கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்

சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1. இன்றைய ஆய்விற்குரிய நூல், ‘சிவகங்கை இராமச்சந்திரனார்‘ என்பதாகும். கொடைக்கானல் காந்தியால் எழுதப் பெற்றது இந்நூல். இந்நூல் வரலாற்றின் வாயில், அரசியல் வரலாறு, தலைவர்களின் தலைவர், கொள்கை குணம் கோட்பாடு என்னும் 4 பிரிவுகளில் மொத்தம் 43 தலைப்புகளில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் எழுவரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரையான சூரியவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிவகங்கைஇராமச்சந்திரனார் பற்றிய கருத்தினக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது கட்டுரை தலைமுறை வரலாறு; மூன்றாவது கட்டுரை வரலாற்றின் வரலாறு; நான்காம் கட்டுரை வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்; ஐந்தாவது…

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: த.வெ.க.தலைவர் விசய்க்குப் பாராட்டரங்கம்

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௮௰௩ – 383) தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் த.வெ.க.தலைவர் விசய்க்குப் பாராட்டரங்கம் நாள் : சித்திரை 27, 2057 ஞாயிறு 10.05.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமையும் நூலாய்வும்:  இலக்குவனார் திருவள்ளுவன்        பாராட்டுரையும் பாராட்டுப் பாவும் முனைவர் புத்தேரி தானப்பன்…

இணைய உரை 07, தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி, 09052026

தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லிக் கிளை இணைய அரங்கு உரை 07 நாள்: சித்திரை 26, 2057 / 09.05.2026 இணைப்பிற்கு : https://meet.google.com/htz-tfer-zpz தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை: முனைவர் அறவேந்தரன், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நெறியாள்கை : புத்தேரி தானப்பன் பிற அழைப்பிதழில் உள்ளவாறு

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 24. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1:  இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23. எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 24. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1 கோப்புகளில் உள்ளவற்றைப் பார்ப்பதற்குச் சிறிது இடைவெளிவிட்டு இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் குறித்துப் பார்ப்போம். தமிழைக் கொலை செய்வதில் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. தமிழ் ஆர்வம் மிக்க ஊடகத்தினர் இருந்தாலும் பெரும்பான்மையாகக் கொலைகாரர்களே உள்ளனர். இவர்களுக்கெல்லாம் கடுந்தண்டனை விதித்தால்தான் தமிழ் வாழும். எனவே, இனியாவது ஊடகத்தினர்  கொலைகாரர்களாக இல்லாமல் தமிழை வாழ வைப்பவர்களாக…

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 : தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் : தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 இந்தி எதிர்ப்புப்போராட்டங்களை அறியும் நாம் அது வந்த வழியான அரசியல் யாப்பு நிலைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவை குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம். அரசமைப்பு அவைக்கான முதல் கோரிக்கை தன்னாட்சிக்கட்சியால் (Swaraj Party) 03.05.1934 அன்று எழுப்பப்பட்டது. இது வெள்ளைத்தாள் முன்மொழிவுகளை மறுத்தது. இஃது இந்திய அரசு சட்டம் 1935 இல் இணைக்கப்பட்டது. அரசு…

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : இலக்குவனார் திருவள்ளுவன்

(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : தொடர்ச்சி) 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 ஈ.வெ.இரா.உரை, நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்தது 11ஆம் கட்டுரை. இநதி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல்முறையாகப் பெண்கள் கைது என்பது குறித்து 12 ஆம் கட்டுரை கூறுகிறது. எண்மர் கைது குறித்தது 13 ஆம் கட்டுரை. நவம்பர் 14 அன்று ஐந்து பெண்கள் கைதானதற்குப் பிறகு நவம்பர் 21 அன்று எட்டுத்தாய்மார்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப் பட்டனர். பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில்…

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் + ஆளுமையர் உரை 159 & 160 ; நூலரங்கம்

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௪௰௪ – 644) தமிழே விழி!           தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 159 & 160 ; நூலரங்கம் நாள்: சித்திரை 13, 2057 ஞாயிறு 26.04.2026 காலை 10.00     கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,…

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : தொடர்ச்சி) 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு : 3 இந்தி எதிர்ப்பு நிதிக்கு இசுலாமியப்பெண்களும் நிதி வழங்கியமை, மே்டையைச் சரிசமமாகப் பகிர்ந்த பெண்கள், பெண்கள் திரளாகப் பங்கேற்ற ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஊர்வலம், எல்லா வடிவத்திலும் எல்லா இடத்திலும் பெண்களின் இந்தி எதிர்ப்பு, முதலியவைபற்றியும் இக்கட்டுரையில் விவரித்துள்ளார். இக்காலத்தில் பெண்கள் ஒதுக்கீட்டில் இடம் பெற்ற பெண்களின் பின்னால் ஒளிந்து கொண்டு ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால், அப்பொழுது பெண்களே இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளனர்…

இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 6: கல்வியகங்கள் தொண்டு நிறுவனங்களாகச் செயற்படுக! – இலக்குவனார்திருவள்ளுவன்

(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 5: கல்வி முறையை மாற்றுக!: தொடர்ச்சி) திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும்  நிறைவுரை 6 கல்வியகங்கள் தொண்டு நிறுவனங்களாகச் செயற்படுக!   கல்வியகங்கள் வணிக நிறுவனங்களாக இல்லாமல் தொண்டு நிறுவனங்களாகச் செயல்படும் பொழுதுதான் இவர்களிடையே நல்லுறவு அமையும்; கல்வியிலும் மாணாக்கர்கள் சிறப்பர். ஆசிரியர்கள் பருவத்தேர்வு முடிவுகளின் பொழுது மட்டும் பெற்றோரை அழைக்காமல், சுழற்சி முறையில் தொடக்கக் காலத்திலிருந்தே பெற்றோரை வரவழைத்து மாணாக்கர் கல்விநிலை குறித்துக் கலந்து பேசி அதற்கேற்ப இரு தரப்பாரும் தங்களை…

இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 5: கல்வி முறையை மாற்றுக! : இலக்குவனார் திருவள்ளுவன்

(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 4 : தமிழ்வழிப் பயில்வோருக்கு முதலுரிமை : தொடர்ச்சி) திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும்  நிறைவுரை 5 கல்வி முறையை மாற்றுக! தமிழ் வழியில் பயில்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பின் அவ்வாறு பயில்பவர்கள்தாம் மிகுதியாக இருப்பர் என்பதில் ஐயமில்லை. அறிவு வளர்ச்சிக்காகக் கல்வி என்றில்லாமல் வேலைக்காகப் படிப்பு என்று மாறி விட்ட சூழலில் வேலைவாய்ப்பு இருப்பின் மட்டுமே தமிழ் வழியில் பயில்வர் என்பதை உணர வேண்டும். எனவே இப்போதைய அரசாவது  தமிழில் படித்தவர்களுக்கும் தமிழைப் படித்தவர்களுக்கும் 80%வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.வேலைப் பாதுகாப்பு இருப்பின் அனைவரும் தமிழ்வழிக்கல்வியையே…

இணைய உரை 6+ தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி+11.04.26

தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி இணைய உரை 06 பங்குனி 28, 2057 ஞாயிறு காலை 10.00 + 22.04.2026 சிறப்புரை: முனைவர் சாந்தினிபி முன்னை வரலாற்றுப் பேராசிரியர் அலிகார் பல்கைலக்கழகம் தலைப்பு : மூன்றாம் உலகப்போர் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் பிற நிகழ்வுகள் அழைப்பிதழில் உள்ளவாறு முனைவர் புத்தேரி தானப்பன் தலைவர்

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10: தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே!  : இலக்குவனார்திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10 தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே! “தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும்  ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும் பட்டியலிலும், ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக’ என்னும் பட்டியலிலும் பருமா/மியன்மா  அல்லது இரங்கூன்/யாங்கூன் இடம் பெறவில்லை. ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் தலைப்பில் இலங்கையிலும் ஈழத்திலும் உள்ள கொழும்பு, யாழ்ப்பாணம் முதலான…

1 2 20