இலக்குவனார் திருவள்ளுவன்கட்டுரைதிருக்குறள்

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1281-1290)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1271-1280) தொடர்ச்சி)

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!
திருவள்ளுவர்
திருக்குறள்
காமத்துப்பால்
129. புணர்ச்சி விதும்பல்

(தலைவனும் தலைவியும் புணர்ச்சிக்கு விரைதல்)

201. நினைத்தால் களித்தலும் கண்டால் மகிழ்தலும் கள்ளுக்கில்லை, காமத்திற்கு உண்டு.(1281)
202. பனையளவு காமத்தின்பொழுது தினையளவும் ஊடாதே.(1282)
203. தன் விருப்பப்படி நடந்தாலும் கணவனையே கண்கள் தேடுகின்றன.(1283)
204. ஊடச் சென்றேன் நெஞ்சோ கூடியது.(1284)
205. கண்ணருகே மைதீட்டி தெரியாததுபோல், கணவர் அருகே குறைகள் தெரிவதில்லை.(1285)
206. நாயகரைக் கண்டால் பிழை காணேன். காணாதபோது பிழையன்றி வேறு காணேன்.(1286)
207. இழுத்துச் செல்லுதலை அறிந்தும் வெள்ளத்தில் பாய்வதுபோல்,பயனின்மை அறிந்தும் ஊடுவது ஏன்? (1287)
208. இழிவுதந்தாலும் கள்ளால் களிப்பவர்போல், இன்னா செய்யினும் விருப்பிற்குரியது நின் மார்பு.(1288)
209. மலரினும் மெல்லிய காதலைத் துய்ப்பார் சிலரே. (1289)
210. பார்வையால் ஊடினாலும் தழுவுதலில் விரைந்தாள். (1290)

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தாெடரும்)

2 thoughts on “ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1281-1290)-இலக்குவனார் திருவள்ளுவன்

  • முருகானந்தம் சுப

    இயல்தொறும் நெஞ்சினில் ஏற்றீனீர் எளிதாய்ப்
    பயனுறும் வண்ணம் பகுத்து.

    அருமை அய்யா!

    Reply
    • இலக்குவனார் திருவள்ளுவன்Post author

      நன்றி ஐயா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *