வெருளி நோய்கள் 639-643: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 634-638: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 639-643
639. கண்ணீர் வெருளி – Dakruphobia
கண்ணீர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கண்ணீர் வெருளி.
துயரத்தில் மட்டுமல்ல மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும். மனைவிகள் கண்ணீரைப் பார்த்தததும் கணவர்களுக்கு அச்சம் வருவது இயற்கைதான். மனைவி பக்கம் உண்மை இல்லாவிடடடாலும் அவர்களின் கண்ணீரைக் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர். பிள்ளைகள் கண்ணீைக் கண்டு பெற்றோர்கள் வருந்துவது, நண்பரின் கண்ணீரைக் கண்டு மற்றொரு நண்பர் வருந்துவது எனக்கண்ணீர் கண்டு தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
. 640. கண்ணோய் வெருளி – Donoculophobia
ஒருவர் நோயுற்ற தன் கண்களைப் பார்த்து அளவுகடந்து அஞ்சுவது கண்ணோய் வெருளி. இதனால் கண்ணில் நாற்றம் வருகிறது, பிறர் நெருங்க அருவருப்பு அடைவர், கண்பார்வை பாதிப்புறும் போன்ற அச்சங்கள் கொள்வர்.
கண்தொடர்பு வெருளி என்னும் பொருளில்தான் ஆங்கிலத்தில் வழங்கி வருகிறது. சென்னைக் கண் எனப்படும் கண் நோய் வந்தவர்க்குக் கண்கள் சிவந்திருக்கும். இதைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் கண்கள் சிவந்து இந்நோய் ஒட்டிக் கொள்ளும். எனவே, பிறருக்கும் கண்நோய் பரவும் என்று வரம்பு கடந்த பேரச்சம் கொள்வதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
oculus என்றால் கண் எனப் பொருள்.
00
641. கண்திறப்பு வெருளி-Optophobia
கண்களைத் திறப்பது குறித்த தேவையற்ற அச்சம் கண்திறப்பு வெருளி.
சிலருக்குப் பிணம் கண்களைத் திறந்த நிலையில் இருந்தால் அச்சம் வரும். சிலர் திகில் காட்சிகளைப் பார்த்துக் கண்களை மூடிய பின்னர் மீண்டும் திறப்பதற்கு அஞ்சுவர்.
Opto என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் பார்வை, கண் என்பன.
00
642. கதவு திறப்பி வெருளி – Karazportanoichtiriphobia
ஊர்திக் கொட்டில் கதவு திறப்பி குறித்த வரம்பற்ற பேரச்சம் கதவு திறப்பி வெருளி.
Karaz என்றால் ஊர்திக் கொட்டில் என்று பொருள்.
00
643. கதவு மணி வெருளி – Doorbellphobia
கதவு மணி குறித்த வரம்பற்ற பேரச்சம் கதவு மணி வெருளி.
அழைப்பு மணி(calling bell) என்றால் மேசையில் வைத்து உள்ள அழைப்பு மணியையும் குறிக்கும் என்பதால் வேறுபடுத்த மூலச்சொல் அடிப்படையில் கதவு மணி எனக் குறிக்கப்பெற்றுள்ளது.
அழைப்பு மணியை அலுவலர் முதலானவர்கள் அடிப்பது பணியாளர்களுக்குத் தெரியும். இப்பொழுது இதற்கு மின்னணு முறையும் வந்துள்ளது. ஆனால், கதவு மணி என்னும் பொழுது வந்திருப்பது யாரோ, தீயவரோ, திருடரோ, அழைப்பதுபோல் வந்து கொள்ளை அடிப்பவரோ, பொருள் விற்பனையாளர்களோ என்றெல்லாம் பலவகைக் கவலைகளுக்கு ஆட்பட்டு அச்சம் கொள்கின்றனர். காணொளி கதவு மணியும் இப்பொழுது வந்துள்ளது. எனினும் அறிமுகம் இல்லாதவர் தெரிந்தால் அச்சம் கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply