தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார்-தமிழ் வானம் சுரேசு
தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார் ”சலுகை போனால் போகட்டும் – என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒரு கோடி கண்ட – என் தமிழ் விடுதலை ஆகட்டும்” என்ற புரட்சிக்கவிஞரின் பாட்டு இலக்கணத்திற்கு இலக்கியமாகவும் தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் விளங்கியவர்தான் ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்’ என்று போற்றப்படும் பேரா. சி. இலக்குவனார். நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள்…
பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973), விடுதலை
இந்நாள் – அந்நாள் Last updated: September 3, 2026 3:39 pm viduthalai பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973) பேராசிரியர் சி. இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர். ஓய்வறியாத் தமிழ் பணியாளர். இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய்மேடு என்னும் கிராமத்தில் சிங்காரவேலர்– இரத்தினம் அம்மையார் ஆகியோருக்கு மகனாக 17-11-1909 அன்று பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் பி.ஓ.எல் மற்றும் முதுகலை பட்டங்களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர். பகுத்தறிவு பேராசான்…
பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்
பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்! தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன. இந்த அளவிற்கு வேறு எந்த அறிஞரும் சிறப்பிக்கப் பெறவில்லை. அவரைப் பற்றிய 1.) இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர் 2.) குறள்நெறி பரப்பும் கொள்கை வீரர், 3.) குறள்நெறிக் காவலர், 4.) குறள்நெறிச் செம்மல் முதலிய பட்டங்கள் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் புலமையையும் திருக்குறள் பணிகளையும் தெரிவிப்பன. குறள்நெறி அறிஞர் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகளைப் பின்வரும் வகைப்பாட்டில் காணலாம். அ.) திருக்குறள்…
தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! சட்டமன்றத்தில் மாண்பமை ச.ம.உறுப்பினர் சிந்து தனி(த் தொகுதி) என்னும் சொல் குறித்துப் பேசியுள்ளார். reservation என்னும் சொல்லிற்குத் தனி எனப் பொருள் இல்லை என்றும் பேசியுள்ளார். அச்சொல்லிற்குப் பொதுவாக ஒதுக்கீடு, பதிவு எனப் பொருள்கள் உள்ளன. எனினும் தனி ஒதுக்கீடு என்று அகராதிகள் குறிப்பதைக் காணலாம். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பட்டியலின (SC), பழங்குடியின (ST) மக்கள் தங்களின் சார்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பிற இனப் போட்டியாளர்கள் இன்றித் தங்கள் இனத்தவரே போட்டியிட வேண்டும் என்பதற்காக…
செல்வாக்கும் சொல்வாக்கும் – பி.அருணாசலம்
அங்குசம், செட்டம்பர் 02, 2026, பக்கம் 03
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௯. தமிழ்நாட்டில் வடமொழி .. .. பிறமொழி – தமிழ் அகரமுதலி ஏன் தோன்றின?
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ௯. தமிழ்நாட்டில் வடமொழி – தமிழ் அகரமுதலி,ஆங்கிலம் – தமிழ் அகரமுதலி, பிறமொழி –தமிழ் அகரமுதலி ஏன் தோன்றின? தமிழ்நாட்டில் ஆரியர், ஆங்கிலேயர், பிறமொழிக்காரர் முறையே குடியேறியும், ஆட்சி புரிந்தும் வாழும்படி ஏமாளித்தமிழர்கள் விட்டுக் கொடுத்துவிட்டு வீண் காலம் போக்கியதே காரணம். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்று அயர்ந்து இருந்துவிட்டனர் அற்றைத் தமிழர். இற்றைத் தமிழர் பெரும்பாலாரும் அவ்வாறுதான் இருக்கின்றனர். ஆரியர்கள் தமிழ்நாட்டில் குடியேறி…
மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 இந்தி ஆதரவாளர்களிடையே இரு பிரிவினர் இருந்தனர்: 1) தூய இந்தி ஆதரவாளர்கள்:– தாண்டன், கோவிந்து தாசு, சம்பூர்ணானந்து, இரவிசங்கர் சுக்குலா, கே. எம். முன்சி ஆகியோர். 2) உருது கலந்த இந்துத்தானி ஆதரவாளர்கள்:- சவகர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத்து ஆகியோர். இந்தி, தேசியமொழியாவதைத் தென்னிந்தியாவைச் சேர்ந்த திருவள்ளூர்…
அளவுக்குமீறிக் கொள்ளாதே! – சங்கப்புலவர்கள்பொன்னுரை 35: இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை 34. ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! – தொடர்ச்சி) சங்கப்புலவர்கள்பொன்னுரை– 35:அளவுக்குமீறிக் கொள்ளாதே! ”மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்பொன்னுங் கொள்ளார் மன்னர்” நற்றிணை – 226. 1-3; பாலை ஆசிரியர்: கணி புன்குன்றனார். கணியன் பூங்குன்றார் என்று சிலர் கூறினாலும் பலர் அதனை மறுக்கின்றனர். சொற்பொருள் மரம்=மருந்து மரம்; சா=சாகும்படி, அழியும் படி; மருந்தும்=மரத்திலுள்ள மருத்துவப்பயன்தரும் இலை காய் முதலியன; உரம்=மன வலிமை; சா=அழியும்படி; செய்யார்=மேற்கொள்ளார்; உயர்தவம்=கடுமையான தவம்; வளம்=நாட்டு வளமை; கெட=கெடுமாறு, குறையுமாறு,…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 34: ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! : இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை 34. ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப் பிறர் உவமம் ஆகா! … பாடற் தலைப்பு: நிறம்திகழ் பாசிழை பதிற்றுப்பத்து 73 ; 21 அடி கொண்ட பாடலில் முதல் 3 அடிகள் பாடிய புலவர் – அரிசில் கிழார் பாடப்பட்ட சேரன் – பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. காலத்துப் பாடல் துறை:…
முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!
முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்! நேற்று ஞாயிறு 10.05.2026 காலை 10.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.சோ.விசய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்வு நடந்ததை அனைவரும் அறிவோம். நேற்று அதே நேரம் அவருக்குத் தமிழ்காப்புக் கழகம் சார்பில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதுவே முதல் பாராட்டுக் கூட்டம். அதுவும் தமிழ் அமைப்பு நடத்திய பாராட்டுக் கூட்டம். தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் இக்கூட்டம் நிகழ்ந்தது. தேர்தல் கணிப்புகளையும் திணிப்புகளையும் பொய்யாக்கித் தன்னம்பிக்கையால்…
கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்
சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1. இன்றைய ஆய்விற்குரிய நூல், ‘சிவகங்கை இராமச்சந்திரனார்‘ என்பதாகும். கொடைக்கானல் காந்தியால் எழுதப் பெற்றது இந்நூல். இந்நூல் வரலாற்றின் வாயில், அரசியல் வரலாறு, தலைவர்களின் தலைவர், கொள்கை குணம் கோட்பாடு என்னும் 4 பிரிவுகளில் மொத்தம் 43 தலைப்புகளில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் எழுவரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரையான சூரியவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிவகங்கைஇராமச்சந்திரனார் பற்றிய கருத்தினக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது கட்டுரை தலைமுறை வரலாறு; மூன்றாவது கட்டுரை வரலாற்றின் வரலாறு; நான்காம் கட்டுரை வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்; ஐந்தாவது…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௬. தமிழ்நாடும் தமிழும்
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ௬. தமிழ்நாடும் தமிழும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை நனியும் நலிவுற்றுளது என்பது தெளிவு. ஏனெனில், தமிழ்நாட்டிலுள்ள மக்களின் பெயர்கள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள கடைகளின் பெயர்களும், தொழில் நிறுவனங்களின் பெயர்களும் தமிழாயில்லை. தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கடவுளரின் பெயர்களும் தமிழன்று. கோவில் வழிபாடுகளும் தமிழில் நடத்தப்படவில்லை. இலங்கையிலும், மலேசியாவிலும், சிங்கையிலும் தமிழ் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் தமிழுக்குத்…
