இலக்குவனார் திருவள்ளுவன்கட்டுரைதிருக்குறள்

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1271-1280)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1261-1270) தொடர்ச்சி)

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!

திருவள்ளுவர்

திருக்குறள்

காமத்துப்பால்

128. குறிப்பறிவுறுத்தல் (குறிப்பால் உணர்த்துதல்)

  1. நீ மறைத்தாலும் கண்கள் உணர்த்தும் செய்தி உள்ளது. (1271)
  2. கண்நிறைந்த தலைவிக்குப் பெண்மை பேரழகு. (1272)
  3. மணிமாலையில் நூல்போல் தலைவியின் அழகில் குறிப்பு உள்ளது. (1273)
  4. பூ முகையில் மணம்போல் தலைவியின் புன்னகையில் காதல் மணம் உள்ளது. (1274)
  5. தலைவியின் கள்ளப்பார்வையில் துயர் தீர்க்கும் மருந்து உள்ளது. (1275)
  6. கலத்தல் தரும் பேரின்பம், அடுத்த பிரிவை உணர்த்துகிறது. (1276)
  7. தலைவனின் பிரிவை நம்மினும் முன்னதாக வளையல்கள் உணர்ந்துள்ளன. (1277)
  8. நேற்றுதான் சென்றார் காதலர்; மேனி எழுநாள்போல் பசந்தது. (1278)
  9. பிரிவை உணர்த்தும் வளையல்களையும் தோள்களையும் உடன் செல்லும் காலடிகளையும் பார்த்துக் குறிப்பை உணர்த்தினாள். (1279)
  10. கண்ணினால் காமநோய் (கூறிப் பிரியாமைக்கு) உணர்த்தும் பெண்மை, பெண்மைக்குச் சிறப்பு. (1280)

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தாெடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *