அறிவியல்இலக்குவனார் திருவள்ளுவன்கட்டுரைகலைச்சொற்கள்

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:146-150

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:141-145 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் : 146-150

146. Aboveமேலே
மேம்பட்டு, அப்பாற்பட்டு.தலைக்குமேல், விண்ணில், முன்னிடத்தில், உயரமாக     எழுத்து வடிவில் தெரிவிக்கையில்
முன்னர்க் கூறியதைச் சுட்டிக்காட்ட மேலே சொன்ன, மேலே தெரிவித்த, மேலே கூறிய என்பன போன்று வரும்.  
வாதுரையிலோ தீர்ப்புரையிலோ முதலில் கூறியதை எடுத்துக் கூறும் பொழுது மேலே சுட்டிய/குறிப்பிட்ட எனப் பயன்படுத்துவர்.
147. Above allஎல்லாவற்றிற்கும் மேலாக  
யாவற்றையும் விட மேலாக,   யாவற்றினும் மேம்பட்ட,
பலவற்றில் ஒன்றைக் குறிப்பிடுகையிலோ ஒப்பிட்டு முறையில் தெரிவிக்கையிலோ எல்லாவற்றிலும் மேலாக இருக்கும் நிலை இருப்பின் அதனை இவ்வாறு குறிப்பிடுவர்.
148. Above averageசராசரிக்கு மேலான
இயல்புக்கு மேலான  
வழக்கமான தொகை அல்லது எண்ணிக்கை அல்லது விளைச்சல் அல்லது வருமானம் அல்லது தரம் அல்லது நிலைப்பாடு அல்லது ஒன்றின்  நிலை இயல்புக்கு மேல் இருப்பின் அல்லது சராசரிக்கு மேல் இருப்பின் இவ்வாறு குறிப்பிடுவர்.
149. Above board  களங்கமற்ற
ஐயத்திற்கிடமில்லாத           
ஒளிவு மறைவற்ற  
திட்டம் அல்லது வணிக ஒப்பந்தம் ஐயத்திற்கிடமின்றி இருக்க வேண்டுமென்றால், நேர்மையானதாகவும் யாரையும் ஏமாற்ற முயலாததாகவும் ஒளிவு மறைவின்றியும் இருக்க வேண்டும்.
150. above citedமேற்சுட்டிய
மேற்காட்டிய  
முன்னர்க் குறிக்கப்பட்டுள்ள தீர்ப்பு அல்லது தீர்ப்பின் பகுதி அல்லது பத்தி அல்லது வரியைச் சுட்டிக் காட்டுக் கூறுவது.
பார்வையாகக் குறிக்கப் பெறும் புத்தகம், ஆணை, ஆவணம் விதியையும் சுட்டிக்காட்டுவதற்காகக் கூறுவது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *