சொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) – இலக்குவனார் திருவள்ளுவன்

சொல் விளக்கம்:  முன்னுரையும் முற்காட்சியும் (preface &  preview) நண்பர் வேந்தன் அரசு, மடலாடல் குழு ஒன்றில், “preface, preview இவ்விரண்டுக்குமே முகவுரை எனச் சொல்லலாமா?” கேட்டிருந்தார். அவ்வாறு ஒரே சொல்லைக் குறிப்பிட்டால் தவறில்லை. பொதுவாக எந்தச் சொல்லும் அச்சொல் பயன்படும் இடத்திற்கு ஏற்பவே பொருள் கொள்ளும்.  ஒரே பொருள் தரக்கூடிய சொற்களையும் நாம் விரும்புவதற்கேற்பப் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. preface என்பதற்கு, அணிந்துரை சிறப்புப் பாயிரம் தந்துரை தலைவாசகம் நூன்முகம் பதிகம் பாயிரம் பீடிகை புறவுரை புனைந்துரை பெய்துரை பொதுப்பாயிரம் முகவணை முகவுரை…

திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 தொடர்ச்சி) பூ, காய், கனி கலைச்சொற்கள் மணமலி பூவீ மலர்போ து அலராம் துணர் மஞ்சரிகொத்துத் தொத்தோடு இணராம் நலம்சேர் குலைதாறு வல்வரியாகும் பலம்காய் கனியாம் பழம்  என்கிறது உரிச்சொல் நிகண்டு (பா. 94). அஃதாவது மலரானது பூ, வீ, போது. அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும் குலையானது தாறு, வல்லரி என்றும் பழமானது பலம், காய், கனி என்றும் பெயர் பெறும். திருவள்ளுவர், காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, மாலை…

வலைமச் சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(வலைமச் சொற்கள் 2 தொடர்ச்சி) 3 ஆ.) பொதியம் -Packet பாக்கெட்டு(packet) என்பது தமிழில் இடத்திற்கேற்றவாறு, பொட்டலம், பொதி, பொட்டணம், சிப்பம், சிறுபொதியம் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகின்றது. இங்கே தரவுகளைப்  பொதிந்து வைப்பதைக் குறிப்பதால் பொதியம் எனலாம். பொதியம் – Packet பொதிய இழப்பும் மீளனுப்புகையும் – Packet Loss And Retransmission மீ விரைவு புவிஇணைப்பு பொதிய அணுக்கம்/ மீ.வி.பு.பொ.அ. – High-Speed Down-link Packet Access / HSDPA   இ.) ஆவளி – Sequence  array, order, queue, row,…

திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 தொடர்ச்சி) 2 அரணறை – safety room   ‘அரண்’ எனத் திருக்குறளில் தனி அதிகாரமே(எண் 75) உள்ளது. இவ்வதிகாரத்திலுள்ள ஒவ்வொரு குறளிலும் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளதுபோல், பிற அதிகாரங்களிலும் 4 இடங்களில் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் ‘அரண்’ 31 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது; ‘அரணம்’ என்பது 13 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. படைத்துறையில் இடம் பெற்றுள்ள முதன்மையான கலைச்சொற்களில் ஒன்று அரண். அரண்சூழ்ந்த மனையையே அரண்மனை என்றனர். கரூவலங்களில் உள்ள காப்பு அறையை அரணறை –…

திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

1   இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மையன சங்க இலக்கியச் சொற்கள் அல்லது சங்க இலக்கியச் சொற்களின் மறுவடிவங்களாகத்தான் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கியக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்பட வேண்டிய திருக்குறளில் உள்ள கலைச்சொற்கள் பலவும் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன; பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக்காலமாக இருக்கக்கூடிய சொற்கள் (இவற்றிற்கு ஆதாரம் கிடையாது.); புதிய சொற்கள் என மூவகைப்படும். இங்கு நாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள…

கலைச்சொல் தெளிவோம் 211. தண்கலன்- Refrigerator : இலக்குவனார் திருவள்ளுவன்

Evaporator Coolant (absorbs heat from air inside) Air chamber Condensor Coolant (gives heat to surrounding air) Compressor pressurizes coolant Electric pump Electric wires to thermostat Refrigerator thermostat(temperature control) Flexible air chamber(changes in size as air inside warms or cools Temperature control knob Electric wires to pump and compressor – – இலக்குவனார் திருவள்ளுவன்  

கலைச்சொல் தெளிவோம் ! 208. படப்பொறி – Camera : இலக்குவனார் திருவள்ளுவன்

  Film winder Light into eye Viewfinder eyepiece lens Film re-winder Film Film spool Pentaprism (five-sided prism) Light-proof casing Swinging mirror Light from scene Lenses move to and fro to focus scene Aperture (diaphragm controls amount of light entering camera) – – இலக்குவனார் திருவள்ளுவன்  

1 2 11