தமிழ்ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் நீடு வாழ்க!

நலமும் வளமும் நிறைந்துஉரிமை ஈழத்தை உயர்த்திநூறாண்டு கடந்தும் வாழியவே! தமிழ்ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பொன்மொழிகள் ஐந்துநாம் உணர்ந்து பின்பற்ற வெளியிடப்படுகிறது: 1. பாதையைத் தேடாதே! அதை உருவாக்கு! 2. நான் பேச்சுக்குத் தருவதுகுறைந்தளவு முக்கியத்துவமே.செயலால் வளர்ந்த பின்புதான்நாம் பேசத் தொடங்க வேண்டும்! 3. ஒருவர் சத்தியத்திற்காக இறக்க வேண்டும்என்பதில் உறுதியாக இருந்தால்,ஒரு சாதாரண மனிதனால் கூடவரலாற்றை உருவாக்க முடியும். 4. ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாகச் சரித்திரம் இல்லை. 5. ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.ஆனால்,…

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 – நாகலட்சுமி சண்முகம்

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3  தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணல்.   வணக்கம்! அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டதற்கு ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துகள்! அந்த விருது குறித்துச் செய்திகளைச் சொல்லுங்களேன்! வணக்கம்! பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆக்கும் படைப்பாளிகளுக்கான இவ்விருது ஆண்டுதோறும் ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் செய்திக்குறிப்பைப் பார்த்துவிட்டு இதற்காக…

புத்தர் தென்தமிழ் தெரிந்தவரே!

கௌதமபுத்தரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கதை கோப்புடன் கூறும் இலலிதாவித்தாரம் என்னும் வடமொழி வரலாற்று நூலொன்றினுள் கௌதமபுத்தர் தம் இளமையில் கற்றறிந்த மொழிகளுள் திராவிடம் அல்லது தமிழ் எனப்படும் மொழியும் ஒன்றெனக் குறிக்கப்படுகிறது. இந்நூல் சீனமொழியுள் கி.பி. முதல் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதென்றும் ஆசிரியர் ஐசக்தம்பையா தாம் எழுதியுள்ள சிவனடியாரின் அருட்பாக்கள் என்னும் ஆங்கில நூலில் குறிக்கின்றார். –          குறள்நெறி: ஆனி 32, 1995  / 15.07.64