சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 716-721
(தமிழ்ச்சொல்லாக்கம் 709- 715 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 716-721 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 716. Cells – அணுக்கூடுகள் எல்லா உயிரினுடம்புகளும் மிக நுண்ணிய சிற்றறை அல்லது அணுக்கூடுகளால் (Cells) ஆக்கப்பட்டுள்ளன. அவை வொவ்வொன்றும் ஒரு வித்துடன் கூடிய முதற்பிண்டமாக இருக்கின்றது. மேற்படி நூல் : முன்னுரை பக்கம் – 4…
தோழர் தியாகு எழுதுகிறார் 115 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (1)
(தோழர் தியாகு எழுதுகிறார் 114: முத்துக்குமார் குறித்த கலைவேலு கட்டுரை – தொடர்ச்சி) ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (1) 1. எழுபத்தைந்து ஆண்டு முன்பு 1948 சனவரி 30 மாலை 5.17 – தில்லியில் பிருலா மாளிகையில் அனைத்து மத வழிபாட்டுக் கூட்டத்துக்காகப் புல்வெளியில் நடந்து வந்து கொண்டிருந்த 78 வயது முதியவர் காந்தியாரை இந்துமத வெறியன் நாதுராம் கோட்சே மிக அருகிலிருந்து சுட்டுக் கொலை செய்தான். ஆர்எசுஎசு இந்துத்துவக் கோட்பாடுகளால் கொலை வெறி கொண்டவன் கோட்சே என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. காந்தி கொலை வழக்கில் கோட்சேக்கும் நாராயண் ஆபுதேக்கும் தூக்குத் தண்டனை…
என் சரித்திரம் 38: என் கல்யாணம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 37: சிதம்பர உடையார் – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 22என் கல்யாணம் கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் மாளாபுரத்தில் நிகழ்ந்தன. பந்து சனங்கள் பல ஊர்களிலிருந்து வந்து கூடினர். இரெயில் வண்டியின் வேகம், வண்டியின் வேகம் முதலியவற்றைக் கண்டறியாத அந்நாட்களில் கல்யாண ஏற்பாடு விரைவில் நடைபெறாது; மெல்ல மெல்ல நடைபெறும். கல்யாணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே வேண்டிய காரியங்கள் ஆரம்பமாகிவிடும். ஒரு மாதத்துக்கு மேல் குடும்பம் கல்யாண முயற்சியில் ஈடுபட்டிருக்கும். இன்றும் அன்றும் இக்காலத்திலோ எல்லாம் வேகம், முதல்நாள் கல்யாணம்…
தோழர் தியாகு எழுதுகிறார் 114: முத்துக்குமார் குறித்த கலைவேலு கட்டுரை
(தோழர் தியாகு எழுதுகிறார் 113: நிலத்தில் அமிழும் நிலம் தொடர்ச்சி) முத்துக்குமார் மரண சாசனம் நமக்குக் கைகாட்டி; கலங்கரை விளக்கம்! தமிழ்நாட்டின் அரசியலை ஒரே ஓர் உயிர், ஒரே ஒரு நொடியில் முற்றிலும் மடைமாற்றி விட்டது. தமிழரின் நலனைக் காவு கொடுக்கும் தன்னலப் பதவிவெறி அரசியல் பின்னங்கால் பிடறியில் அடிவிழ ஓட்டம் பிடித்து விட்டது. வாக்கு வேட்டை அரசியல் அம்மணப்பட்டு அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறது. தமிழ் மக்களை விடுவிக்கும் தமிழ்த் தேசிய சமூக நீதி அரசியல் வீறு கொண்டு எழுகிறது. அது சுட்டெரிக்கும் சுடு நெருப்பாய்…
தோழர் தியாகு எழுதுகிறார் 113: நிலத்தில் அமிழும் நிலம் 
(தோழர் தியாகு எழுதுகிறார் 112: சனவரி 26 – தொடர்ச்சி தோழர் தியாகு எழுதுகிறார் சோசிமத்து: நிலத்தில் அமிழும் நிலம் விழுங்கப்படுமுன் விழித்துக் கொள்வோமா? “இயற்கையின் மீது நம் மாந்தக் குலம் ஈட்டிய வெற்றிகளைச் சொல்லி நம்மை நாம் பாராட்டிக்கொள்ள வேண்டா. ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிக்குப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலில் நாம் எதிர்பார்த்த வெற்றிகளைக் கொண்டுவருவது மெய்தான். ஆனால் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் அது அறவே வேறான எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் முதலில் கிடைத்ததைப் பல நேரம்…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 36 – தேவும் தலமும்
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):35 – ஆட்பெயரும் ஊர்ப்பெயரும் தொடர்ச்சி) 5. தேவும் தலமும் தமிழ் நாடு, என்றும் தெய்வ மணங்கமழும் திருநாடு. பல பழமையான ஊர்களில் இன்றும் ஆண்டவன் கோயிலே நடுநாயகமாக அமைந்திருக்கின்றது. அப்பெருமானது தேர் ஓடும் திரு வீதிகளே சிறந்த தெருக்களாகத் திகழ்கின்றன. இத்தகைய பண்பு வாய்ந்த நாட்டில் பல ஊர்கள் இறைவனோடு தொடர்புற்று விளங்குதல் இயல்பேயன்றோ? பழங்காலத்தில் ஆண்டவனை மரங்களிலும் சோலைகளிலும் தமிழ் நாட்டார் வழிபட்டார்கள். ஈசன் கல்லாலின் கீழிருந்து நல்லார் நால்வர்க்கு உறுதிப் பொருளை உணர்த்திய…
தோழர் தியாகு எழுதுகிறார் 112: சனவரி 26
(தோழர் தியாகு எழுதுகிறார் 111: கரிகாலனின் அரும்பணி- தொடர்ச்சி) சனவரி 26 இன்று 74ஆம் இந்தியக் குடியரசு நாள். முடியரசு ஆட்சிமுறையோடு ஒப்புநோக்கின் குடியரசு ஆட்சிமுறை என்பது வரலாற்று நோக்கில் ஒருபெரும் முன்னேற்றப் பாய்ச்சல் என்பதில் ஐயமில்லை. அடிமையுடைமைக் குமுகத்திலேயே குடியரசுக் கொள்கையைக் கடைப்பிடித்த பெருமை கிரேக்கத்துக்கும் உரோமாபுரிக்கும் உண்டு — அது ஆண்டைகளுக்கும் உயர்குலத்தினருக்குமான குடியரசாகவே இருந்த போதிலும். குடியரசுக் கொள்கையை அம்மக்கள் மதித்துப் போற்றினார்கள். சூலியசு சீசர் உரோமாபுரிக் குடியரசில் தனக்குக் கிடைத்த புகழில் மயங்கி தன்னை முடிமன்னனாக்கிக் கொள்ள முற்பட்ட போது அவனுடைய நெருங்கிய நண்பன்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 40 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 39 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி) பழந்தமிழ்’ – 40 பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி சில வேர்ச்சொற்களில் மூல உயிர் மாறுவதனால் சொல்வடிவம் வேறுபட்டுப் பொருள் வேறுபாட்டை அறிவிக்கும். குறில் நெடிலாகவோ, நெடில் குறிலாகவோ மாறுதலைடையும். மின் என்பது மீன் என்று ஆகியுள்ளது. காண் என்பது கண் என்று ஆகியுள்ளது. கெடு என்பது கேடு என்றும், உண் என்பது ஊண் என்றும் வந்துள்ளமை காண்க. தன்மை முன்னிலை இடப்பெயர்கள் வேற்றுமை…
தமிழ்நாடும் மொழியும் 40 : தமிழ் இலக்கண வளர்ச்சி
(தமிழ்நாடும் மொழியும் 39 : நாடகத்தமிழ்– தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 4. தமிழ் இலக்கண வளர்ச்சி தமிழ் முப்பகுப்புடையது என முன்னர்க் கண்டோம். தொன்றுதொட்டே நம் புலவர் பெருமக்கள் தமிழை மூவகைத் துறைகளில் வளம்படச் செய்துவந்திருக்கின்றனர். தமிழ் இயலிசை நாடகம் என மூவகையாக வளர்ந்து ஓங்கிச் செழித்திருக்கிறது. இனி இம் மூவகைத் தமிழ் இலக்கணங்களின் வளர்ச்சியைப் பார்ப்போம். இன்று இயற்றமிழிலே இலக்கண நூல்கள் மிகவும் பெருகி உள்ளன. இயற்றமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணமென ஐந்து வகைப்படும். எழுத்துக்கும் சொல்லுக்கும் தனி…
தோழர் தியாகு எழுதுகிறார் 111: கரிகாலனின் அரும்பணி
(தோழர் தியாகு எழுதுகிறார் 110 : புதிய அறிவாய்தங்கள் தொடர்ச்சி) கரிகாலனின் அரும்பணி நேற்று நமது செய்தி அரசியல் இணைய அரங்கில் (உ)ரூட்சு வலையொளியின் அன்பர் கரிகாலன் ‘வேங்கைவயல் இழிவு’ குறித்து விரிவாகப் பேசினார். அன்பர்களின் வினாக்களுக்கும் விடையளித்தார். ஒற்றை வீரர் படையாக அவர் ஆற்றியுள்ள பணி மகத்தானது. புறஞ்சார்ந்து புலனாய்வு செய்து உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.குடிநீரில் மலங்கலந்த கொடியவன் அல்லது கொடியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் நிலையை அவர் நெருங்கி விட்டார். ஆனால் அந்த இறுதி உண்மையை உறுதி செய்து நடவடிக்கை எடுக்க…
தோழர் தியாகு எழுதுகிறார் 110: புதிய அறிவாய்தங்கள்
(தோழர்தியாகுஎழுதுகிறார் 109 : ‘ஆளுநர்உரை’ – ஓர்ஊடுநோக்கு (3) தொடர்ச்சி) புதிய அறிவாய்தங்கள் இனிய அன்பர்களே! பெருந்தொற்றுக் காலத்தில் நான் முகநூல் இடுகைத் தொடராக எழுதிய நூல் – தமிழ்நாட்டில் திரவிட, தமிழ்த் தேசிய ஆளுமைகளிடையே வெடித்த அறிக்கைப் போரில் என் இடையீடு – ஈழம் மெய்ப்படும் – நீண்ட காலத் தாழ்வுக்குப் பின் அச்சேறி நூலாக வெளிவந்துள்ளது. பெரியாரும் தமிழ்த் தேசியமும் என்ற என்னுரைக்கு மறுப்பாகத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் எழுதிய நூல் திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? இந்நூலில் அவர் தேசிய இனச் சிக்கல்…
சான்றோர் பெருந்தகை மு.வ. – 3/3 : – முனைவர் சி.பாலசுப்பிரமணியன் 
(சான்றோர் பெருந்தகை மு.வ. – 2/3 – தொடர்ச்சி) 10. சான்றோர் பெருந்தகை மு.வ. 3/3 “பறவைகள் அன்பாக வாழ்கின்றன. அவற்றுக்கு வாய் இல்லை; பேச்சு இல்லை. பிணக்கும் இல்லை. மக்கள் வாழ்க்கையில் வாய்தான் வன்பும் துன்பும் செய்கின்றது. பேச்சு வள்ர்கின்றது. பிணக்கும் முற்று கின்றது; அன்பான வாழ்க்கையிலும் திடீரென்று அன்பு முறிகின்றது.” “மக்களுக்குள் சாதி இரண்டு, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சாதி. எப்படியாவது வாழ வேண்டும் என்ற சாதி, இந்தச் சாதிகளுக்குள் கலப்பு மணம் கூடாது.” “வேப்பமரம் அத்தி ஆவதில்லை. மூங்கில்…