(வெருளி நோய்கள் 1246 -1250 : தொடர்ச்சி)

மூச்சுத் திணறல் வரும் என்று தேவையின்றியும் தக்கக் காரணமின்றியும் வரும் அச்சமே திணறல் வெருளி. மூச்சுத்திணறல் வரும் பொழுது அதற்கு ஆட்பட்டவரும் அதைப் பார்ப்பவரும் அதைத் தணிப்பதற்கான வழிமுறைகளில் இறங்காமல் தீவிரமான எதிர் சிந்தனைகொண்டு அச்சம் அடைவதும் திணறல் வெருளிதான்.
மூச்சடைப்பு வெருளி (choking phobia ) என்றாலும் இதுதான்.
pnig என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் மூச்சுத் திணறல்.
angino என்னும் இலத்தீன் சொல்லிற்குத் தாெண்டைத் தொற்று, மூச்சுத் திணறல் எனப் பொருள்கள்.
00

திங்கட்கிழமைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் திங்கட்கிழமை வெருளி.
மாணவப்பருவத்தில் வார விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை குறித்துப் பேரச்சம் கொள்கின்றனர். ஆள் வளர வளர அச்சமும் வளருகிறது. நாளடைவில் பணிக்குச் செல்லும்பொழுதும் வார விடுமுறை முடிந்து வேலைக்குச் செல்ல பேரச்சம் வருகிறது. இத்தகைய காரணமற்ற அளவு கடந்த பேரச்சம் திங்கட்கிழமை வெருளியாகிறது.
“திங்கள் துக்கம் திரும்பி வரும்” என எதுகை மோனை அடிப்படையில் பழமொழி உருவாகியுள்ளது. எனவே, திங்கள் கிழமை துக்கம் எதுவும் நேர்ந்தாலோ கெடுதி நேர்ந்தாலோ துயரம் தொடரும் என்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். எனவே, திங்கள் கிழமை நல்லது நடக்க வேண்டுமே, கெட்டது நடக்கக்கூடாதே என்று கவலைப்பட்டு, அளவுகடந்து தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
Luna என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நிலா/ உலவி.
00

  1. திங்கள் வெருளி – Selenophobia / Lunaphobia/ Mestoselenophobia/ Remaphobia திங்களைக் கண்டு அல்லது திங்கள் இல்லா இருண்ட இரவைக்கண்டு பேரச்சம் கொள்வது திங்கள் வெருளியாகும்.
    நிலவு ஒளி இருந்தாலும், நிலா இன்றி இருண்டு இருந்தாலும், முழுநிலவு நாளாக இருந்தாலும் இருள்நிலவு நாளாக இருந்தாலும் நிலவு மறைப்பு நாளாக இருந்தாலும் தேவையற்ற மிகையான பேரச்சத்திற்கு இத்தகையோர் ஆளாகின்றனர்.
    நாம் புவியைச் சுற்றும் திங்களை நிலா என்கிறோம். ஆனால் பல கோள்களைச் சுற்றியும் நிலா என்பது உலவுகிறது. எனவே, அனைத்து நிலாக்களையும் நாம் உலவி என்னும் பொதுச்சொல்லில் அழைக்கலாம். புவியைச் சுற்றும் நிலவைத் திங்கள் என்று கூறலாம்.
    திங்களின் ஒளியே நிலா.
    “நிலவுப் பயன்கொள்ளு நெடுமணன் முற்றத்து”. என நெடுநல்வாடை(அடி95) கூறுகிறது.
    “விசும்பி னகனிலாப் பாரிக்குந் திங்களுஞ்” (நாலடி.151.);
    என்னும் பாடலடி மூலம் நிலவுஒளியைத் தரும் திங்கள் என்ற பொருளாலும் இதைப் புரிந்து கொள்ளலாம்.
    பின்னர் நிலவாகிய ஒளியைத் தரும் நிலாவையும் நாம் நிலா என்றே கூறத் தொடங்கியுள்ளோம். (திங்களின் குளிர்ஒளி நிலா; கதிரவனின் வெம்மை ஒளி வெயில். )
    உவா என்று திங்களையும் வெள்ளுவா என முழுநிறைத் திங்களையும் காருவா என கரு நிறத் திங்களையும் குறித்துள்ளனர். அதுபோல் மதி என்பது தேய்பிறையைத்தான் குறிக்கும்.
    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்நீர பேதையார் நட்பு.(திருக்குறள் 782)
    என்கிறார் திருவள்ளுவர். மதி என்னும் சொல்லும் பொதுவாகத் திங்களைக் குறிக்கும் பழக்கம் வந்துவிட்டது.
    முழுநிலா நாளன்று கொலை, கொள்ளை,திருட்டு முதலியன நடைபெறும் என்ற நம்பிக்கையால் திங்கள் வெருளிக்கு ஆளாகின்றனர்.
    நிறைநிலா, இருள் நிலா நாள்களில் கடலலை வேகம் மிகுதியாக இருக்கும் என்ற அறிவியல் நம்பிக்கை, அன்றைக்கு மன நலங்குன்றியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையால் மக்கள் அளவு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
    வெள்ளுவா வெருளி/முழு நிலா வெருளி(Mestoselenophobia, Remaphobia) எனத் தனியாகக் குறிக்கப்பெற்றனவும் எல்லாமே நிலவாகிய திங்களைப்பற்றியதுதான் என்ற இதனுடன் இணைத்துத் தரப்படுகின்றது. ஆனால், திங்கள் வெருளி என்றால் திங்கட்கிழமை வெருளி என எண்ணக்கூடாது.
    seleno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நிலா என்பதாகும்.
    luna என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் நிலா என்பதாகும்.
    Mestos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் முழு என்பதாகும்.
    00

திசம்பர்(December) குறித்த வரம்பில்லாப் பேரச்சம் திசம்பர் வெருளி.
shi+er என்னும் சீனச் சொற்களுக்குப் பத்து+இரண்டு= பன்னிரண்டு எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, shieryue பன்னிரண்டாம் மாதமாகிய திசம்பர் மாதத்தைக் குறிக்கிறது.
00

வாலுட்டு திசினி(The Walt Disney Company) நிறுவனம் தொடர்பான பெருங்கவலையும் பேரச்சமும் திசினி வெருளி.
வெள்ளையர் அல்லாத கதைப்பாத்திரங்களின் ஒரே மாதிரியான சித்தரிப்பு, பாலின வேறுபாடு, படைப்புத் திருட்டு போன்றவற்றால் வாலுட்டு திசினி நிறுவனம் மேல் வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர்.
00