(வெருளி நோய்கள் 926-930 தொடர்ச்சி)

கொண்டாட்டம் குறித்த வரம்பு கடந்த பேரச்சம் கொண்டாட்ட வெருளி

Heorto என்னும் சொல்லின் மூலக் கிரேக்கச்சொல்லின் பொருள் விடுமுறை. விடுமுறை நாள் கொண்டாட்ட ங்களை இங்கேகுறிக்கிறது.

00

கொதிசாறு(Soup) குறித்த அளவற்ற பேரச்சம் கொதிசாறு வெருளி.

காய்கனிகளிலிருந்து அல்லது தக்காளி, முருங்கைக்காய் போன்ற குறிப்பிட்ட காய்கனியிலிருந்து அல்லது எலும்பிலிருந்து அல்லது பிற உண்பொருளிலிருந்து உருவாக்கப்படும் அனைத்துவகை கொதி சாறு அல்லது குறிப்பிட்ட வகை அல்லது வகைகள் கொதி சாறு மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

வடிசாறு தமிழில் ஆணம், சொதி, தொப்பளம்,  நீட்டாணம், தப்பளம் எனப் பலவகையாகக் குறிக்கப்பெறுகின்றது. சொதி என்பது தேங்காய்ப்பால் மிகுதியாகப் பயன்படுத்திச் செய்யப் பெறுவது. தொப்பளம் என்பது காய்கனிகளைப் பாதிநிலையில் வேகவைத்துச் செய்யப்படுவது. முழுமையும வெந்தால் காய்கனிச்சத்து வீணாகும் என்று இவ்வாறு செய்யப்படுவது. தப்பளம் என்பது மிகுதியான காய்கனிகளைப் பயன்படுத்திச் செய்யப் படுவது. இன்றைக்குக் காளான் வடிசாறு, எலும்பு வடிசாறு, நெஞ்செலும்பு வடிசாறு எனப் பலவகைகள் உள்ளன. வடிசாறு என்று பிறர் சொன்னாலும இயற்கையான பழச்சாறு போல் இல்லாமல் கொதிக்க வைத்து உருவாக்குவதால் கொதிசாறு எனலாம்.

00

கொத்திறைச்சி(sausage) குறித்த அளவுகடந்த பேரச்சம்  கொத்திறைச்சி வெருளி.

Loukaniko என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கொத்திறைச்சி

00

கொம்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் கொம்பு வெருளி.

சிலருக்கு விலங்குகளின் கொம்பு மீதுள்ள வரம்பு கடந்த பேரச்சம் கொம்பு வடிவில் ஊர்திகளில் உள்ள ஊதுகொம்பாகிய ஒலிப்பான்கள் மீதும் காரணமற்ற பேரச்சமாக மாறுகிறது.

keras  என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கொம்பு.

00

கொலைகள், தொடர் கொலைகள் புரிவோர் மீதான அளவுகடந்த பேரச்சம் கொலைகாரன் வெருளி.

“Fonias” என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கொலைகாரன். இந்தச் சொல் குளிர்காலப் புயலின்பொழுது மலை இடுக்குகள் வழியாகப்பாய்ந்தோடும் இடத்தின் பாய்ச்சல் பள்ளத்தாக்கு (Fonias Gorge) என்னும் பெயரிலிருந்து வந்தது. ஆனால், இந்த இடம் அமைதி, விந்தை,இயற்கை அழகுநிறைந்த இடமாகும். நீரின் பாய்ச்சலைப்போல் பாய்ந்து தாக்கிக் கொல்பவர்கள் என்ற பொருளில் இப்பெயர் வ்நதிருக்கலாம்.

காண்க: கொலை வெருளி(Killkillkillkillkillkillphobia)

00