அயல்நாடுநிகழ்வுகள்

வட்டுக்கோட்டை இந்து  இளைஞர்  சங்கத்தினர்  மாணவர்களுக்கு  மிதி வண்டிகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து  இளைஞர்  சங்கத்தினர்  மாணவர்களுக்கு  மிதி வண்டிகள் அன்பளிப்பு

  வட்டுக்கோட்டை இந்து இளைஞர் (வாலிபர்) சங்கத்தினால் வட்டு மத்திய கல்லூரி நவாலி அமெரிக்கன்  அறக்கட்டளைப்(மிசன்) பாடசாலை மற்றும்  யாழ்ப்பாணக்கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகளுக்குச் சங்கத் தலைமைச்செயலகத்தில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

  மேற்படி விண்ணப்பம் கடந்த காலப் போரின் போது தந்தை காணாமல் ஆக்கப்பட்ட தாய் தந்தை இருவரையும் இழந்த, தந்தையினால் கைவிடப்பட்ட மூன்று மாணவிகளுக்குப் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் சமூகநல அலுவலர் மூலமும் எமது சங்கத்திடம் கடிதம் மூலம் தெரிவிக்கபட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா நாட்டில் உள்ள செல்வி அனுசா செல்வக்குமார்  வழங்கிய  நிதியுதவியுடன்    மிதிவண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

மிதிவண்டிகள் அன்பளிப்பு  பெற்றோர்:

செல்வி  ச.அபிசாயினி – வட்டு மத்தியக் கல்லூரி

செல்வி அ.அபிநயா – நாவலி அமெரிக்கன்  அறக்கட்டளைப்(மிசன்) பாடசாலை

செல்வி ஆ. இலக்சிகா – யாழ்ப்பாணக்கல்லூரி

 மேலும் செல்வி அனுசா செல்வக்குமார் அவர்களினால் கடந்த 2016ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கலவெட்டித்திடல் நாகேசுவர வித்தியாலயாவின் 4 மாணவர்களுக்கு  மிதி வண்டிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *