(வெருளி நோய்கள் 366-370 : தொடர்ச்சி)

இறைமம்(spiritual thing)சார்பானவை குறித்த வரம்பற்ற பேரச்சம் இறைம வெருளி.
இதனை ஆன்மா என்றும் ஆன்மாவைத் தமிழில் ஆதன் என்றும்
உயிர் நலம்சார்ந்த என்றும் குறிப்பிடுகின்றனர். எனினும் நடைமுறையில் சமயம் சார்ந்தும் இறை நெறி சார்ந்தும் உள்ளது. எனவே, இதனை இறைமம் எனக் குறிப்பிட்டுள்ளேன்.
00

இறைமை தொடர்பான வரம்பற்ற பேரச்சம் இறைமை வெருளி.
இறைமை நூலைப்படிப்பதால் மட்டுமல்லாமல், இறைமை வழிபாடு, தொடர்பான நிகழ்வுகள் முதலான அனைத்திலும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.
காதல் தோல்வியால்
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே ஓ
இறைவன் கொடியவனே

என்றும்

ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க விட்டான்
ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி
இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி

என்றும் சொல்வது போல் தோல்வி, நம்பிக்கை பொய்த்தல் பேரழிவு போன்ற சூழல்களில் இறைமை மீது வெறுப்பு கொள்வோர் உள்ளனர்.
00

இன உறுப்பு சுருங்குகிறது அல்லது மறைகிறது என்பனபோன்ற எண்ணங்களால் ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் இனஉறுப்பு வெருளி.
இயல்பான நிலையிலும் தவறான கற்பனையை வளர்த்துக்கொண்டும் பால்வினை தொடர்பான கடந்த காலச் செயல்பாடுகள் தொடர்பான அச்சத்தினாலும் இன உறுப்பு தொடர்பான காரணமற்ற தேவயற்ற கவலைக்கும் அச்சத்திற்கும் ஆளாகின்றனர்.
இனஉறுப்பு வெருளி. திருமண வெருளிக்கும் காரணமாகிறது.
Koro = சுருங்கல். இன உறுப்புச் சுருக்கத்தைக் குறிக்கிறது.
00

இனிப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் இனிப்பு வெருளி.
இனிப்பு மிகுதிாக உண்டால்,பற்கள் சொத்தையாகும்; சளி, இருமல், காய்ச்சல் ஏற்படும்;
உடலில் மந்தத்தன்மை அதிகரிக்கும்; பசிமந்தம், அரைகுறை செரிமானம் முதலான பாதிப்புகள் நேரிடும்; உடல்எடை கூடலாம்; நோய் எதிர்ப்பாற்றல் குறையும்; தொண்டைசார்ந்த நோய்கள் ஏற்படும்; சுவையின்மை உருவாகும்; தொற்றுநோய்கள் எளிதாகவும், விரைவாகவும் தொற்றும்;உடலில் கெட்ட கொழுமியம்(Cholesterol) அதிகரிக்கும்; எலும்பு வலுக்குறையும் எனக் கருதி இனிப்பு உண்ண அச்சம் கொள்வர். இனிப்பு மிகுதியாக உண்டால் நீரிழிவு நோய் வரும் என அஞ்சி அது தொடர்பான தீமைகளைக் கருதி அஞ்சுவர். இனிப்பைக் குறைவாக உண்ண வேண்டும் என்பதே உண்மை. என்றாலும தொடர்பான அளவற்ற பேரச்சம் இனிப்பு வெருளியை உண்டாக்குகிறது.
00

இனிப்புருண்டை(gumball)மீதான மிகையான பேரச்சம் இனிப்புருண்டை வெருளி.
இனிப்பு உருண்டையை உண்பதால் மேலே குறிப்பிட்டவாறு இனிப்பு உண்பதால் ஏற்படும் தீமைகளைக் கருதி அஞ்சுவர். இனிப்பு வெருளி(Dulciphobia / Suaviphobia) உள்ளவர்களுக்கு இனிப்பு உருண்டை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00