வெருளி நோய்கள் 746-750: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 742-745 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 746-750
- கார மண வெருளி – Aromaphobia
கார நறுமண உணவு(spices and spicy food) குறித்த வரம்பற்ற பேரச்சம் கார மண வெருளி.
Aroma என்னும் செருமானியச் சொல்லின் பொருள்கள் நறுமணம், நறுஞ்சுவை.
00
- காரச்சோமாரி வெருளி – Chotdonkphobia
காரச்சோமாரி(hot dog) குறித்த வரம்பற்ற பேரச்சம் காரச்சோமாரி வெருளி.
Chotdonk என்றால் காரச்சோமாரி எனப் பொருள்.
00
- கார்ஃபீல்டு வெருளி – Garfieldphobia
புனைவுரு கார்ஃபீல்டு(Garfield) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கார்ஃபீல்டு வெருளி.
சிம் தேவிசு(Jim Davis) என்பவரால் உருவாக்கப்பட்ட கார்ஃபீல்டு என்னும் படத்தின் முதன்மைப் பாத்திரமாக வரும் கற்பனைப் பூனையே கார்ஃபீல்டு.
00
- கார்லோசு வெருளி – Carlosphobia
புனைவுரு கார்லோசு இரமான் (Carlos Ramon) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கார்லோசு வெருளி.
கார்லோசு வாக்கர்வில் தொடக்கப்பள்ளி(Walkerville Elementary School)யின் மாணவன்.
00
- காலக் கடப்பு வெருளி -Telochronophobia
காலக் கடப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் காலக் கடப்பு வெருளி.
Telo என்றால் முடிவு என்றும் chrono என்றால் காலம் என்றும் பொருள். இணைந்து காலம் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தைக் குறிக்கிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply