(வெருளி நோய்கள் 876-880: தொடர்ச்சி)

குறை வுணா (junk food) மீதான மிகையான பேரச்சம் குறை வுணா வெருளி.
குறை வுணா என்றால் குறைந்த அளவு உணவு என்று கருதாமல் குறைந்த அளவு ஊட்டமுள்ள சிற்றுணா எனக் கொள்ள வேண்டும்.
junk, cibus ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு முறையே சிறுமை, உணவு எனப் பொருள்.
00

தாளில் எழுதத் தொடங்கி அல்லது வரையத் தொடங்கி முற்றுப்பெறாமல் அரைகுறையாக விடப்படும் குறைபடைப்புத் தாள் குறித்த அளவு கடந்த பேரச்சம் குறை தாள் வெருளி.
தாள் வெருளியிலும் வெற்றுத்தாள் வெருளியிலும் இஃது அடங்கும்.
00

இதயத் துடிப்பு எண்ணிக்கை குறைவதால் இறப்பு நேரிடும் என்று அளவுகடந்து பேரச்சம் கொள்வது குறைத் துடிப்பு வெருளி
ஒரு நிமையத்திற்கு நெஞ்சு 72 முறை துடிப்பதே இயல்பான நிலையாகும். இருப்பினும் அகவை வேறுபாட்டு அடிப்படையிலும் ஆண், பெண் வேறுபாட்டு அடிப்படையிலும் மாறுபடலாம். இது 100க்கும் கூடுதலாக இருக்குமாயின் அதை மிகைத் துடிப்பு நோய் எனவும் 60க்கும் குறைந்தால் குறைத் துடிப்பு நோய் (bradycardia) என்றும் கூறுவர். குறைத்துடிப்பு குறிதத வெருளியே இது.
பழங்கிரேக்கத்தில் Brady (bradணs) என்றால் மெதுவான என்றும் cardia (kardஅa/καρδία) என்றால் நெஞ்சு/இதயம் என்றும் பொருள்கள்.
00

பார்வைக் குறைபாடு குறித்த அளவுகடந்த பேரச்சம் குறைபார்வை வெருளி.
பார்வையில் குறை நேரும் பொழுது ஏற்படும் அளவு கடந்த பேரச்சம், நிலையாகக் குருடாகி விடுவோம் என்ற அச்சம், பார்வையின்மை ஏற்பட்டுப் பெருந்துன்பம் நேரும் என்ற பேரச்சம் எனப்பார்வை குறைபாடு வந்தால் நீக்குவது குறித்துக் கருத்து செலுத்துவதை விட அதன்தீமை குறித்தே அஞ்சிக் கொண்டிருப்பது போன்றவை.
குருட்டு வெருளி என்பதையும் முதலில் குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு நேரடியாகச் சொல்வதைத் தவிர்ப்பதற்காக இப்பொழுது அதை நீக்கி விட்டேன்.
scotoma என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பார்வையின்மை.
00

கூச்சம்பற்றிய காரணமற்ற அளவு கடந்த பேரச்சம் கூச்ச வெருளி.
இறகு வெருளி(Pteronophobia) உடன் ஒப்புமையுடையது என்றாலும் வேறுபட்டது. இறகு வெருளி என்பது மயிலிறகு போன்ற இறகால் வருடிக் கூச்சம் ஊட்டுவதைக் குறிக்கும். எப்பொருளால் தொட்டாலும் கை கால்களால் தீண்டினாலும் பூச்சிகள் ஊர்ந்தாலும் ஏற்படும் கூச்சம் குறித்த பேரச்சம் கூச்ச வெருளி.
gargala என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கூச்சமூட்டு.
00