சட்டச் சொற்கள் விளக்கம்  211-215 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம்  206-210 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  211-215 211.absolute justice முழுமை நீதி   முழுமையான நீதி என்பதை ஒரு கோட்பாடாகக் கருதுகின்றனர். குறிப்பாகக் கடற்படையினர், கடல்சார் சோட்பாட்டின் மையக் கொள்கையாகக் கருதுகின்றனர்.   முழுமை நீதி ஆதரவாளர்கள் அனைத்துத் தீய, சட்டஎதிர் செயல்களை ஒழிப்பதையும் அரசாங்கத்தின் சட்டங்களை மீறுபவர்கள் மீது வழக்கு தொடுப்பதையும் மிக உயர்ந்த முன்னுரிமையாகக் கருதுகிறார்கள்.   “எந்த இடர்ப்பாடு குறைபாடு அல்லது ஊறுபாடுகளினால் ஏற்படும் தீங்கிலிருந்து காப்பாற்றும் முழுமை நீதி என்று…

சட்டச் சொற்கள் விளக்கம்  206-210 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம்  201-205 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  206-210 206. absolute duty   பூரணத் தீர்வை வரைக்கட்டு(நிபந்தனை) அற்ற தீர்வை   முழுமைக் கடமை     உடனிணைந்த உரிமைகளற்ற கடமை   வணிகவியலில் தீர்வை வரியைக் குறிக்கிறது.   நேரம், முயற்சி, செலவு ஆகியவற்றைப்பொருட்படுத்தாமல்  தொடர்புடைய ஒழுங்குமுறைக்கேற்பக் கடமையாற்றுதல்.   அ.) பிற தீயரைத்தவிர்த்தல், ஆ.) மக்களைச் சமமாக மதித்தல், இ.) பிறரிடம் உள்ள நல்லனவற்றை ஊக்குவித்தல் ஆகிய முந்நிலைப்பாடும் உள்ளவற்றை முழுமையான கடமை என்பார்கள்….

சட்டச் சொற்கள் விளக்கம்  201-205 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 196 – 200 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  201-205 201. absolute conveyance   முழுமை உரித்து மாற்றம்   முற்றுரிமை மாற்றம்‌   முழு உடைமை மாற்றம்   உரித்து என்றால் உரிமை உடையது எனப்பொருள். “பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப” என்கிறார் தொல்காப்பியர்(தொல்காப்பியம் 955).   202. absolute decree முழுமைத் தீர்ப்பாணை இறுதியாக வழங்கப்பெறும் தீர்ப்பாணையே முழுமையான தீர்ப்பாணை யாகும்.   மணவிலக்கு வழக்கில், மணவிலக்கு நடைமுறையை முடிக்கும்…

சட்டச் சொற்கள் விளக்கம் 191-195: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 186-190: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  191-195 191. absentee           வராதவர், இல்லாதவர்   வசிப்பிடம் அல்லது பணியிடம் முதலான வழக்கமாகக் காணப்படும் இடத்தில் இல்லாதவர்.             காணாமல் போன ஒருவர் அல்லது எங்கே இருக்கிறார் என அறியப்படாதவர் வருகை தராதவராகக் கருதப்படுகிறார். சமூகம் (Presence) அளிக்காதவர் எனக் குறிப்பிட்டு வந்தனர். 192. Absentee land lord   வராத /செல்லா நிலக்கிழார்;   நிலத்தில் தங்கா நிலக்கிழார், வருகைதரா நிலக்கிழார்,…

சட்டச் சொற்கள் விளக்கம் 186-190: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 181-185: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  186-190 186. Absence, leave of   வாராததிற்கான அனுமதி   வராமைக்கான இசைவு   வர வேண்டிய நேர்வில் உரியவர்களிடம் முன் இசைவு பெற்று வராமையைக் குறிப்பிடுகிறது. 187. Absent இராத வந்திராத, இல்லாத   காண்க: absence   Present என்பது நேர்வந்திருத்தல்/நேர் வருகை எனவே, Absent   என்பது நேர் வராமை. 188. Absent minded கவனக்குறைவான   மறதியான நினைவற்ற 189. Absent on leave விடுப்பில்…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 176-180

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 171-175 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 176-180 176. Absconding person தலைமறைவாயிருப்பவர்   காண்க: Absconder — தலைமறைவானவர் 177. absconding to avoid summons அழைப்பாணை தவிர்ப்புத் தலைமறைவு   அழைப்பாணையைத் தவிர்க்க தலைமறைவாகுதல் எனப் பொருள்.   இ.த.ச. பிரிவு 172, அழைப்பாணை அல்லது பிற வழக்கு நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காகத் தலைமறைவாக இருத்தலைப்பற்றிக் கூறுகிறது. 178. Absence     வராமை   வாராதிருத்தல்   ஆவணங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றின்…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 156-160

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:151-155 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  156-160 156. Above standard தரத்திற்கு மேலான   அளவு அல்லது தரம் அல்லது இரண்டும்  மேலான நிலையில் இருப்பதைக் குறிக்கிறது.   ஆளுமையில் இயல்பு மீறிய திறமையை வெளிப்படுத்தும் தலைமைத்துவ நிலையைக் குறிக்கிறது.   நிதியியலில் கடனாளி வலுவான நிதிக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. 157. Above the rank of பதவி நிலைக்கு மேலான   ஒரு பதவி நிலையை விட மேலான உயர் பதவியைக் குறிப்பது….

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:151-155

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:146-150 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 151-155 151. Above mentioned மேற்குறிப்பிட்ட மேற்குறித்துள்ள   முன்னர்ச் சொன்னதை எடுத்துரைப்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். எனினும் மேலே தெரிவிக்கப்பட்ட  என்பதை முந்தைய பக்கங்களில் என்றில்லாமல்  அதே பக்கத்தில் மேலே எனக் கருதும் வெற்றுரையாகக் கருதித் தவிர்க்க வேண்டுகின்றனர் சட்ட வல்லுநர்கள். இந்த இடங்களில் மேலே என்பதைவிட /முன்னதாக  முன்னால் /ஏற்கெனவே/ முந்தைய என்று குறிப்பிடத் தெரிவிக்கின்றனர். 152. Above normal இயல்பின் மிகுந்த இயல்பினும் மேலான…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:146-150

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:141-145 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 146-150 146. Above மேலே மேம்பட்டு, அப்பாற்பட்டு.தலைக்குமேல், விண்ணில், முன்னிடத்தில், உயரமாக     எழுத்து வடிவில் தெரிவிக்கையில் முன்னர்க் கூறியதைச் சுட்டிக்காட்ட மேலே சொன்ன, மேலே தெரிவித்த, மேலே கூறிய என்பன போன்று வரும்.   வாதுரையிலோ தீர்ப்புரையிலோ முதலில் கூறியதை எடுத்துக் கூறும் பொழுது மேலே சுட்டிய/குறிப்பிட்ட எனப் பயன்படுத்துவர். 147. Above all எல்லாவற்றிற்கும் மேலாக   யாவற்றையும் விட மேலாக,  …

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:141-145

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:136-140 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 141-145 141. Abortive trial   கைவிடப்பட்ட உசாவல் விசாரணை    முடிவு எட்டப்படாத  உசாவல் / விசாரணை   சில காரணங்களுக்காக விசாரணை முழுமையுறாத, தீர்ப்பளிப்பதற்கு முன் முடிக்கப்படுகிற உசாவல்/விசாரணை   142. Abound மிகுந்திரு நிரம்பியிரு பொங்கு மல்கு   மிகுதியான எண்ணிக்கையில் அல்லது பேரளவிலான அளவில் உள்ளனவற்றைக் குறிப்பது. 143. About பற்றி   குறித்து இங்குங்குமாய், சுற்றி, ஏறத்தாழ, கிட்டத்தட்ட. கப்பலின்…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:136-140

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்-131-135 – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 136-140 136. Abort   கருச்சிதைவுறு   கருக்குலைதல், இடைமுறி, இடையழி, கருச்சிதை, கருப்பங்கரைதல், கருச் சிதைதல், காய்விழுதல், கருச் சிதைந்துவிழுதல், சிதை, செயன்முறி, செயல்முறிப்பு .  இவற்றுள் கரு தொடர்பில்லாத சொற்கள் பொதுவான முறிவுகளைக் குறிப்பன.   abortus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கருச்சிதைவு. இதிலிருந்து abort > abortion   உருவாயின. 137. Aborticide கருக்கொலை  தானாகவே கருவைக் குழந்தையாக வளரவிடாமல் அழிப்பது/கொல்லுவது கருக்கொலை. 138. Abortion…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்-131-135

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 126-130 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  131-135 131. Abolition of titles   பட்டங்களை ஒழித்தல் விருதுகளை ஒழித்தல்‌   இந்திய அரசியல் யாப்பு 18 ஆம் இயல் பட்டங்கள் ஒழிப்பு (Abolition of titles)பற்றிக் கூறுகிறது. 132. Abolition of untouchability தீண்டாமை ஒழிப்பு   தீண்டாமை என்பது மனிதருள் இனம், பிறப்பு, குலம் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை பாராட்டும் குமுகாயக் குற்றம்.    அரசியல் யாப்பு…