குலவிய தமிழிசை நெடுமனை குறுகி நின்றன ளாக         பூங்கொடி அறிமுகம்           `வல்லான் கைபுனை ஓவியம் போலும்         5           நல்லாய்! என்மனை நண்ணிய தென்னை? இளங்கொடி யார்நீ?’ என்றனள் எழிலி; உளங்கொள அறிமுகம் உரைத்தனள் தன்னை அடிகள்தம் ஆணையும் அறைந்தனள் பூங்கொடி;         எழிலி பாடம்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 79 : எழிலியின் கையறுநிலை தொடர்ச்சி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 78 – தொடர்ச்சி) பூங்கொடி 16. எழிலியின் வரலாறறிந்த காதை – தொடர்ச்சி தருவது தொழிலாக் கொண்டது தமிழகம் அயன்மொழி பலவும் ஆய்ந்து தெளிந்து மயலற மொழியும் மாந்தர் பற்பலர் எம்முடை நாட்டினில் இலங்கிடல் காணுதி!           எம்மொழி யாயினும் எம்மொழி என்றதை  125           நம்பும் இயல்பினர் நாங்கள்; இந்நிலை அறிகதில் ஐய! அமிழ்தெனும் தமிழை மறந்தும் பிறமொழி மதிக்கும் பெற்றியேம்; ஆயினும் தமிழை அழிக்கும் கருத்தின்                   சாயல் காணினும் தரியேம் எதிர்ப்போம்;    130 பிறமொழி…

1 2 16