இலக்குவனார் திருவள்ளுவன்கட்டுரைதிருக்குறள்

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1321-1330)-இலக்குவனார் திருவள்ளுவன்

[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1311-1320) தொடர்ச்சி]

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!

திருவள்ளுவர்

திருக்குறள்

காமத்துப்பால்

133. ஊடலுவகை

(ஊடலில் மகிழ்தல்)

  1. தவறில்லாத பொழுதும் ஊடுதல் அன்பு செலுத்தச் செய்கிறது.(1321)
  2. ஊடல் தரும் சிறு துன்பம் மகிழத்தக்கது. (1322)
  3. நிலமும் நீரும் கலந்தாற்போன்றவருடன் ஊடுதல் தேவருலகத்தினும் இன்பமாகும். (1323)
  4. தழுவு நேர ஊடலில் உள்ளம் உடைக்கும் படை உள்ளது. (1324)
  5. தவறிலில்லையாயினும் ஊடலால் தோள் பிரிகையிலும் இன்பம் உள்ளது.(1325)
  6. உண்டலில் செரித்தல் இனிது; கூடலினும் ஊடல் இனிது. (1326)
  7. ஊடலில் தோற்பவர் வெல்வதைக் கூடலில் காணலாம். (1327)
  8. நெற்றி வியர்க்கக் கூடிய இன்பத்தை மீண்டும் ஊடிப் பெறுவோமா? (1328)
  9. அவள் ஊடல் தாெடரட்டும். அதைத்தணிக்கும் என் கெஞ்சலுக்காக இரவு நீளட்டும்!(1329)
  10. ஊடல் இன்பம். அதன் பின் கூடுதல் ஊடலுக்கு இன்பம்.(1330)

நிறைவு

இலக்குவனார் திருவள்ளுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *