(வெருளி நோய்கள் 801-805: தொடர்ச்சி)

குச்சிப் பனி மீதான மிகையான பேரச்சம் குச்சிப் பனி வெருளி .
இதனை உருவாக்கும் நிறுவனப் பெயரில் பாப்புசிக்கில் வெருளி என்றும் சொல்வதுண்டு.
00

குடல் செயல்பாடு தொடர்பான அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் குடலியக்க வெருளி.
Defecalgesiophobia என்றால் குடல் நோவு வெருளி எனலாம். எனினும் ஒத்த பொருளை இருவகையாகச் சொல்வதை விடக் குடலிறக்க வெருளி என்றே அழைக்கலாம்.
de என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் இருந்து / இடத்திலிருந்து/முதலாக முதலியன. fec என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குடலினின்றும் வெளிப்படுத்தப்படும் கழிவுப்பொருள். எனவே, மல வெருளியாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் மல வெருளி(Rhypophobia) எனத் தனியாகக் குறிப்பதால் இதனை இவ்வாறே குறிக்கலாம்.
aloesio / algesio என்னும் கிரேக்கச் சொற்களின் பொருள் நோவு.
00

தலைவர்கள் குறித்த அளவுகடந்த பேரச்சம் குடிக்கோ வெருளி.
அமைப்புகள், உள்ளாட்சிகள் தலைவர்கள் மட்டுமல்லாமல் நாட்டுத்தலைவர் குறிதத பேரச்சம் முதன்மையானது. குடிமக்கள் தலைவர் என்பதால் குடிக்கோ எனப்படுகிறது.
00

குடித்து மகிழ்ந்த பொழுது நிகழ்ந்த எதுவும் நினைவில் இல்லாமல் பேரச்சம் கொள்வது குடிப்பொழுது வெருளி
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
.(குறள் 929)
என்கிறார் திருவள்ளுவர்.

அஃதாவது, கள்ளுண்டு மயங்கியவனைத் தெளிவிப்பது என்பது நீருள் உள்ளவரைத் தீ விளக்கு கொண்டு தேடுவது போன்றது என்கிறார். அத்தகையவனுக்கு எங்ஙனம் குடித்துக் கும்மாளமிட்டதும் அல்லது சண்டையிட்டதும் நினைவில் இருக்கும்? எனவேதான், குடித்து மயங்கியவன் காலையில் எழுந்ததும் அதற்கு முன்னர்க் குடித்த பொழுது நிகழ்ந்ததை மறந்து விடுகிறான்.
Mane + post என்பதற்கு இலத்தீனில் காலைக்குப் பின்னர் எனப் பொருள்.
00

(தொடரும்)