குறட் கடலிற் சில துளிகள் 33. இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர்: இலக்குவனார்திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? –தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 33 இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர் இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.    (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல்,  எண்: ௪௱௪௰௭ – 447) கடிந்துரைத்துக் கூறித் திருத்தும் தன்மையுடைய பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்? பதவுரை இடிக்கும் = கடிந்துரைத்து அறிவுரை கூறும்;  துணையாரை=துணையாக இருந்து உதவி; ஆள்வாரை…

குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? – இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 31 – அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல் (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல்,  எண்: ௪௱௪௰௬ – 446) தக்கார்- அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார்; ஒழுகுதல்-அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல்; வல்லானை-திறமையுடையவனை; செற்றார்-பகைவர்; செய-செய்ய; கிடந்தது-கூடியது; இல்-இல்லை. ‘தான்ஒழுக வல்லானை’ என்றதற்குப் பரிமேலழகர் வழியில் பெரியார் சிந்தனை…

நாலடி நல்கும் நன்னெறி 14:  நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 13:  நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 14 : நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர் நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் – பரப்பக் கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக் கடுவினைய ராகியார்ச் சார்ந்து. (நாலடியார் பாடல் எண் 124) பதவுரை: அழல் – நெருப்பு, தீக்கொழுந்து, வெப்பம்; நெய்போல்வ தூஉம் – நெய்போன்ற தன்மை கொண்ட பொருளும்; உயர்வு சிறப்பும்மை நெய்யின் தன்மையையும், புண்களை யாற்றும்…

தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 142&143 : 21.09.2025

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411) தமிழே விழி!                                                                தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 142 & 143; நூலரங்கம் புரட்டாசி 05, 2056 ஞாயிறு 21.09.2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர்…

தமிழ்க் காப்புக் கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 140 & 141; நூலரங்கம்-24.08.25

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (திருவள்ளுவர், திருக்கறள், ௪௱௰௫ – 415) தமிழே விழி!                                                                தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 140 & 141; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்”  – ஆளுமையர்கள் ‘செந்தமிழ்ச் செம்மல்’…

குறள் கடலில் சில துளிகள் 31 – அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 30 – பெரியாரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 31 அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.   (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், எண் ௪௱௪௰௫ – 445) பதவுரை: சூழ்வார்-சூழ்ந்து இருப்பவர்; கண்-விழி; ஆக-ஆகும்படி; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்; மன்னவன்-வேந்தன்; ஆட்சியாளர்; சூழ்வாரை-பெரியாரை; சூழ்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க. அறிஞரகளே உலகின் கண்கள். எனவே, ஆட்சியாளர்கள் அவர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு இயங்க வேண்டும். சூழ்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 : உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 : பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்!  “யானை வேட்டுவன் யானையும் பெறுமே;குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”               புறநானூறு 214 : 4-5 பாடியவர்: கோப்பெருஞ் சோழன்திணை: பொதுவியல்துறை: பொருண்மொழிக் காஞ்சிசொற்பொருள்: பூழ் = சிறு பறவை; காடை (ஒருவகைப் பறவை) “உயர்ந்த இலக்கு வெற்றியைத் தரும், தாழ்ந்த இலக்கு தோல்வியைத்…

நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும் கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால் செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடை யார்.  நாலடியார்  பொருட்பால் – இன்ப இயல் – நன்றியில் செல்வம் 262 அதிகாரத் தலைப்பு விளக்கம்: “நன்றியில் செல்வம்” என்றால், பிறருக்கு உதவாத, அல்லது பயனில்லாத செல்வம் என்று பொருள்.  ஒருவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், அதை அவர்…

குறள் கடலில் சில துளிகள் 30 – பெரியாரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், குறள் ௪௱௪௰௪ – 444) பதவுரை: தம்மின்-தம்மைக்காட்டிலும், தம்மைவிட; பெரியார்-பெருமையுடையவர்; தமரா-தம்மவராக, சுற்றமாக; ஒழுகுதல்-நடந்து கொள்ளல்; வன்மையுள்-வலிமையுள், வல்லமையுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை, சிறந்தது. பொழிப்புரை: நம்மினும் பெரியவரை நம்மவராக ஏற்றுப் பின்பற்றல் எல்லா வன்மையினும் சிறந்தது. ‘தம்மின் பெரியார்’ என்பதற்குத் ‘தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல்’ என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும்…

113.மனுவிலும் கீதையிலும் குறைகள் இருந்தாலும் பின்பற்ற வேண்டாவா? ++ 114.கீதை கலப்பு மணத்தை எதிர்க்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 112 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 113-114

தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை134 & 135; நூலரங்கம்

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௨ – 422)  தமிழே விழி!                                                             தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை134 & 135; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) ஆனி 08, 2056  ஞாயிறு 22.06.2025  காலை 10.00 மணி தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்…

1 2 50