வெருளி நோய்கள் 986-990: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 981-985: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 986-990
- சலிப்பு வெருளி – Plixiphobia/ Homophobia(2) ஒரே செயலை வழக்கமாகச் செய்வது தொடர்பில் ஏற்படும் சலிப்பு குறித்த அளவுகடந்த பேரச்சம் சலிப்பு வெருளி.
ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்வதால் உள்ளத்தில் வெறுப்பும் சோர்வும் நோவும் பிறவும் உண்டாகும் என அஞ்சிச் சலிப்பு குறித்து வெருளி கொள்வர்.
00 - சறுக்கு வண்டி வெருளி – Sleighphobia
பனிச் சறுக்கு வண்டி(Sledge/Sleigh)குறித்த அளவுகடந்த பேரச்சம் சறுக்கு வண்டி வெருளி.
உறைபனி நிலப்பரப்பில் பொருள்களையும் மக்களையும் சுமந்து செல்லும் குதிரைகள் அல்லது நாய்களால் இழுத்துச் செல்லப்படும் சக்கரங்கள் இல்லாத சறுக்குக்கட்டைகள் பொருத்திய வண்டியே பனிச் சறுக்கு வண்டி.
பெரும்பாலும் ஊர்திப்பயணம் மேற்கொள்வோருக்கு நேர்ச்சி(விபத்து) குறித்துப் பேரச்சம் உள்ளமைபோல் பனிச்சறுக்கு வண்டிப்பயணம் மீதும் பேரச்சம் வருகிறது.
00
- சறுக்குப் போட்டி வெருளி – Boitanophobia
ஆடவா் பனிச்சறுக்காட்டப் போட்டியைப்(competitive male figure skating) பார்க்குமாறு கட்டாயப்படுத்துவதால் ஏற்படும் அளவுகடந்த வேறுப்பும் பேரச்சமும் சறுக்குப் போட்டி வெருளி.
சறுக்குருளை மீது அச்சம் கொள்பவர்களுக்கும் பனிச்றுக்கு மீது அச்சம் கொள்பவர்களுக்கும் பனிச்சறுக்காட்டப் போட்டி மீது பேரச்சம் ஏற்பட்டு வெருளி உண்டாகிறது.
00
- சறுக்குருளை வெருளி – Rollerskatephobia
சறுக்கு உருளை(rollerskate) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சறுக்குருளை வெருளி.
சறுக்குருளை ஆடுவதற்கு மட்டுமல்லாம் சறுக்குருளை ஆட்டத்தைப் பார்ப்பவர்களுக்கும் பேரச்சம் ஏற்படுவதே சறுக்குருளை வெருளி.
00 - சறுக்குமிதி வெருளி – Skateboardphobia
சறுக்குமிதி(Skateboard) குறித்த வரம்பற்ற பேரச்சம் சறுக்கு மிதி வெருளி.
மிதி என்பது வினையாக இருந்தாலும் சறுக்குமிதி எனச் சேர்ந்து வரும் பொழுது பெயர்ச்சொல்லாகக் கருத வேண்டும்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5

Leave a Reply