வெருளி நோய்கள் 624-628: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 619-623: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 624-628
624. கண எண் வெருளி – Centumgigaphobia
கண எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் கண எண் வெருளி.
கணம் என்பது பத்தாயிரம் கோடி/1,00,00,00,00,000ஐக் குறிக்கும்.
00
625. கணக்கி வெருளி – Calculaphobia
கணக்கி(calculator) குறித்த வரம்பற்ற பேரச்சம் கணக்கி வெருளி.
கணக்கியைச் சரியாக இயக்கத் தெரியாததாலும் மெதுவாகப் பயன்படுத்துவதாலும் கணக்கி மீது தேவையற்ற வரம்பற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
626. கணக்கு வெருளி – Mathemaphobia/Mathemophobia
கணக்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் கணக்கு வெருளி.
கணக்குப் பாடம் என்றாலே பலருக்கு அச்சமும் வெறுப்பும் உள்ளன. “கணக்கு எனக்கு பிணக்கு வணக்கு மணக்கு ஆமணக்கு” என்று கணக்கைக் கண்டு மாக்கவி பாரதியாரே அஞ்சியுள்ளார். கணக்கின் மீதுள்ள அச்சத்தால் கணக்கு ஆசிரியர் மீதும் பலருக்கு வெறுப்பு வந்துவிடுவதும் இயற்கையாக உள்ளது. கணக்காளர், பொருளாளர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு அவர்களிடம் கணக்கு கேட்கப்படும் என்ற பேரச்சமும் உள்ளது.
கணக்கு கேட்டதால் அமைப்புகளும் கட்சிகளும் பிரிந்த வரலாறும் உண்டு.
கணக்கு வழக்கில் தவறு செய்து விட்டு அஞ்சுபவர்களும் தவறு செய்யாவிட்டாலும் செய்திருப்போமோ என்ற அச்ச உணர்வு உள்ளவர்களும் கணக்கு வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
627. கணக்குக் குறைபாட்டு வெருளி – Dyscalculiaphobia
கணக்கறிவு குறைபாடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கணக்குக் குறைபாட்டு வெருளி.
கணக்கு வெருளி போன்றதுதான் கணக்குக் குறைபாட்டு வெருளி. மாணவப் பருத்தில் கணக்குக் குறைபாட்டுஅறிவு குறித்து வருந்துபவர்கள் அதனை வளர்த்துக்கொண்டு கணக்குக் குறைபாட்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
628. கணப்பு வெருளி – Focophobia
கணப்பு (fireplace) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கணப்பு வெருளி.
தனிப்பட்ட முறையிலோ குழுவாகவோ அறையிலோ குளிரும் பொழுது வெப்பமூட்டிக் கொள்ள உதவும் கணப்பு குறித்து கொள்ளும் பேரச்சம் இது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply