மொழிப்போர் அறுபதாமாண்டில் வீர வணக்கம், இலக்குவனார் விருதுகள் வழங்கு விழா

தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன இணைந்து ஞாயிறு தை 11, 2057 / 25.01.2026 அன்று மாலை மொழிப்போர் அறுபதாம் ஆண்டையும் இலக்குவனார் விருதுகள் வழங்கு விழாவையும் நிகழ்த்தின.
தொடக்கத்தில் எழுத்தாளர் மணா எழுதி இயக்கிய உயிருக்குநேர் என்னும் மொழிப்போர் ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது.
நிகழ்விற்குத் தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். செயலர் தமிழ்க்காதலன் இணைப்புரை வழங்கினார். வையைத்தமிழ்ச்சங்கத்தலைவர் புலவர் ந.ந.இளங்குமரன் வரவேற்புரை ஆற்றினார். இளமுனைவர் நெல்லை சோமசுந்தரி விருதாளர்கள் குறித்த உரையை அளித்தார். பேரா.ப.மருதநாயகம், முனைவர் மு. முத்துவேலு ஆகியோர், மொழிப்போர், சங்கத்தமிழ்ச்சிறப்பு, இவற்றில் இலக்குவனார் பங்களிப்பு, விருதாளர்கள் குறித்துப் பாராடடிப் பேசினார்.
இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய இந்தி நுழைவ எந்நாளும் தடுப்போம் என்னும் நூலினைப் பேரா.முனைவர் ப.மருதநாயகம் வெளியிட, இயக்குநர் சுதா, முனைவர் முத்துவேலு, பொறி.இ.திருவேலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையுரையில் விருதுகள் வழங்கப்படுவதன் நோக்கங்களைக் குறிப்பிட்டார். மேலும் பராசக்தி திரைப்படத்தின் நிறைகுறைபற்றி ஆராயாமல், மொழிப்போர் குறித்த முதல் திரைப்படத்தை எடுத்து இக்காலத்தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக இயக்குநருக்கு விருது வழங்கப்படுவதாகக் கூறினார்.
பின்வருவாேருக்குச் சங்கத்தமிழ் விருதுகள் வழங்கப்பெற்றன. விருதுகளைப் பேரா.ப.மருதநாயகம் வழங்க விருதிதழ்களை முனைவர் மு.முத்துவேலு வழங்க நினைவு நூல்களைப் பொறி.திருவேலன் வழங்கினார்.
இப்படத்தின் இயக்குநர் திருவாட்டி சுதா கொங்கராவிற்கும் அதன் கதைஉரையாடல் ஆசிரியர் திரு அருச்சனனுக்கும் இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருதுகள் வழங்கப்பெற்றன.
இலக்குவனார் மொழிப்போர் ஆவணக் கலைஞர் விருதுகள் , குங்குமம் சுந்தரராசன் – மொழிப்போர் ஆவணப்படங்களுக்காக, மூத்த இதழாளர் மணா – ‘உயிருக்குநேர்’ எழுத்திற்கும் இயக்கத்திற்கும் வழங்கப்பெற்றன.
இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருதுகள், முனைவர் அ.இராமசாமி – எழுத்தாளர் நிவேதிதா (உ)லூயிசு ஆகியாருக்கு வழங்கப்பெற்றன.
மேலும், பின்வரும் வகையில் இலக்குவனார் சங்கத்தமிழ் விருதுகள் வழங்கப்பெற்றன.
அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது
- பேரா.முனைவர் ப.மருதநாயகம் இலக்குவனார் சங்கத்தமிழொளி விருது
- முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
- முனைவர் பொ.நா.கமலா
- முனைவர் வைதேகி எருபருட்டு(Vaidehi Herbert)
- முனைவர் முகிலை இராசபாண்டியன்
- முனைவர் ப.பாண்டியராசா
- முனைவர் செங்கைப் பொதுவன்
- முனைவர் செ.இராசேசுவரி
- புலவர் ச.ந.இளங்குமரன்
- குளச்சல் (இ)யூசுபு
இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது
- முனைவர் ஏ. கோதண்டராமன்
- நெல்லை சோமசுந்தரி
- முனைவர் கு.சக்திலீலா
- முனைவர் வே.தீனதயாளி
- முனைவர் வெ.இரமேசுகுமார்
ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது
- புலவர். துரை. முத்துக்கிருட்டினன்
- முனைவர் தேமொழி
- முனைவர். செயந்தி நாகராசன்
- இலட்சுமி குமரேசன்
- கவிஞர்.ச.சங்கீதா
உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது
- முனைவர்.பயசு அகமது
இலக்குவனார் இலக்கியச் செம்மணி விருது
முனைவர் முத்துவேலு
நிறைவாகக் குழுப்படங்கள் எடுக்கப்பட்ட பின்னர் தமிழ்த்தொண்டர் வேல் சுப்புராசு நன்றி நவின்றார்.







Leave a Reply