இலக்குவனார் திருவள்ளுவன்கட்டுரைகலைச்சொற்கள்

சட்டச் சொற்கள் விளக்கம் 231-235 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 231 – 235

231. absolute rightமுழு உரிமை  

முழு உரிமைகளை எக்காரணங் கொண்டும் மட்டுப்படுத்த முடியாது.   எந்தச்சூழலும் முழுமையான உரிமைகளின் தகுதியையோ வரம்பையோநியாயப்படுத்த முடியாது.   அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின்போதும் முழுமையான உரிமைகளை இடைநிறுத்தவோ கட்டுப்டுத்தவோ முடியாது.
232. absolute title  முழுமை உரிமைமூலம்

முழுவுரிமை மூலம்‌
முழு உரிமை ஆவணம்
முழு உரிமை யாவணம்  
முழுமையான நிறைவான உரிமையுடைமை.
233. Absolute transfer  முழு உடைமை உரிமைமாற்றம்‌  

முழு மாற்றம்,
முழுமைப் பரிமாற்றம்  

தனிப்பட்ட சொத்தின் உரிமை மாற்றத்தை விற்பவர் வாங்குநருக்கு  முழுமையாக மாற்றுதல்.
234. Absolute warranty  முழுப் பொறுப்புறுதி  

எல்லா வகை இழப்புகளுக்கும் சேதங்களுக்கும் பொறுப்புறுதி அளிப்பதே முழுமையான பொறுப்புறுதி ஆகும்.

  இடர்ப்பாட்டால் ஏற்படும் செலவிற்கு மட்டுமல்லாமல், ஏந்துக்குறைவு, மன அழுத்தம் முதலியவற்றிற்கும் காப்புறுதி அளிப்பதே முழு பொறுப்புறுதி ஆகிறது.  
கடற்பயண முழுப் பொறுப்புறுதி எனவும் குறிக்கப் பெறும்.
235. Absolute, makeமுழுமையாக்கு

காண்க: Absolute  

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *