வெருளி நோய்கள் 756-760: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 751-755: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 756-760
- காலியறை வெருளி – Kenophobia
காலியாக உள்ள அறை குறித்த தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் காலியறை வெருளி.
காலி என்பது அறிவியல் சார்ந்த நல்ல தமிழ்ச்சொல். அறை வெறுமையாக உள்ளது அல்லது வெற்றிடமாக உள்ளது என்று சொல்கிறோம். ஆனால் அறையில் காற்று உள்ளதே! அப்படி என்றால் அறையில் ஒன்றுமில்லை, வெற்றறை என்பது தவறல்லவா? எனவேதான் வேறு பொருள் இல்லை, ஆனால் காற்று உள்ளது என்னும் பொழுது கால்(காற்று)+இ=காற்றை உடையது என்னும் பொருளில் காலி என்கின்றனர்.
காலி அறை என்றில்லை. திடலாகவும் திறந்த வெளியாகவும் காலியாக இருந்தால் இத்தகையோர் பேரச்சம் கொள்வர். தனிமை மீதான அச்சம் கொள்பவர்களுக்குக் காலி யறை வெருளி வருகிறது.
keno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வெறுமை.
00
- காலுறை வெருளி – Kaltsaphobia
காலுறை(sock) குறித்த வரம்பற்ற பேரச்சம் காலுறை வெருளி. knismatophobia என்றும் சொல்லப்படும்.
காலுறைகள் அழுக்கு படிந்து அல்லது ஈரமாக இருந்து நோய்கள் பரவும் என்பதால் அவற்றைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் உணர்வு இன்றி வெருளிக்கு ஆளாவர்.
Kaltsa என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காலுறை எனப் பொருள்.
00
- காலை 8.00 மணி வெருளி – Oktooraphobia
காலை 8.00 மணி குறித்த தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் காலை 8.00 மணி வெருளி.
காலை 8.00 மணிக்கு அலுவலகத்திற்கு அல்லது பள்ளிக்கூடத்திற்கு அல்லது தொழிலகத்திற்குச் சரியாகப் புறப்பட வேண்டும் என்ற கவலையால் வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
- காலை வெருளி -Proiphobia
காலைப் பொழுது குறித்த வரம்பற்ற பேரச்சம் காலை வெருளி.
காலைக்கடன்களை முடிக்க வேண்டும், கல்விக்கூடத்திற்கு அல்லது பணியிடத்திற்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டியது தொடர்பாக ஏற்படும் வெருளி.
காண்க: வைகறை வெருளி(Eosophobia), காலை 8.00 மணி வெருளி (Oktooraphobia)
00
- கால் முட்டி வெருளி – Genuphobia /Gonatophobia/Kneemaphobia
முழங்கால் மூட்டு / முட்டிக்கால் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கால் முட்டி வெருளி.
முட்டிக்கால் வெருளி/முழங்கால் வெருளி எனத் தனித்தனியே குறித்திருந்ததை மாற்றிச், சுருக்கமாக மூட்டு என்ற ஒற்றைச் சொல்லைப்பயன்படுத்தி இப்பொழுது குறிப்பிட்டுள்ளேன்.
genu என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் முழங்கால் முட்டு.
காண்க : மூட்டு வெருளி(Ankylophobia)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply