வெருளி நோய்கள் 866-870: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 861-865: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 866-870
- குறளன் வெருளி – Achondroplasiaphobia / Lollypopguildophobia
உறுப்பு அளவுகள் இயல்பிற்கு மாறாகக் குறைந்துள்ள குறளன்/குறளி(midgets) தொடர்பான தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் குறளன் வெருளி.
குள்ளவாதம், குறுநிலை என்று இதனை அழைக்கின்றனர். பொதுவாக அகவை வந்தும் 147 சிறுகோல்/செ.மீ. அளவிற்குக் குறைவானவர்களே இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். இவர்களுள் சிலர் சற்று உயரமாக இருந்தாலும் கை, கால் உறுப்புகள் வழக்கத்திற்கு மாறாகக் குறு நிலையிலேயே இருக்கும்.
00
- குறிகை வெருளி – Simaphobia
குறிகை குறித்த வரம்பற்ற பேரச்சம் குறிகை வெருளி.
அடையாளமாகக் காட்டப்பெறும் குறிகை தவறாக இருக்குமோ அதனால் தீய விளைவுகள் வருமோ என்ற தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
Sima என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் குறிகை(Signal) எனப் பொருள்.
00
- குறிக்கோல் வெருளி – Markadorophobia
குறிக்கோல் (marker) குறித்த வரம்பற்ற பேரச்சம் குறிக்கோல் வெருளி.
குறிக்கோல்களின் மிகுதியான விலை, விரைவில் காய்ந்து போகும் தன்மை, அவற்றால் ஏற்படும் ஒவ்வாமை முதலியவற்றால் குறிக்கோல்கள் மீது வெருளி ஏற்படுகிறது.
00 - குறிப்பலகை வெருளி – Dartboardphobia
குறிப்பலகை(Dartboard) குறித்த வரம்பற்ற பேரச்சம் குறிப்பலகை வெருளி.
குறிப்பலகையில் வைக்கும் குறி தப்பிப்போகுமோ தவறிப்போவதால் யாருக்கேனும் இடர் விளையுமோ என்று வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
- குறிப்பிட்ட நோய் வெருளி – Monopathophobia
உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நோய் இருப்பதாகக் காரணமின்றி அளவுகடந்த மிகை அச்சம் கொள்வது குறிப்பிட்ட நோய் வெருளி.
இதனை நோய் வெருளியில் சேர்க்கலாம். ஆனால், நோய் வெருளி என்பது பொதுவாக நோய்களைப்பற்றிய வெருளி என்பதால், குறிப்பிட்டநோய்பற்றி மட்டும் ஏற்படும் அளவுகடந்த பேரச்சத்தைக் குறிப்பிட குறித்த நோய் வெருளி எனத் தனியாக வகைப்படுத்தி உள்ளனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply