குவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்

கார்த்திகை 14, 2051 / ஞாயிறு / 29.11.2020 மாலை 6.30 குவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணையகூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931கடவுக் குறி / Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்

கார்த்திகை 06, 2051 ***  11/21/2020 இரவு 8:30  கிழக்கு நேரம் அணுக்கி இணைப்பு / Zoom Link: http://tinyurl.com/fetna2020ik   வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம் குளிரடிக்கும் சங்கக்காலம் பாவலர் அறிவுமதி அன்புடையீர் வணக்கம் முழு நிலவும் கூதல் காற்றால் முகிலோடு முகம் புதைக்கும் குளிர்காலம்!   எலும்பை உருக்கும் குறிஞ்சி நிலக் குளிரதில் இதமான அனலொடு அகிலும் சந்தனமும் மணந்து வரக் குளிர் காயும் குளிர் காலம்!   வாள் போர்க்களம் கண்ட தலைவன் தலைவியின் விழிப்போர்க்களம் கண்டு…

ஓய்வில் உற்சாகம் இல்லை! – ஆற்காடு க. குமரன்

ஓய்வில் உற்சாகம் இல்லை!   கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை ஊரடங்கில் கிடைத்த ஓய்வில் உற்சாகம் இல்லை தொற்றுநோய்மியை விட வேகமாய்த் தொற்றிக் கொண்ட பயம் பற்றிக்கொண்டதில்  தலை சுற்றுகிறது!   எச்சம் கூட நஞ்சு என்று அச்சம் கொண்டோம் மிச்சமுள்ள உயிர் அற்பமாய்ப் பதறுது!   இணையத்தோடு இணைந்திருக்க இல்லங்கள் சிறந்திருக்க அக்கம்பக்கம் தொடர்பில்லை வம்பு வழக்கு ஏதும் இல்லை   அடங்கிக் கிடக்கிறோம்  முடங்கிக் கிடக்கிறோம் வதங்கி  மடிகிறோம்!   ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா…

விழியிடையில் வழிநடை தவறினேன்! – ஆற்காடு க.குமரன்

குழைந்து கிடக்கும் இடையில் மறைந்து கிடக்கும் மடிப்பில் புதைந்து கிடக்கிறேன் நான்   மூச்சு முட்டுதடி பேச்சு கெட்டதடி உச்சு கொட்டுதடி உள்வாங்கியவுன்னழகு   காற்று வீசூதடி  கண்ணில் தெரியுதடி சேலை விலகியே தேவை கூறுதடி   கைப்பிடி நழுவி கவிழ்த்தேன் கைப்பிடியிடையாலே கைப்பாவையானேன் நான்   குடம் சுமந்ததை குழவி சுமந்ததை என் மனம் சுமந்ததை அறியாயோ   இரவு உடையில் குருடாகும் விழிகள் மூடி மறைத்ததால் முறைக்குதடி  காற்று   சேலை செய்யும் சேவை காற்றால் திரைச்சீலை கண்கள் தீரும் தேவை…

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்

(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1 / 6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6   3.3.0.அகஅமைதியின் — புறஅமைதியின்       இன்றியமையாமை                  கடலில் கொந்தளிப்பும் சீற்றமும் புயற்காற்றும் நிலநடுக்க மும் ஆழிப்பேரலைகளும் இருந்தால், கப்பல்களும், படகுகளும்  தோணிகளும் காப்புடன் பயணிக்க முடியாது. கப்பல்களும், படகு களும்  தோணிகளும் கடலில் கவிழ்ந்து மூழ்கிவிடும். எண்ணில் அடங்காத உடைமை இழப்புகளும், உயிர் இழப்புகளும்  ஏற்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்லவும் முடியாது; மீன்கள் பிடிக்கவும் முடியாது; வாழ்க்கையும் தடுமாறும்; மூழ்கும்.  அவர்களது வாழ்க்கையும்…

பொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழர் திருநாளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடுவோம்! தமிழரல்லாத திராவிடர்கள் திராவிடர் திருநாளைக் கொண்டாடட்டும்!   அனைவருக்கும் தமிழர்திருநாளாம் பொங்கல் திருநாள் திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்!   தமிழர்கள் வாழுமிடமெங்கும் தன்னுரிமையுடன் வாழவும் தமிழ் அங்கெல்லாம் தலைமையாய்த் திகழவும்  அனைவரும் முயன்று வெல்வோம்!   பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௲௩௰௪ – 1034)   அகரமுதல மின்னிதழ் தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ,

உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்

சென்னை மணியம்மையார் குளிரரங்கத்தில் கார்த்திகை 01, 2050 / நவம்பர் 17 அன்று முற்பகல் உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் 110ஆவது பிறந்த நாள் பெருமங்கலநாள் விழாவும்  தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்பட்டன. இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர் இசைமணி சத்தியசீலன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். தொடர்ந்து உலகத்தமிழர் பேரவையின் தலைவர் திரு அக்னி சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், விழாவின் நோக்கங்களையும் தமிழ்ப்போராளி இலக்குவனாரின் தொண்டறங்களையும் பணிச்சிறப்புகளையும் தமிழ்காப்புப் போராட்டங்களையும் குறிப்பிட்டுத் தலைமையுரை ஆற்றினார். உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்! என்னும் தலைப்பில்…

திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்! “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு“ என்கிறார் பாரதியார். “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்கிறார் பாரதிதாசன். ஆனால், இன்றைக்கு வையகப் புகழுக்குக் காரணமான வள்ளுவரை இழிவுபடுத்திச் சிலர் தமிழ்நாட்டை நாணிக் குனிய வைக்கின்றனர். திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசுவதாலோ சாதி, சமய அடையாளங்களை அவர் மீது திணிப்பதாலோ களங்கம் திருவள்ளுவருக்கு இல்லை. ஈனச் செயல் புரிவோருக்குத்தான் இழிபிறவியர் என்ற களங்கம். ஆதலின் அத்தகையோர் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் திருந்தாவிட்டால் இத்தகையோரை…

குறள் மாநாடு நிறைவு நிகழ்ச்சி ஒளிப்படங்கள்

புது தில்லியில் ஆசியவியல் நிறுவனமும் பன்னாட்டுத் திருக்குறள் நிறுவமும் இணைந்து நடத்தியமூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019ஆகிய நாள் நடைபெற்றன. இரண்டாம் நாள் நிகழ்ந்த நிறைவு விழா ஒளிப்படங்கள். படங்களைப் பெரிதாகக் காண அழுத்தவும்.

குறள் மாநாடு இரண்டாம் நாள் அரங்கம் 2இலான அமர்வு ஒளிப்படங்கள்

புது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. ஆசியவியல் நிறுவனமும் பன்னாட்டுத் திருக்குறள் நிறுவமும் இணைந்து நடத்திய இம் மாநாட்டின்இரண்டாம் நாள் அரங்கம் 2 இல் நடைபெற்ற அமர்வின் ஒளிப்படங்கள். படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.

குறள் மாநாடு இரண்டாம் நாள் அமர்வு

புது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. தொடக்கத்தில் திருக்குறள் தொண்டு மையத்தின் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது. இரண்டாம் நாள் நடைபெற்ற அமர்வின் ஒளிப்படங்கள். படங்களைப் பெரிதாகக் காண அவற்றை அழுத்தவும்.

குறள் மாநாடு – வடபுல நாட்டிய நிகழ்ச்சி

புது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. முதல் நாள் நிறைவாகப் புது தில்லியில் உள்ள நாட்டியக் குழு ஒன்றின் நாட்டிய நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.

1 2 35