வெருளி நோய்கள் 674-678: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 669-673: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 674-678
674. கருவண்ண வெருளி-Melanophobia
கருநிறத்தைக் கண்டு ஏற்படும் தேவையற்ற பேரச்சம் கருவண்ண வெருளி.
கரு வண்ணத்தைத் துயரத்தின் அடையாளமாகக் கருதுவதாலும் துன்பத்தின் குறியீடாகக் கருதுவதாலும் சிலருக்குக் கரு வண்ணத்தைக் கண்டால் வெறுப்பும் அச்சமும் வருகிறது.
பல நாடுகளில் நீதிமன்றங்களில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் முதலானவர்களின் மேலாடையின் நிறம் கருப்பு. இது அங்கே அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதனாலும் கருப்பு நிறம் கண்டு பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
கருப்புதான் எனக்குப்பிடித்த வண்ணம் என்ற முறையில் வெற்றிக்கொடி கட்டு என்னும் திரைப்படத்தில் பா.விசய் பாடல் இடம் பெற்றிருக்கும். இதுபோன்ற எண்ணங்கள் வளர்ந்தால் கருநிறம் மீதான பேரச்சம் விலகும்.
melano என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கருப்பு நிறம்.
00
675. கருவி வெருளி – Ergaleiophobia
கருவி குறித்த வரம்பற்ற பேரச்சம் கருவி வெருளி.
கருவியைப் பயன்படுத்தும் பொழுது வரும் தேவையற்ற மிகையச்சம் கருவிப்பயன்பாட்டு வெருளி. கருவியைப் பார்த்தாலே வரும் காரணமற்ற பேரச்சம் கருவி வெருளி.
காண்க: கருவிப்பயன்பாட்டு வெருளி(Ergaleophobia)
00
676. கருவிப்பயன்பாட்டு வெருளி – Ergaleophobia
கருவிப்பயன்பாடு குறித்த வரம்பற்ற பேரச்சம் கருவிப்பயன்பாட்டு வெருளி.
கருவியைப் பார்த்தாலே வரும் காரணமற்ற பேரச்சம் கருவி வெருளி. கருவியைப் பயன்படுத்தும் பொழுது வரும் தேவையற்ற மிகையச்சம் கருவிப்பயன்பாட்டு வெருளி.
காண்க: கருவி வெருளி(Ergaleiophobia)
00
677. கருவிப் பெட்டி வெருளி – S🐦gmophobia
கருவிப் பெட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கருவிப் பெட்டி வெருளி.
கருவி வெருளியும் கருவிப்பயன்பாட்டு வெருளியும் உடையவர்களுக்குக் கருவிப்பெட்டி வெருளி இருக்க வாய்ப்புள்ளது.
காண்க: கருவியக வெருளி(D🚀ntophobia)
00
678. கருவியக வெருளி – D🚀ntophobia
கருவிக் கொட்டகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கருவிக் கொட்டக வெருளி.
கருவிப்பெட்டி எடுத்துச் செல்லக்கூடியதாகவும் ஊர்திமனை முதலான இடங்களில் மாட்டி வைத்திருக்கக் கூடியதாகவும் உள்ளன.
காண்க: கருவிப் பெட்டி வெருளி(S🐦gmophobia)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply