(வெருளி நோய்கள் 461 – 465 : தொடர்ச்சி)

ஊக்கிசை (Jazz Music) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஊக்கிசை வெருளி.
முதலில் அகராதிப் பொருள் அடிப்படையில் ஆரவார இசை எனக் குறிப்பிட்டிருந்தேன். இயாசு / jazz என்பதன் மூலப் பொருள் ஊக்கம் என்பதாகும். எனவே, ஊக்குவிக்கும் இவ்விசையை ஊக்கிசை எனக் குறித்துள்ளேன்.
00

ஊஞ்சல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊஞ்சல் வெருளி.
ஊஞ்சல் ஆடும் பொழுது கீழே விழ நேரிடலாம், ஊஞ்சல் சுற்றிக் கொள்வதால் மயக்கம் வரலாம், போன்ற கவலகளால் பேரச்சம் கொள்கின்றனர்.
ஊசல் வெருளி(Pendulaphobia) உள்ளவர்களுக்கு ஊஞ்சல் வெருளி வர வாய்ப்பு உள்ளது.
kounயo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அசைதல்.
இச்சொல்லில் இருந்துதான் அசையும் ஊஞ்சலைக் குறிக்கும் என்னும் சொல் உருவானது.

ஊடகம் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊடக வெருளி.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது, செய்தித்தாள்களைப் படிப்பது இணையத்தில் உலாவுவது என ஊடகச் செயல்பாடுகளின்மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.

சிறுவர்கள் சில நேரங்களில் பெரியவர்களும் துயரச் செய்திகளைப் பார்க்க அல்லது கேட்க நேருவதால் ஊடகம் மீது வெறுப்பு கொள்வது உண்டு. அரசியல் வாதிகளும் புகழ் வாணர்களும் அதிகாரிகளும் பிறரும் ஊடகத்தில் தங்களைப்பற்றிய தவறான செய்தி வெளிவருதல் அல்லது கமுக்கமான செய்தியை வெளிக் கொணர்தல் ஆகியன் நேர்ந்தால் அல்லது நேரும் என அறிய வந்தால், அல்லது அவ்வாறு வந்த செய்தி மேலும் விரிவாக வந்து அவமானத்தை ஏற்படும் என அஞ்சினால் ஏற்படும் பேரச்சமே இது.

00

ஊட்டா (Utah) மாநிலம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ஊட்டா வெருளி.
இது, 4.01.1896 இல் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 45ஆவதாகச் சேர்ந்த மாநிலமாகும். இம்மாநில மக்கள், பழக்க வழக்கங்கள், நாகரிகக் கூறுகள், பொருள்கள், அடையாளங்கள் என ஊட்டா தொடர்பானவற்றில் ஏற்படும் தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00

ஊது சுடர்[blow torche blowlamp (UK) ] குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊது சுடர் வெருளி.
ஊது சுடர் என்பது பொற்கொல்லர்களாலும் கம்மியர்களாலும் பயன்படுத்தப்படுவதாகும். விழிப்புடன் கையாளாவிட்டால் உடலில் பட்டுத் தீக்காயங்கள் அல்லது வேறு இடர்களை உருவாக்கி விடும். எனவே, கவனமாகக் கையாள்வது குறித்துக் கவலைப்பட்டும் பயன்படுத்தத் தெரியாதவர் யாரும் பயன்படுத்தி இன்னல் நேருமோ என்றும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00

(தொடரும்)