வெருளி நோய்கள் 564-568: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 559-563: இலக்குவனார் திருவள்ளுவன்)
564. ஒவ்வாமை குறுமி வெருளி – Erisphobia
ஒவ்வாமை குறுமி(dwarf planet Eris) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒவ்வாமை குறுமி வெருளி.
dwarf என அழைக்கப்படுவதை உயர்திணை போல குள்ளன் என்பது தவறு. dwarf planet என்பதைக் குறுங்கோள் >குறுமி எனச்சொல்ல வேண்டும்.
00
565. ஒவ்வாமை வெருளி-Anaphylaxophobia /Allergiphobia
ஒவ்வாமை(Allergy) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒவ்வாமை வெருளி.
உணவு ஒவ்வாமை, பயன்பாட்டுப் பொருள் ஒவ்வாமை, வளர்ப்பு விலங்குகள் அல்லது பறவைகள் ஒவ்வாமை போன்ற பல ஒவ்வாமைகள் உள்ளன. இவற்றால் வரும் பிற நோய்கள் குறித்துக் கவலையுற்று அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
566. ஒழுங்கின்மை வெருளி – Ataxophobia
உடல்குலைவு/ஒழுங்கின்மை தொடர்பான வரம்பற்ற பேரச்சம் ஒழுங்கின்மை வெருளி.
a என்னும் கிரேக்கச் சொல்லிற்கு இல்லை எனப் பொருள். taxo என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஒழுங்கு எனப் பொருள்.
00
567. ஒளியூடாப் பொருள் வெருளி – Adiafanophobia
ஒளி யூடாப் பொருள்(opaque object) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒளியூடாப் பொருள் வெருளி.
மரங்கள், மாழைகள், செங்கல், பைஞ்சுதை முதலிய ஒளி ஊடாப் பொருள்கள் மீது காரணமற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
00
568. ஒளி விலகல் வெருளி – Diathlasophobia
ஒளி விலகல்/கதிர்ச்சிதர்வு(refraction) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒளி விலகல் வெருளி.
சிலர் ஒளிவிலகலை ஒளிமுறிவு என்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
Leave a Reply