இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 28
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 27 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 28 அளவுப் பெயரும், நிறைப் பெயரும், எண்ணுப் பெயரும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இருந்துள்ளன. பனை என்னும் சொல் அளவுப் பெயராகவும், கா என்னும் சொல் நிறைப்பெயராகவும் வழங்கியுள்ளன. யாவர் என்னும் சொல் யார் என்றும், யாது என்னும் சொல் யாவது என்றும் மருவி வருவது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ள வழக்காகும். அழன், புழன் என்ற இரு சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழக்கிலிருந்தன; பின்னர் மறைந்துவிட்டன. பல,…
தமிழ்நாடும் மொழியும் 15; பல்லவப்பேரரசு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 14 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 15 பல்லவப் பேரரசு தொடர்ச்சி சிவசுகந்தவர்மனுக்குப் பிறகு அவன் மகன் புத்தவர்மன் பட்டம் பெற்றான். அப்புத்தவர்மனின் மனைவி சாருதேவி. அவளால் வெளியிடப்பட்ட பிராகிருதப் பட்டயம் ஒன்று கோவிலுக்குத் தானம் அளித்ததைக் குறிக்கிறது. புத்தவர்மனுக்குப் பிறகு அவன் மகன் புத்யங்குரன் பட்டமேறினான். மற்றொரு நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்று சிவசுகந்தவர்மன் பரம்பரையில் வந்த விட்டுணுகோபன் காலத்தில் நடைபெற்றது. விட்டுணுகோபன் என்னும் பல்லவ மன்னன் கி. பி. 350-இல் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு நாட்டை ஆண்டுவந்தான். அக்காலை…
தமிழ்நாடும் மொழியும் 14 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 13 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 14 5. பல்லவப் பேரரசு தோற்றம் முற்கால இந்திய வரலாற்றிலே விளங்காதன பல உள. அவற்றுள்ளே பல்லவர் தோற்றமும் ஒன்று. இது நெடு நாளைக்கு முன்பு முனைவர் வி.ஏ. சிமித்து கூறியதாகும். கோபாலன் என்பவர் இது குறித்து, 1928-ஆம் ஆண்டில் கூறியதாவது :- தற்பொழுது நமக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு பல்லவர் தோற்றத்தைப்பற்றி நாம் எதுவும் உறுதியாகக் கூறமுடியாது. முதன் முதலில் பல்லவர் என்போர் பார்த்தியன் மரபினைச் சேர்ந்தவர்கள் என்றும், மேற்கு இந்தியா வழியாக வந்து தக்கணத்தைக் கடந்து…
வால்மீகி இராமாயணத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி கிடையாது! – ஆனி 06, 2052 ஞாயிறு 20.06.2021
போற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021
45ஆம் ஆண்டு கம்பன் விழா, சென்னை
ஆடி 24-26, 2050 – 9-10,08,2019 ஏ.வி.எம்.இராசேசுவரி திருமண மண்டபம் இராதாகிருட்டிணன் சாலை, மயிலாப்பூர் சென்னை 600004 கம்பன் கழகம், சென்னை
தெய்வச் சேக்கிழார் விழா,சென்னை
சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் 27 ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா ஆடி : 09-12, 2050 / 25-28.07.2019 திரு இராமச்சந்திரா கூட்டாய்வு மையம், வாசுதேவநகர் விரிவு, திருவான்மியூர், சென்னை 600 041 முதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி: குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் வழிபாடும், நண்பகல் 12 மணிக்கு அன்னம் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும். இரண்டாம் நாளன்று /வெள்ளிக்கிழமை (சூலை 27) காலை 10 மணி:…
சிலப்பதிகாரம் – தொடர் சொற்பொழிவு கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம்
பங்குனி 12, 2050 செவ்வாய் 26.03.2019 மாலை 6.00 சிலப்பதிகாரம் – தொடர் சொற்பொழிவு தலைமை: கவிஞர் கா.வேழவேந்தன் சிறப்புரை: பேரா.மா.வயித்தியலிங்கன்
தமிழக வரலாறு 5/5 – மா.இராசமாணிக்கனார்
(தமிழக வரலாறு 4/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு 5/5 மனிதனது நேர்மையான வாழ்க்கைக்கு உரிய கொள்கைகளின் தொகுப்பே சமயம் எனப்படும். அச்சமயம் – இறையுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், காலப்போக்கில் சமயக் கதைகள் பலவற்றையும் மூடநம்பிக்கைகள் பலவற்றையும் புகுத்திச் சிலர் சமயத்தின் பேரால் வணிகம் நடத்தலாயினர். இக்கதைகளையும் நம்பிக்கைகளையும்பற்றி விரிவான முறையில் எழுதப்பட்டவையே புராணங்கள் என்பவை. ஆங்கில அறிவும் எதனையும் எண்ணிப்பார்த்துச் செய்யும் ஆற்றலும் மிகுந்த நம் நாட்டு அறிஞர் பலர், இப்போது இவற்றின் பயனின்மையை உணர்ந்து வருகின்றனர்; இவற்றிற்கும் சமயத்திற்கும் கடுகளவும் தொடர்பில்லை…
தமிழக வரலாறு 4/5 – மா.இராசமாணிக்கனார்
(தமிழக வரலாறு 3/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு 4/5 கல்வி நிலை சங்கக் காலத்தில் சாதியற்ற சமுதாயத்தில் எல்லோரும் கல்வி கற்று வந்தனர். குறமக்கள், குயத்தி, பாடினி, வளமனையைக்காத்த காவற் பெண்டு முதலிய பெண்மணிகளும், கொல்லன் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளர்களும் கவிபாடும் ஆற்றல் பெற்றுவிளங்கினர் என்பது சங்க நூல்களால் அறிகின்றோம். இத்தகைய கல்விநிலை 2000 ஆண்டுகளாக இல்லாமற் போய்விட்டது. பின் நூற்றாண்டுகளில் வடமொழிக் கல்லூரிகள் வளம் பெற்றன என்பதற்குத்தான் சான்றுகள் கிடைக்கின்றனவே தவிர, ஒரு தமிழ்க் கல்லூரியாவது இருந்தது என்பதற்குச் சான்று கிடைக்கவில்லை….
கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்
கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள் சோழ நாட்டின் எல்லை: கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1) [கிழக்கே கடல், தெற்கே (கரைகளில் மோதுமளவு நீர் நிரம்பியுள்ள) வெள்ளாறு, மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் ஏணாட்டின் வயல்கள். இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 24 காதப் பரப்பு சோழநாடாகும்.] பாண்டிய நாட்டின் எல்லை: வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார ஆண்ட…
வளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு! – புலவர் தி.வே. விசயலட்சுமி
வளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு! ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. இக்காப்பியத்தில் 66 பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. யாப்பருங்கல விருத்தி, சிலப்பதிகாரம் முதலிய சில நூல்களின் உரையில் இதிலுள்ள சில பாடல்கள் காணப்படுகின்றன. காப்பியக் காலத்தில் கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்ததை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. நவகோடி நாராயணன் என்ற வைசியன் வேறுகுலப் பெண்ணை மணந்து கொள்கிறான். அதனால் அவனைச் சார்ந்தோர் வெறுக்கவே, மனைவியை விட்டு அயல்நாடு சென்று விடுகிறான். அந்தப் பெண்ணுக்குப் பிறந்த…