(வெருளி நோய்கள் 881-885: தொடர்ச்சி)

கூட்டத்தைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் கூட்ட வெருளி.
பொதுவிட வெருளி(agoraphobia) உடன் தொடர்பு உடையது.
கூட்டம் என்பது சந்திப்பு என்பதையும் குறிக்கும். இங்கே திரளாகக் கூடுவதைக் குறிக்கிறது. திரளான கூட்டத்தைப்பார்ததால் அஞ்சுவோர் உள்ளனர்.
கூட்டத்தில் பொருள்கள் தொலைந்து போகலாம், உடைமைகள் திருடு போகலாம், துன்புறுத்தல் நிகழலாம், தொற்றுநோய்க்கு ஆளாகலாம் என்பன போன்ற அச்சங்களாலும் கூட்டம் கண்டு அஞ்சுவோர் உள்ளனர்.
‘சொர்க்கம்’ திரைப்படத்தில் கண்ணதாசனின் சொல்லாதே யாரும் கேட்டால் எனத் தொடங்கும் பாடலில்,
உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டால்
கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன..
காரியம் செய்தால் என்ன…?
என்று பாடல் வரிகள் வரும். இதுபோல் மேடைப்பேச்சு வீண் என்று அதை வெறுப்பவர்களும் உள்ளனர்.
கட்டணம் செலுத்திப் பேச்சைக் கேட்கும் மக்களும் உள்ளனர். பேச்சாளர்களைப் பொருத்தது இது. எனினும் பொதுக்கூட்டங்களால் போக்குவரத்து இடையூறு, காலநேரம் தள்ளிப்போதல், வழக்கமான வேலை பாதிப்பு போன்ற இடையூறுகளை எண்ணி அஞ்சுவோரும் உள்ளனர்.
இப்பொழுது கூட்டங்களில் பணம், உணவு, மது அல்லது வேறு பொருள் கொடுத்து ஆள் சேர்க்கின்றனர். இவர்களுக்குக் காலம் கடக்கும் கூட்டங்கள் எரிச்சலையே ஏற்படுத்துகின்றன.
கும்பல் வெருளி() உள்ளவர்களுக்குக் கூட்ட வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
ochlo என்னும் கிரக்கச் சொல்லின் பொருள் கூட்டம்
00

புனைவுரு பாத்திரமான கூஃபி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கூஃபி வெருளி.
00

அமைப்புகளின் செயற்குழு, பொதுக்குழு முதலான கூட்டங்களில் பங்கேற்றல் குறித்து ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் கூடுகை வெருளி.
அமைப்புகளின் பொறுப்புகளில் உள்ளவர்களுக்குப் பணிகள், கணக்கு விவரங்கள், நிறைவேற்றாத திட்டங்கள் முதலானவைபற்றிப் பிறர் கேட்டால் எப்படிச் சமாளிப்பது என்று பெருங்கவலையும் பேரச்சமும் வருவதுண்டு. பொறுப்புகளில் இல்லாதவர்களுக்கும் அமைப்பு தொடர்பான கருத்து எதையும் கேட்டால் எப்படி விடையிறப்பது என்ற காணரமற்ற பேரச்சம் எழுவதுண்டு.
congress என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சந்திப்பு எனப் பொருள். இங்கே அமைப்பு முறையிலான ஒன்று கூடுதலைக் குறிக்கிறது.

00

கூடை குறித்த வரம்பற்ற பேரச்சம் கூடை வெருளி.
கூ்டையைப் பார்த்தாலோ நினைத்தாலோ சிலருக்குக் காரணமற்ற பேரச்சம் வருகிறது.
கூடை என்னும் பொருள் கொண்ட kalathos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது.
.00

கூடைப்பந்தாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கூடைப்பந்தாட்ட வெருளி.
கூடைப்பந்தாட்டத்தால் காயம் ஏற்படும், தோல்வி வரும் என்பது குறித்த பதற்றம் போன்றவ்றறால் கூடைப்பந்தாட்டம் குறித்து வெருளி கொள்வர்.
பொதுவாக விளையாட்டு குறித்துப் பேரச்சம் கொள்வோருக்குக் கூடைப்பந்தாட்ட வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00