தோழர் தியாகு எழுதுகிறார் 117 : காவித் திகிலியம் (3)+ மகுடைத் தொற்று
(தோழர் தியாகு எழுதுகிறார் 116 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (2) தொடர்ச்சி) ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (3) ஆர்எசுஎசு அமைப்பில் 1990ஆம் ஆண்டு சேர்ந்து முனைப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவர்தான் யசுவந்து சிண்டே. ஆர்எசுஎசு ஒரு நச்சரவம் என்று சொன்னால் போதாது. அது ஒரு பத்துத்தலைப் பாம்பு போல் பல பிரிவுகள் கொண்டது. விசுவ இந்து பரிசத்து, இந்து முன்னணி, சேவா பாரதி, பசுரங்கு தள், வித்தியார்த்தி பரிசத்து என்று எத்தனையோ பிரிவுகள். ஆர்எசுஎசு-இன் அரசியல் பிரிவுதான் பாராதிய சனதா கட்சி. யசுவந்து…
(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் உரைகளும் அறிவிப்புகளும்
(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் அறிவிப்புகளும் உரைகளும் பிரிவு 2 இலக்குவனார் திருவள்ளுவன் 01- 10.12 முனைவர் உலகநாயகி 10.13 -14.47 முதுமுனைவர் முருகன் 14.48 – 19.25 முனைவர் சேயோன் 19.26- 23.48 முனைவர் அருத்தநாரீசுவரன் 23.49 – 24.53 பிரிவு 1 முனைவர் மருதநாயகம் 01.-7.39 முனைவர் பொன்னவைக்கோ 7.40 – 12.25 முனைவர் சுந்தரமூர்த்தி 12.26 – 15.19 முனைவர் பிரான்சிசு முத்து 15.20 – 21.56 முனைவர் சான் சாமுவேல் 21.57- 41.02 நேருரை தொடுப்பு :செல்வி…
பதவியாளர் நிரல் பலகையைத் தமிழிலும் வைத்த த.செ.இறையன்பிற்குப் பாராட்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்
பதவியாளர் நிரல் பலகையைத் தமிழிலும் வைத்த த.செ.இறையன்பிற்குப் பாராட்டு! “தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 22 இல்”, நாம், “தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க!” என வேண்டிக் கட்டுரை எழுதியிருந்தோம். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன். “முனைவர் மு.தமிழ்க்குடிமகன் தமிழ் ஆட்சிமொழி அமைச்சராக இருந்த பொழுது, தலைமைச் செயலர் அறை முகப்பில் பொன்னெழுத்துகளில் ஆங்கிலம் வீற்றிருக்கிறது. தலைமைச் செயலர்கள் பெயர்ப்பட்டியல் ஆங்கிலத்தில் உள்ளது எனக் குறிப்பிட்டு மடல் அனுப்பினேன். மூன்று நாளில் மதுரை வந்த அமைச்சர், “இப்பொழுது போய்ப்பாருங்கள். பொன்னெழுத்துகளில் தமிழைக் காணலாம்” என்றார். தலைமைச்…
கலைச்சொல்லும் குறளும்: பாராட்டிற்குரிய தலைமைச் செயலரின் அறிவுறுத்தலும் மலரும் பணி நினைவும்- இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல்லும் குறளும்: பாராட்டிற்குரிய தலைமைச் செயலரின் அறிவுறுத்தலும் மலரும் பணி நினைவும் தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு, முந்நாள் முன்னர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தம் வழங்கியுள்ளார். பொதுவான பணி குறித்த அறிவுரையோ கட்டளையோ அல்ல இது. தமிழ் வளர்ச்சிக்கு உதவக் கூடிய, தமிழ் உணர்வைப் பரப்பக்கூடிய நல்லுரை. அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அன்றாடம் பொருளுடன் கூடிய ஒரு திருக்குறளைக் கட்டாயம் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய…
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 43,44 & 45 : இணைய அரங்கம்: 07.05.2023
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 43,44 & 45 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: சித்திரை 24, 2054 / ஞாயிறு / 07.05.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) “தமிழும் நானும்” – உரையாளர்கள்…
தமிழ்ப்பகை பா.ச.க.வை நுழைய விடாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்பகை பா.ச.க.வை நுழைய விடாதீர்! பா.ச.க.விற்குத் தமிழ்ப்பற்று இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தவர்களிடம் தன் உண்மை முகத்தைப் பாசக காட்டியுள்ளது. இரு நாளுக்கு முன்னர் கருநாடகா மாநிலம் சிவமோகா நகரில்தான், துணிவாகத் தன் முகமூடியைக் கழற்றி எறிந்துள்ளது பா.ச.க. தமிழர்களின் வாக்குகளை வேட்டையாட வந்த பாசக நிகழ்ச்சித் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கத் தொடங்கியதும் இடையிலேயே நிறுத்தச் செய்துள்ளது. அவ்வாறு நிறுத்தச் சொன்னது பாசகவின் மூத்த தலைவரும் அத்தொகுதிச் சட்ட மன்ற உறுப்பினருமான ஈசுவரப்பாதான். அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்தவகளில் ஒருவர் தமிழ்நாட்டுப் பாசக தலைவரும்,…
அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்! உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்னும் ஒரே ஓர் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இரு வேறு அணியினர் வரும் சூனிலும், சூலையிலும் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்துகின்றனர். ஏன் இந்த முரண்போக்கு என்பதை முன்பே கேட்டிருந்தோம். பொதுவாகவே உலக மாநாடுகள் என்றாலே மகிழ்ச்சி அடைவதைவிட எரிச்சல் அடைவதே மிகுதி என்பதாக மாநாடு நடத்துநர்களின் போக்கு உள்ளது. கடந்த முறை சிக்காக்கோவில் நடைபெற்ற 10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கூடத் தமிழாராய்ச்சியாளர்களுக்குக் குறைந்த அளவு…
மத மாற்றங்களும் மத மாற்றச் சலுகைகளும் தடுக்கப்பட வேண்டியனவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
மத மாற்றங்களும் மத மாற்றச் சலுகைகளும் தடுக்கப்பட வேண்டியனவே! பொதுவாக முற்போக்கு, சமய நல்லிணக்கம், பகுத்தறிவு என்ற கருத்தாக்கங்களில் உள்ளவர்கள், மத மாற்றத்தை ஏற்பவர்களாகவும் மதம் மாறியவர்களுக்கு மத மாற்றத்தால் சலுகை இழப்பு கூடாது என்பதில் உறுதி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வாறிருக்க கிறித்துவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்னும் முதல்வரின் தனித் தீர்மானம கொணரப்பட்டுள்ள நாளன்று அதற்கு எதிராக இந்தக் கட்டுரையா என எண்ணலாம். முதல்வரின் கருத்துக்கு எதிரான கட்டுரை என எண்ணுவதை விட, மதங்களால் பண்பாடு அழிவதைத்…
ஆளுமையர் உரை 37,38 & 39 : இணைய அரங்கம் : “தமிழும் நானும்”
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 37,38 & 39 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: பங்குனி 05, 2054 ஞாயிறு 19.03.2023 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: உரைச்சுடர் செல்வி ந.காருண்யா “தமிழும்…
தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 23. ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தொடர்ச்சி) ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்! தலைப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள இந்தி மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும் என்று கருதக்கூடாது. அவர்களுக்கு இந்தியைச் செயற்படுத்துவதில் உள்ள உணர்வும் செயலும்போல் தமிழ்நாட்டு அதிகாரிகளுக்குத் தமிழ் மீது உணர்வும் செயற்பாங்கும் வேண்டும். இது குறித்துப் பின்னர்தான் வேறுவகையில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஆனால் கடந்த கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர் “அரசு ஏன் பெயர்ப்பலகைகளை வைக்க வேண்டும். அவரவரை…
தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 22 – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! (தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21 தொடர்ச்சி) தமிழ் ஆட்சிமொழிச்செயலாக்கம் குறித்து ஆட்சியாளர்களும் அதிகாரிகள் மட்டத்தினரும் ஆர்வமுடன் பேசுவதை நாம் அறிவோம். அதே நேரம் ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது வெற்றுரையாகத்தான் இன்றும் உள்ளது என்பதையும் நாம் நன்கறிவோம். இந்நிலை தொடரத் தொடரத் தமிழ் வளர்ச்சி என்பது தேய்பிறையாகத்தான் நலிகிறது. தலைமைச் செயலகத்திலிருந்து துறைத்தலைமைக்கும் சில நேர்வுகளில் பிற சார்நிலையினருக்கும் ஆங்கிலத்தில் அனுப்பி விட்டு அங்கிருந்து அடி நிலை வரை ஒவ்வொரு நிலையிலும் “தமிழில்…
ஈரோட்டில் மு.க.தாலினுக்குப் பாராட்டு! எ.ப.சாமிக்குப் பாடம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈரோட்டில் மு.க.தாலினுக்குப் பாராட்டு! எ.ப.சாமிக்குப் பாடம்! ஈரோட்டுக் கிழக்குச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் முதல்வர் மு.க.தாலினுக்குப் பிறந்த நாள் பரிசாகப் பாராட்டி அளித்ததே கோவனின் வெற்றி. ஒருவேளை குறைவான வாக்கு வேறுபாட்டில் இவர் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, முதல்வர் மு.க.தாலினின் தோல்வியாகத், தி.முக. அரசின் தோல்வியாகப் பூதாகரமாகப் படம் பிடிக்கப்படும். ஆட்சியில் குறைகளில்லாமல் இல்லை. ஆனால், மக்கள் குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.(திருவள்ளுவர், திருக்குறள் 504) என ஆராய்ந்து மு.க.தாலின் தலைமையிலான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பேராயக்கட்சி வேட்பாளர்…