எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4 தொடர்ச்சி)
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5
இவ்வாறு செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் தொடர்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
50. ஊழியர்களைத் தேர்வு செய்தனர்.
51. 16 பேரைக் கைது செய்தனர்.
52. புதிய ஆட்களைத் தேர்ந்தெடுத்தனர்.
53. நடவடிக்கையைக் கைவிடு.
54. விடுமுறையைக் குறை.
55. புதுமுறையைப் பின்பற்று.
56. நடைமுறையைக் கவனி.
57. அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
58. கோசுட்டியைச் சேர்ந்தவர்கள்.
59. கும்பலைச் சேர்ந்தவர்கள்.
60. தமிழகத்தைக் கடும் வெயில் வாட்டுகிறது.
61. நிதியுதவியைப் பெற்றுக் கொண்டார்.
62. ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
63. போட்டியிடாததைத் தொடர்ந்து …
64. பெயரைப் பரிந்துரைத்தால் …
65. பயிர்களைச் சாகுபடி….
66. அதனைச் சுற்றி
67. திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்.
68. கேரளாவைச் சார்ந்தவர்.
69. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்
70. குழுக்களைச் சேர்ந்தவர்கள்.
71. தேர்தலைக் கருத்தில் கொண்டு …..
72. பணிகளைத் தொடங்க வேண்டும்.
73. ஆகியவற்றைப் பற்றி…
74. அறிக்கையைப் பெற்றார்.
75. திட்டத்தைத் தொடங்கினார்.
76. இடங்களைப் பிடித்தனர்.
77. செயலாளரைச் சந்தித்தார்.
78. மக்களுக்குக் குறைந்த விலையில் உணவு……
79. விவரங்களைத் தெரிவித்தார்.
80. கொலையாளிகளைத் தேடிவந்தனர்.
81. தண்ணீரைச் சேமி.
82. திரு.வாசுபாயைச் சந்தித்து….
83. கோரிக்கையைப் பரிசீலிக்க
84. கட்சியைப் பலப்படுத்த….
85. இதைத் தொடர்ந்து ….
86. உதவியாளர்களைத் திருப்பி அனுப்பினர்.
87. விமானத்தைக் கடத்த முயன்றனர்.
88. திட்டங்களைத் தொடக்வைத்தார்.
89. அவர்களைப் போராட்டத்திற்கு ……
90. நடவடிக்கையைச் சிவசேனாக் கட்சி ..
91. ஊழியர்களைத் தூண்டி விட்ட ……
92. …… வாலிபரைக் காவல் துறையினர் ……
93. விமானத்தைக் கடத்தும் நோக்கு ……
94. அணையைத் திறந்தார்.
95. மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.
96. … சிக்கல்களைத் தமிழக ….
97. சாதனங்களைப் பறிமுதல் செய்தனர்.
98. வாகனத்தைத் திருடியவர்.
99. … என்பவரைக் காவல் துறை ….
100. வாகனங்களைப் பறிமுதல் ….
101. தீர்ப்பைப் பூந்தமல்லி நீதிமன்ற …..
102. …. நாடுகளைப் புதிய கோணத்தில் …..
103. முறையைக் கொண்டுவர ….
104. சட்டத்தைப் புதிய வடிவில் ….
105. 2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடு
106. ஆவணங்களைப் பார்க்கும் போது ….
107. சொத்துகளைச் சேர்த்திருப்பது ….
108. பெண்ணைக் கேலி செய்ததால் ….
109. பட்டத்தைக் கைப்பற்றினார்.
110. பட்டத்தைத் தட்டிச் சென்றனர்.
111. முதலிடத்தைப் பெற்றனர்.
112. மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.
113. குப்பையைக் கொண்டு …..
114. உரங்களைத் தயாரிக்கும் …..
115. கலையைக் கற்பித்து வரும்..
116. இரயில்களைக் கவிழ்க்கப் போவதாகத் தெரிவித்தனர்.
117. நட்புறவைப் பலப்படுத்த உறுதி
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply