இந்திய விடுதலை நாள் உரையரங்கம் : “விடுதலையானது இந்தியா! அடிமையானது தமிழ்நாடு?”

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள் – 411) தமிழ்க் காப்புக் கழகம் மன்னும் இமயமலை                                         எங்கள் மலையே ! மாநிலமீததுபோல்                                                  பிறிதில்லையே ! இந்திய விடுதலை நாள் உரையரங்கம் “விடுதலையானது இந்தியா! அடிமையானது தமிழ்நாடு?” நாள் : ஆடி 28, 2054 ஞாயிறு 13.08.2023  காலை 10.00 வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள் : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா இளைய ஒளவை முனைவர் தாமரை சிறப்புரை : தமிழ்த்தேசியச் செம்மல்…

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம்

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம் ஆடி 22, 2053 ஞாயிறு , 07.08.2022, காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: கலைமாமணி குத்தாலம் மு.செல்வம் பரதக் கலாலயப் பள்ளி திருபுவனம் ஆத்துமநாதன் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை கலைச்சுடர் மணி சசிரேகா கனகசபை பரதநாட்டியப் பள்ளி கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                              வரவேற்புரை: தமிழாசிரியை (உ)ரூபி தலைமையுரை…

என்றும் வேண்டும் தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும், இணைய அரங்கம், 12.09.21

தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைய அரங்கம் ஆவணி 27, 2052 ஞாயிறு 12.09.2021 காலை 10.00 என்றும் வேண்டும் தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும்   கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: முனைவர் பா.தேவகி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை:  பேரூர் ஆதினம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் பொழிஞர்: கவிஞர் இலட்சுமி குமரேசன் புலவர் அ. துரையரசி புலவர் ச.ந. இளங்குமரன் இ.பு.ஞானப்பிரகாசன் தொகுப்புரை: தோழர் தியாகு…

நாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா? – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி

  நாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா? இப்பொழுதெல்லாம் வலைத்தள ஊடகங்களில், குழந்தைக்குச் சூட்டுவதற்குத் தமிழில் நல்ல பெயர் பரிந்துரைக்குமாறு பலரும் அடிக்கடி கேட்கிறார்கள். பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! அதே நேரம், இப்படிக் கேட்பவர்களில் பலர் குழந்தை பிறந்த நட்சத்திரத்தைத் தெரிவித்து, அதற்குரிய எழுத்தில் தொடங்கும் பெயராகக் கேட்பதையும் பார்க்கிறோம். அஃதாவது இந்தியச் சோதிட முறையில் குறிப்பிடப்படும் 27 உடுக்களில் (நட்சத்திரங்களில்) ஒவ்வோர் உடுவுக்கும் உரியவையாகச் சில எழுத்துகள் குறிப்பிடப்படுகின்றன; அந்த எழுத்துகளில் தொடங்குமாறு பெயர் வைப்பது சிறப்பானது என நம்பும்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36  படக்கலை இதர கலைகளை எல்லாம் பாழாக்கி வருவதைக் கண்டு கவிஞர் வேதனையோடும் உளக்கொதிப்போடும் பாடல்கள் பாடியிருக்கிறார். பிழைப்புக்காக அங்கு நல்லவர்களும் கெட்டுப் போவதை எண்ணி மனம் வருந்துகிறார். கலையை வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் வயிற்றைத்தான் வளர்க்கின்றார் என்பதைச் சுட்டுகிறார்.    தமிழரின் பெருமைகளை எண்ணி மகிழும் பெருங்கவிக்கோ இன்றையத் தமிழரின் இழிதன்மைகளை எடுத்துக்கூறப் பின் வாங்குவதில்லை. யார் என்று கேட்டு, இந்தத் தமிழன்தான், தமிழன்தான், தமிழன்தான்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 கலைத்துறையில் காணப்படும் கீழ்நிலைகள் எண்ணிக் குமைகின்றார் பெருங்கவிக்கோ. அன்புத் தமிழர்கள் வளர்த்த அருங்கலையை இன்று “நாய் நரிகள் எல்லாம் புகுந்தே ஆடும் நாசத்தின் தலையுச்சி” ஆக்கி விட்ட அவலநிலையை நினைத்துக் கொதிக்கின்றார். படக்கலையில் காணப்படுகிற சிறுமைச் செயல்களை வருணித்து வருந்துகிறார். கலையின் பேரால் போடப்படுகிற கும்மாளங்கள், “நாடி நலக் கலை வளர்த்த தமிழர் நாடே! நாசமாய் நீ போவதும் உன் தலையெழுத்தா?” என்று வேதனைப்படுகிறார். நம் நாட்டு நாடகத்தை…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34   பாலல்ல வெளுத்த தெல்லாம்! உண்டுடுத்திப் பவனிவரு வோரெல்லாம் மனிதரல்ல ஆலல்ல மரங்களெல்லாம்! அதனைப்போல அருங்கல்வி கற்றபுகழ் மாந்த ரெல்லாம் சாலபெரும் நல்லோரும் அல்ல! பல்லோர் சரியான முழுமூடக் கயவராகி ஏலமிடு பொருள்போலே ஆனார் இன்று! என்னென்பேன்! இது பெரிய வெட்கக்கேடு! வானகமே மழை நீரைப் பருகிவிட்டு வையத்தை வெறுப்பதுபோல், அறம் செய்கின்ற தானத்தான் பொருளையெலாம் ஏப்பம்விட்டுத் தன்கையை விரிப்பது போல், நேர்மை நெஞ்ச மானத்தை மாவீரன் துறப்பதைப் போல்,…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33   வள்ளுவர் வடித்த அமைச்சரின் வகை நெறி பற்றிப் பேச வந்த பெருங்கவிக்கோ இற்றைநாள் அமைச்சர்கள் குறித்துச் சிந்தனைப் பொறிகளைக் கவிதையில் சிதறியிருக்கிறார். இயல்பைக் காட்டும் படப்பிடிப்பு அவ்வரிகள். கவிஞர் பாடுகிறார், “அமைச்சர்தமை நினைத்தால் அடிவயிற்றில் போராட்டம் இமைப் பொழுதும் சோராது ஏற்ற பதவியினைக் காப்பாற்ற வேண்டுமெனும் கருத்தால் திறக்காத தாழ்ப்பாள்தனைப் போட்டுச் சதுராடி வாழ்கின்றார்! சமுதாயச் சாக்கடையில் தன் பதவிக் கப்பலினை அமுதாகச் செலுத்தி ஆலவட்டம் போடுகின்றார்!…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32    உலகத்தில், அன்றாட நடைமுறையில் காணப்படுகிற முரண்பாடுகள் கவிஞர் உள்ளத்தில் தைக்கின்றன. அந்த உறுத்தல் அவரது உணர்வில் சூடேற்றுகிறது. சீற்றமாகச் சொற்கள் கொதித்து வெடிக்கின்றன. இதோ ஓர் எடுத்துக்காட்டு: உண்ட சோறு செரிக்காத திருடர்க் கெல்லாம்      உபசரணை செய்கின்றீர் உண்டிச் சாலை கொண்டு கூட்டிச் செல்கின்றீர் வாங்கிப்போட்டுக்      குடல் நிரப்பி ஆனந்தம் அடைகின்றோரே அந்தோ திண்டாடும் ஏழைமகன் விடுதி வாசல்      தெருவோரம் நின்றானே கவனித்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31  அஞ்சி அஞ்சி அயர்ந்து நெகிழ்ந்து பஞ்சைபோல் வாழும் பண்பு வேந்தர்கள் என்றும் சொல்லி, இவர் பெரும் அறிவை இந்நாடு இயக்கினால், ‘தவம் வென்றது போல்தான் வரும் நலமே’ என்று கருத்துத் தெரிவிக்கிறார்.   பொதுவாக, மேடை மீது நின்று நீட்டி முழக்கிப் பெரும் பேச்சுகள் பேசிக் களிப்பவர்கள்தாம் மிகுதியாக இருக்கிறார்கள். அந்தப் பேச்சைக் கேட்பவர்களோ கை தட்டி மகிழ்கிறார்கள். அந்தக் கரவொலி பேச்சாளர்களைக் கிறக்கத்தில் ஆழ்த்துகிறது. அவர்கள் செயல்திறன்…

1 2 14