பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்

பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும்  [பெருந்தலை(Bigg Boss) நிகழ்ச்சி என்பது நேர்நிகழ் காணாட்ட நிகழ்ச்சியாகும். இப்பொழுது இந்தியாவில் ஏழு மொழிகளில் நடைபெறுகிறது. தமிழும் அவற்றில் ஒன்று. பல்லாயிரக்கணக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உருவாக்கியும் வழங்கியும் வரும் எண்டமோல் நிறுவனத்தின் சார் நிறுவனமே எண்டெமோல் சைன் இந்தியா (Endemol Shine India) என்னும் நிறுவனம். இது வியாகாம் 18(Viacom 18), இசுடார் இந்தியா ஆகியவற்றின் மூலம், இதனை வெளியிடுகிறது. ஊட்டு(Voot), திசுனி + ஆட்டுசுடார் மூலமே காட்சிப்படுத்துகிறது.  கேட்பிற்கிணங்கக் கட்டணக் காணொளி மூலமே(Subscription video on-demand)…

உலகெங்கும் பொங்கல் திருவிழா! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் திருநாள் என நாம் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். பொங்கல் திருவிழா கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விழா. உழைப்பாளிகளை மகிழ்விக்கும் விழா. அறுவடைத் திருநாளான இவ்விழா உலகெங்கும் பல நாடுகளில் பல்வேறு நாள்களில் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா, கனடா,  ஆகிய நாடுகளில் நன்றி தெரிவிக்கும் விழா அட்டோபர் – நவம்பரில் கொண்டாடப்படுகிறது. பிரிட்டனில் செட்டம்பர் முழுநிலவு நாளை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமை அன்று அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. இலையுதிர் இடைக்காலத் திருவிழா அல்லது இடை-இலையுதிர்காலக் கொண்டாட்டம் (Mid-Autumn Festival) என்பது சீனா, வியத்துநாம், தைவான் ஆகிய…

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை அனல் வினா மன்றம் தை 03, 2052 ஞாயிறு 16.01.2021 காலை 8.00 சான்பரான்சிசுகோ காலை 11.00  நியூயார்க்கு இரவு 9.30 இலங்கை / இந்தியா பட்டி மன்றம் * கருத்துக் களம் * வினாடி வினா மையப் பொருள் : வாசிப்பு தமிழ் விவாதிகள் கழகம், இலங்கை

தமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021

அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக! உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.   (திருவள்ளுவர், திருக்குறள் ௲௩௰௩) வேண்டாதன போக்கும் போக்கி நாள், உழவரைப் போற்றும் பொங்கல்  திருநாள், திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பு, மாட்டுப் பொங்கல் திருநாள், பண்பை வளர்க்கும் காணும் பொங்கல் நாள் ஆகிய தமிழர் திரு வாரத்திற்கு அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக ! இன்பம் தங்கி இன்னல் அகலட்டும்! வளமை நிறைந்து வறுமை தொலையட்டும்! ஒற்றுமை ஓங்கிப் போர் ஒழியட்டும்! யாவரும் இணை என்பது நிலைக்கட்டும்!   வாழ்த்தி மகிழும் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர்,…

வாழ்ந்திடுமோ தமிழ்தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாழ்ந்திடுமோ தமிழ்தான்!    நற்றமிழில் பேசுவது மில்லை அருந்தமிழில் எழுதுவது மில்லை பைந்தமிழில் பாடுவது மில்லை செந்தமிழில் பெயரிடுவது மில்லை கன்னித்தமிழில் கற்பது மில்லை இன்றமிழில் பூசிப்பது மில்லை மூவாத்தமிழில் முழங்குவதுமில்லை தமிழ்நெறியைப் போற்றுவது மில்லை தமிழனென்று எண்ணுவது மில்லை தமிழ் வாழ்க வெல்க  என்றால் வளர்ந்திடுமோ வாழ்ந்திடுமோ தமிழ்தான்!  இலக்குவனார் திருவள்ளுவன்

குவிகம் அளவளாவல், 10.01.2021

மார்கழி 26, 2051 / 10.01.2021 ஞாயிறு மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் ம.வே.சிவகுமார் எனும் நண்பனும் படைப்பாளிகள் கூட்ட எண் : 619 157 9931 கடவுச் சொல் : kuvikam 123 அல்லது   https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09இணைப்பைப் பயன்படுத்தலாம்   நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்       

கனவு நனவாக! – ஆற்காடு க. குமரன்

கனவு நனவாக என் மொழி ஆட்சி மொழி என்று அரசாணை வெளியிட்டது எங்கு காணினும் என் மொழி பெயர்ப்பலகைகளில்   ழகரம் யகர ஒலிப்பின்றித் தமிழனின் நாக்கில் தவழ்ந்தது தலை நகர் கிளை நகர் அத்தனையிலும் தலைமையானதென் தமிழ் மொழி   வணிக மொழிகளில் கூட வலிமையானது என் தமிழ் மொழி வீதியில் நின்ற விவசாயிகள் வீட்டுக்கு வந்தனர்   நாட்டினர் விருந்தோம்பலுக்கு விதையிட்டனர் நாடாளும் மன்னர் எல்லாம் நல்லவனாயினர்   வழக்கு மன்றங்கள் எல்லாம் வழக்கின்றி வலு விழுந்தன காவல்துறை எல்லாம் ஏவல்…

இலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07

சென்னையில் ஃபகீமிய்யா  பதிப்பகம் நடத்தும் இலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி  முகிப்புல் உலமா முகம்மது மஃரூபு பங்கேற்பு சென்னையில் ஃபகீமிய்யா  பதிப்பகம் சார்பில் இலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி மார்கழி 23, 2051 / 07.01.2020  வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு எழும்பூர் தே.ப.ச.(இக்குசா) மையஅரங்கில் நடக்க இருக்கிறது. இந்த அரங்கம் கன்னிமாரா நூலகம் –  அரசு அருங்காட்சியகம் எதிரில் அமைந்துள்ளது. நிகழ்ச்சிக்கு இசுலாமிய இலக்கியக் கழகத் தலைவர் பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி தலைமை வகிக்கிறார். உரூமியின் கவிதை நவீன நோக்கில் என்ற தலைப்பில் அசுவத்து…

சிலம்பப்போட்டிப் பரிசளிப்பு விழா

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா      சேத்துப்பட்டு. சன.04. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் சேத்துப்பட்டு திவ்வியா கல்விக்குழும வளாகத்தில் நடைபெற்றது.         திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாநிலத் தலைவருமான முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. தலைமையின் கீழ்ச் செயல்படும் திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.      இவ்விழாவிற்கு, திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் பெ.பெரியசாமி வரவேற்புரையாற்றினார்.    …

இனித்தது உன் பெயர்! -ஆற்காடு க. குமரன்

இனித்தது உன் பெயர்!   திரும்பிப் பார்க்க வைத்தது நீ மட்டும் அல்ல உன் பெயரும் திரும்பத் திரும்ப உச்சரித்துப் பார்த்தேன் தேனாய் இனித்தது   எழுதி எழுதிப் பார்த்தேன் என் உயிரோடு ஒட்டிக் கொண்டது   பிரிவின் போது எல்லாம் படித்துப் பார்த்தேன் பரிவாய் உணர்ந்தேன் என் பெயரோடு சேர்த்து எழுதிப் பார்த்தேன் ஏழு பிறவி இனித்தது உன் பெயரைப் பிரித்துப் பார்த்தேன் உறைந்த பிணமாய் உணர்ந்தேன்   உன்னோடு வாழ விட்டாலும் என்னோடு வாழும் உன் பெயரோடு நான் இன்னும் உயிரோடு…

புதுச்சேரியில் பறையிசை ஆட்ட பயிற்சிப் பட்டறையும் அரங்கேற்றமும்

புதுச்சேரியில் பறையிசை ஆட்ட பயிற்சிப் பட்டறையும் அரங்கேற்றமும்! புதுச்சேரியில் பள்ளி மாணவ மாணவியருக்கான இரண்டு நாள் பறை இசைப் பயிற்சி முகாம், மார்கழி 18, 2051 / 02.01.2021 அன்று  அரங்கேற்றத்துடன் நிறைவு பெற்றது. பெண்ணாடம் – திருவள்ளுவர் கலைக்குழு, புதுச்சேரி திருக்குறள் மன்றம் ஆகிய இரு அமைப்புகளின் சார்பில். தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் திரு. இரா.வேல்சாமி தலைமையில் புதுச்சேரி வேலுராம்பட்டு அறிவர் பள்ளியில்  நடைபெற்ற இந்த இரண்டு நாள் முகாமை பெண்ணாடம் – திருவள்ளுவர் கலைக்குழு தோழர்கள் இரண்டு நாட்கள் இங்கேயே…

நின்னை நீ மதி! அதுவே நிம்மதி! – ஆற்காடு க. குமரன்

நின்னை நீ மதி! அதுவே நிம்மதி!   உன் நிழல் கூட உனக்குச் சொந்தமில்லை! அது உன்னை ஊடுருவ முடியாத ஒளிக்கதிரின் பிம்பம்   மெய்யும் பொய்யே தான் உயிர் எனும் மெய் உன்னை விட்டு விலகும் போது   உனக்குள் ஊடுருவும் இயற்கையும் இதயமும் மட்டுமே உண்மை   உனக்குள் இருக்கும் காற்றுதான் உன்னைச் சுற்றியும் இருக்கிறது உள்ளும் வெளியும் உலவும் காற்று உனக்குள் இல்லாமல் போனால் இந்தப் பூவுலகும் உனக்கில்லை!   நீ, நீயாக இரு! உன் நிழல் கூடக் கருப்பாகத்…

1 2 587