இலக்குவனார் பரப்பிய உள்ளேன் ஐயா. . .! – கே.பி.அம்பிகாபதி, தினமணி கதிர்

பள்ளிகள், கல்லூரிகளில் “எஸ் சார்’ என்று மாணவர்கள் வருகைப் பதிவைத் தெரிவித்த நிலையை மாற்றிய புகழுக்குச் சொந்தக்காரர் சி.இலக்குவனார். இவர் தமிழாசிரியர்,  பேராசிரியர்,  தமிழ் ஆய்வாளர்,   மொழிப் போர் தியாகி என்று பல்வேறு பன்முகங்களைக் கொண்டவர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு கிராமத்தில் 1909-ஆம் ஆண்டு நவ. 17-இல் பிறந்த இவர்,  1973-ஆம் ஆண்டு செப். 3-இல் மறைவுற்றார்.  முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆசிரியர்.  கவிஞர் இன்குலாப்,  முனைவர் கே. காளிமுத்து, நா. காமராசன், பா. செயப்பிரகாசம், முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியன்…

தமிழ்ப்போராளி இலக்குவனார், கி.வீரமணி

தமிழ்ப்போராளி இலக்குவனார் கி.வீரமணி, தலைவர்,  திராவிடர் கழகம் நன்றி: தினத்தந்தி: 02.09.2018   தமிழ்ப் போராளி இலக்குவனார் நாளை (செப்டம்பர் 3-ந்தேதி) இலக்குவனார் நினைவு நாள். பதிவு: செட்டம்பர் 02,  2018 10:20 மு.ப. பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர். தான் படித்த படிப்பு, சம்பாத்தியம் குடும்ப வளமைக்கு மட்டுமே என்னும் கண்ணோட்டம் அவருக்கு இருந்திருந்தால் அவர் வாழ்க்கை என்பது இவ்வளவுத் தொடர் தொல்லைகளுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி இருக்காது. இலக்குவனார், தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் சிற்றூரில் சிங்காரவேலர்-இரத்தினம் அம்மையார் ஆகியோரை…

செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார்   நினைவரங்கம், சென்னை

  இ.கி.அ.(ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்றம்  இ.கி.அ.அகலிடம்(ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு) கிளை    (உயர்நீதிமன்றம் எதிரில்), சென்னை-600001    செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார்   நினைவரங்கம்           ஆவணி 19, 2049  – செவ்வாய்க்கிழமை -4-9-2018 மாலை 6-00மணி  அகலிட இ.கி.அ.(எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.)அரங்கம்  

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க!   தமிழ், தமிழர்களுக்கான கல்விமொழியாகவோ, ஆட்சிமொழியாகவோ, அலுவலக மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ, வணிக மொழியாகவோ, கலை மொழியாகவோ இல்லை என்பது இக்காலத்தில் வாழும் நம் அனைவருக்கும் இழிவு சேர்க்கும் நிலையாகும். இவை எல்லாவற்றிலும் மோசமான துயர நிலை என்பது தமிழ் தமிழர்களின் பேச்சுமொழி என்ற நிலையையும் இழந்துவருவதுதான்.   தமிழ், தமிழ்நாட்டின் மொழியாக நிலைப்பதற்குக் குறைந்தது மக்களின் பேச்சுமொழியாகவாவது இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் தமிழில் பேசுவோர் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘‘தமிழை வீட்டில் பேசுகிறோமே! எதற்குத் தமிழ்மொழிக்…

எஃகுத்தமிழர் இலக்குவனார் – பொன்.செல்வகணபதி

எஃகுத்தமிழர் இலக்குவனார்   இயற்பெயரிலேயே இலக்கு உடைய எஃகுத் தமிழர் இலக்குவனார்! அன்னைத் தமிழ்மீது ஆசை வைத்தவர் அதைக் காப்பதற்கென்றே மீசை வைத்தார்! பாவின் திறத்தாலே பைந்தமிழ் காத்தவர் பாவேந்தர்! இவரோ நாவின் திறத்தாலே நற்றமிழ் காத்த நாவேந்தர்! · * * * * * பிழைக்கத் தமிழ் படித்தோர் உண்டு தமிழ் படித்துப் பிழைப்பவரும் உண்டு! இவரோ தமிழ் தழைக்கத் தமிழ் படித்த தமிழர்! தமிழ் தழைக்கவே தலை நிமிர்ந்த தலைவர்! வேலை செய்யாமலிருக்க வேலை தேடுவோர் உண்டு! இவரோ வேலை…

தமிழ் வெற்றிக்காகப் பாடுபட்டவர் இலக்குவனார்

    பேராசிரியர் எங்குப் பணியில் சேர்ந்தாலும், அங்குச் சிறப்புத் தமிழில்தேவைக்கேற்ப இளங்கலை, முதுகலை முதலான வகுப்புகளை அறிமுகப்படுத்துவார். இதுபோல் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலையில் தமிழ் இல்லாமல் இருந்தது. அங்குத் தமிழ் வகுப்பு கொணர்ந்தது குறித்தும் தமிழுணர்வு ஊட்டியது குறித்தும் அங்குப் பணியாற்றிய முனைவர் மெ.சுந்தரம் அவர்கள் பின்வருமாறு தெரிவிக்கிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனாரின் ஆய்வுப் பண்பு): “மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபொழுது பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் முதன்முதலில் இளங்கலை வகுப்பில் (B.A.) தமிழ்ச்சிறப்பு வகுப்பைக் கொணர்ந்தார். இவருக்குமுன் மாநிலக் கல்லூரியில் இவ்வகுப்பு…

தமிழ் உரிமை காக்க இலக்குவனார் வேண்டுகோள்!

  தமிழ் உரிமை காக்கப் பெருநடைப் பயணம் மேற்கொள்வது குறித்த இலக்குவனார் வேண்டுகோள்! கல்வித்துறையிலும் ஆட்சி, நீதி, கலைத் துறைகளிலும் தமிழ்உரிமையை நிலைநாட்டும் நல்லநோக்கத்துடன், அண்மையில் தமிழ் உரிமைப் பெருநடைச் செலவொன்றை மேற்கொள்ள இருக்கின்றோம். கல்லூரிகளில் உடனே தமிழைப் பாட மொழியாக ஆக்கவேண்டியதின் இன்றியமை யாமையை மக்களிடையே விளக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்க ளிடையே தமிழ்மூலம் படிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் பிறமொழிகள்மூலம் படிப்ப தனால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழைப் பாடமொழியாகக் கொண்டு படிக்க வருவோர் தொகையை மிகுதிப்படுத்த வேண்டும். உயர்நிலைப்…