வெருளி நோய்கள் 376-380 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 371-375 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 376-380
- இன்கண்டு வெருளி – Xocolataphobia
இன்கண்டு(chocolate)பற்றிய அளவற்ற பேரச்சம் இன்கண்டு வெருளி.
‘சாக்கலேட்டு’ அல்லது ‘சாக்கொலேட்டு’ என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இது மத்தியக் கால அமெரிக்கச் சொல் ஆகும். கல்கண்டு என்பதன் அடியொற்றி இதன் இனிப்புச் சுவை அடிப்படையில் தமிழில் இன்கண்டு எனலாம்.
00
- தித்தி வெருளி – Caramelaphobia, Karamelaphobia
தித்தி (candy) குறித்த வரம்பற்ற பேரச்சம் தித்தி வெருளி.
‘மிட்டாய்’ என்பது தமிழ்ச்சொல்லல்ல. karamela என்னும் கிரேக்கச் சொல்லை இன்பண்டம், தித்தி எனச் சொல்லலாம். எனினும் chocolate என்பதை இன்கண்டு எனக் குறித்துள்ளதால் இதனைத் தித்திப்பு என்னும் பொருளுடைய தித்தி எனக் குறித்துள்ளேன்.
00
- இன்கூழ் அவரை வெருளி – Jellybeanphobia
இன்கூழ் அவரை(Jellybean)பற்றிய அளவுகடந்த பேரச்சம் இன்கூழ் அவரை வெருளி.
Phasellusipsumophobia என்றும் சொல்வர். இதன் பொருளும் இன்கூழ் அவரை என்பதுதான்.
இன்கூழ் அவரையின் வடிவத்தைப் பார்த்தும் சுவையை விரும்பாமலும் இதன்மீது பேரச்சமும் பெரு விருப்பும் கொள்வோர் உள்ளனர்.
இனிப்பு வெருளி(Dulciphobia / Suaviphobia) உள்ளவர்களுக்கு இன் கூழ் அவரை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
- இன்தயிர் வெருளி – Giaourtiophobia
இன்தயிர்(yogurt) மீதான மிகையான பேரச்சம் இன்தயிர் வெருளி.
இன்தயிரில் கலக்கப்படும் பாலினிமம், நல்ல நுண்ணுயிரி போன்றவற்றாலும் இதனை வெறுத்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
giaourtio, என்னும் கிரேக்கச் சொல்லிற்கு இன்தயிர் எனப் பொருள்.
00
- இன்பண்ட இயந்திர வெருளி – Yrouxphobia
இன்பண்ட இயந்திரம்(gumball machine) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இன்பண்ட இயந்திர வெருளி.
Yroux என்றால் இன்பண்ட இயந்திரம் என்று பொருள்.
இன்பண்டம் மீது விருப்பம் இருந்தாலும் இன்பண்ட இயந்திரத்தால் மிகுதியான இன்பண்டம் பெற முடிவதால் இனிப்பு வெருளி உள்ளர்களுக்கும் தித்திப்பு வெருளி உள்ளவர்களுக்கும் இன்பண் இயந்திரம் மீது அளவு கடந்த வெறுப்பும் பேரச்சமும் ஏற்படுகின்றன.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
Leave a Reply