வெருளி நோய்கள் 739-740: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 734-738: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 739-740
- காதல் திரைப்பட வெருளி – Romantikophobia
காதல் திரைப்படம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதல் திரைப்பட வெருளி.
காதல் வெருளி உள்ளவர்களுக்குக் காதல் திரைப்பட வெருளி வர வாய்ப்புள்ளது. காதல் காட்சிகள் பார்க்கக்கூடிய வகையில் இல்லை என்று காதல் திரைப்படங்கள் மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
- காதல் வெருளி- Philophobia /Filosphiloerotophobia
காதல் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சமே காதல் வெருளி.
காதல் என்பது வாழ்க்கையின் வெறுக்கத்தக்க செயல் என எண்ணுவோர், பழமை வாதிகள், சாதி ஆணவக் குடும்பத்தில் சிக்கியுள்ளவர்கள், காதல் ஏமாற்றமான வாழ்க்கையே தரும் என எண்ணுநர், காதல் காட்சிளைக் கண்டு வெறுப்பவர்கள் எனப் பல தரப்பட்டோரும் காதல் வெருளிக்கு ஆளாகின்றனர்.
‘பாத காணிக்கை’ படத்தில் ‘எட்டடுக்கு மாளிகையில்’ எனத் தொடங்கும் கண்ணதாசன் பாடலில்
காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வர வேண்டாமடி – எந்தன்
கோலம் வர வேண்டாமடி – எந்தன்
கோலம் வர வேண்டாமடி.
எனக் காதல் தோல்வியால் கதைத்தலைவி பாடுவதாக வரும். இதுபோல் நிகழ்வுகளால் காதல் மீது பெருங்கவலையும் தேவையற்ற பேரச்சமும் கொள்வர் சிலர்.
இதில் விந்தையான நேர்வுகளும் உள்ளன. பெண்ணின் மீது விருப்பம் கொண்டு தங்களுக்குள் காதலித்துக் கொள்வர். ஆனால் அந்தப் பெண்ணும் விரும்புவதாக அறிந்தால் விருப்பு வெறுப்பாக மாறி விடுகின்றது.
ஒருதலைக்காதலும் காதல் முறிவும் கொலை முதலான துன்பியல் முடிவுகளைச் சந்திப்பதால் காதலை வெறுப்பவர்களும் உள்ளனர்.
காதலாட்ட வெருளி(Malaxophobia / Sarmassophobia) போன்றதுவே இதுவும்.
Philo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காதல்.
காண்க : பால்வினை வெருளி – Erotophobia
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply