(வெருளி நோய்கள் 1011-1015 தொடர்ச்சி)

சாம்பல் நிறம் தொடர்பானவற்றின் மீது ஏற்படும் வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சாம்பல்நிற வெருளி
சாம்பல் நிறம் நடுவுநிலைமை, ஒத்துப்போதல், சலிப்பு, ஐயப்பாடு, முதுமை, புறக்கணிப்பு, நாணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய குறியீடாக விளங்குகிறது.
glauco என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாம்பல்நிறம்.
00

தனித்திராமல் பிறரைச் சார்ந்திருக்கும் சார்பு(dependence on others) நிலை குறித்த வரம்பற்ற பேரச்சம் சார்பு வெருளி.
தற்சார்பின்றிப் பிறரை அண்டியிருத்தல் உரிய செயலைக் குறித்த காலத்தில் முடிப்பது குறித்த கவலையை உருவாக்கும். சார்தலுக்குரியவர் எதிர்பார்க்கும் உதவியைச் செய்யாமல் போனால் என்ன ஆகுமோ என்ற அச்சத்தையும் எழுப்பும்.
00

சார்லி உலோலா கதைப் பாத்திரங்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் சார்லி உலோலா வெருளி.
இலாரென் சில்லடு (Lauren Child) என்பவரால் எழுதப்பெற்றுப் பிரித்தானியாவில் 2008-2008 இல் ஒளிபரப்பப்பட்ட அசைவூட்டச் சித்திரம். பின்னர் உலகில் 20 நாடுகளுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதில் வரும் முதன்மைப் பாத்திரங்களே உடன் பிறப்புகளே சார்லி, இலாரா ஆகியோர். தங்கை இலாரா அடிக்கடிச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு தப்பிப்பது நகைச்சுவையாக இருப்பினும் இவைபோன்ற சிக்கல்கள் நமக்கும் வரும் எனப் பார்க்கும் சிறார் அஞ்சுவர்.
00

சாலிபீ விரைவு உணவகம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சாலிபீ வெருளி.
சாலிபீ என்பது பிலிப்பைன்சு நாட்டில் உள்ள சங்கிலித்தொடர் விரைவு உணவகம் ஆகும். 1978இல் தோனி தான் கேக்குடியாங்கு(Tony Tan Caktiong) என்பவரால் நிறுவப்பட்டது. Jolli என்பது Jolly என்னும் சொல்லில் இருந்து உருவானது. என்றால் தேனீதான். எனினும் இங்கே கடுமையான உழைப்பையும் இனிப்பையும் குறிக்கிறது. இந்தப்பொருளில் பார்த்தால் என்பதைக் களிப்பு இனிப்பு களிப்பு மொறு மொறு எனலாம். உண்பொருள்களின் மிகுதியான விலை, சிலருக்கு விரும்பாத சுவை போன்றவற்றால் இததகைய உணவகங்கள்மீது பேரச்சம் வருகிறது.
00

சாலையில் பயணம் மேற்கொள்வது குறித்த அளவு கடந்த பேரச்சம் சாலை வெருளி. சாலைப்பயண வெருளி என்று சொல்லாமல் சுருக்கமாகச் சாலை வெருளி என்கிறோம். பயண வெறுப்பு(travel avetion) என்பது வேறுவகை.
சாலைப்பயணத்தால் ஏற்படும் உடல் வலி, தூசி ஒவ்வாமை, இடைவழி உணவுச்சிக்கல், நேர்ச்சி குறித்த அச்சம் போன்றவற்றால் ஏற்படும் மிகுதியான பேரச்சம்.
hodo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பயணம் அல்லது சாலை.
00