இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து

ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018     ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகம்(Liverpool Hope University)  இங்கிலாந்து  இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு  SECOND INTERNATIONAL CONFERENCE ON THIRUKKURAL AS AN ETHICAL CORPUS OF UNIVERSAL APPEAL     கருப்பொருள்:  தமிழ் இந்தியாவின் எல்லை கடந்த திருக்குறள் ThirukkuRal beyond the frontiers of Tamil India    கருத்தரங்கத் தலைப்புகள் (வரிசை எண் ங எழுத்திலிருந்து தொடங்கப்பெற்றுள்ளது) ங.திருக்குறளும் அறநெறி இலக்கியத்தின் தொடக்கத் தொகுப்பும் திருக்குறள் மீதான…

திருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை; 125. நெஞ்சொடு கிளத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை  3.  காமத்துப் பால்    15.   கற்பு இயல்    126.  நிறை அழிதல் மனத்துயரை அடக்க முடியாமல், தலைவி வாய்விட்டுப் புலம்புதல்.    (01-10 தலைவி சொல்லியவை) காமக் கணிச்சி உடைக்கும், நிறைஎன்னும்       நாணுத்தாழ் வீழ்த்த கதவு. நாணத்தாழ்ப்பாள் கொண்ட கற்புக்கதவைக், காதல்எனும் கோடரி உடைக்கும்.   காமம்என ஒன்றோ? கண்இன்(று),என் நெஞ்சத்தை,       யாமத்தும் ஆளும் தொழில். இரக்கம்இலாக் காதல், என்நெஞ்சை, நள்ளிரவிலும் அடக்கி…

திருக்குறள் அறுசொல் உரை : 125. நெஞ்சொடு கிளத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை; 124. உறுப்பு நலன் அழிதல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் கற்பு இயல் 125. நெஞ்சொடு கிளத்தல்   பிரிவுத்துயர் மிகுதியைத் தலைவி, தனது நெஞ்சுக்குச் சொல்லுதல்.   (01-10 தலைவி சொல்லியவை) நினைத்(து)ஒன்று சொல்லாயோ? நெஞ்சே! எனைத்(து)ஒன்றும்,       எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே! என்துயரைத் தீர்க்கின்ற மருந்துஒன்றைச் சிந்தித்துச் சொல்லாயோ?   காதல் அவர்இலர் ஆக,நீ நோவது,       பேதைமை வாழிய!என் நெஞ்சு. நெஞ்சே! காதலர்க்குக் காதல்தான் இல்லையே! நீஏன் வருந்துகிறாய்?   இருந்(து)உள்ளி…

திருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் தொடர்ச்சி)       திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல் 124.உறுப்பு நலன் அழிதல் பிரிவைப் பொறாத தலைவியது கண்,தோள் நெற்றிஅழகு கெடுதல்.   (01-07 தலைவி சொல்லியவை)         .      சிறுமை நமக்(கு)ஒழியச், சேண்சென்றார் உள்ளி,       நறுமலர் நாணின கண். பிரிவால் அழகுஇழந்த கண்கள், அழகுக்குவளை கண்டு வெட்கும்.   நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்,       பசந்து பனிவாரும் கண். நிறம்மாறி நீர்சிந்தும் கண்கள்,…

திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்    15. கற்பு இயல் 123.  பொழுது கண்டு இரங்கல்       பிரிந்த காதலர், துயர்மாலைப் பொழுது கண்டு மனம்வருந்தல். (01-10 தலைவி சொல்லியவை) மாலையோ அல்லை; மணந்தார் உயிர்உண்ணும்       வேலைநீ; வாழி! பொழுது. மாலையே நீ பொழுதே இல்லை; பிரிந்தார் உயிர்குடிக்கும் கூர்வேல்.   புன்கண்ணை வாழி! மருள்மாலை; எம்கேள்போல்,       வன்கண்ண தோநின் துணை? மாலையே!  நீஏன் வருந்துகிறாய்?…

திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் : வெ. அரங்கராசன

(திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல் :  தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15.கற்பு இயல் 122. கனவு நிலை உரைத்தல்   தலைவி, தான்கண்ட கனவு நிலைகளை, எடுத்து மொழிதல்.   (01-10 தலைவி சொல்லியவை) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு,       யாதுசெய் வேன்கொல் விருந்து? காதலர் வரவைக் கூறிய கனாத்தூதுக்கு, என்ன விருந்திடுவேன்?   கயல்உண்கண், யான்இரப்பத் துஞ்சின், கலந்தார்க்(கு),       உயல்உண்மை சாற்றுவேன் மன். கண்கள் தூங்கின், நான்வாழ்வதைக் காதலர்க்குக்…

திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல்  நினைந்தவர் புலம்பல்    இருவரும் கூடிப்பெற்ற இன்பத்தைப், பிரிவினில் நினைந்து புலம்புதல்.   (01-02 தலைவன் சொல்லியவை)  உள்ளினும், தீராப் பெருமகிழ் செய்தலால்,       கள்ளினும், காமம் இனிது. காதலை, நினைத்தாலே இனிக்கும்; கள்ளைவிடவும், காதலே இனிக்கும்.   எனைத்(து)ஒன்(று) இனிதேகாண், காமம்;தாம் வீழ்வார்       நினைப்ப, வருவ(து)ஒன்(று) இல். காதலியை நினைத்தாலே துன்பம் வாராதே; காதல்தானே இனிது.   [03-10 தலைவி…

திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல்தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி   திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால்  15.கற்பு இயல்   120. தனிப்படர் மிகுதி   பிரிந்து  தனித்து  இருக்கும்    தலைவியிடம்  படரும்  மிகுதுயர்   (01-10 தலைவி சொல்லியவை)                    தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர், பெற்றாரே       காமத்துக் காழ்இல் கனி. காதலிப்பார் காதலிக்கப்பட்டால், அக்காதல், விதைகள் இல்லாச் சுவைப்பழம்.   வாழ்வார்க்கு வானம் பயந்(து)அற்(று)ஆல், வீழ்வார்க்கு       வீழ்வார்…

திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல்    திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல்  பசப்புஉறு பருவரல்   பிரிந்த தலைவி, தன்உடலின் நிறமாற்றம் கண்டும், வருந்துதல்.   (01-10 தலைவி சொல்லியவை)         நயந்தவர்க்கு, நல்காமை நேர்ந்தேன்; பசந்தஎன்       பண்புயார்க்(கு) உரைக்கோ பிற? பிரிவுக்கு ஒப்பினேன்; பசலை படர்ந்தது; யாரிடம் உரைப்பேன்?   அவர்தந்தார் என்னும் தகையால், இவர்தந்(து),என்       மேனிமேல் ஊரும்…

திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 117. படர் மெலிந்து இரங்கல் தொடர்ச்சி)     திருக்குறள் அறுசொல் உரை  3. காமத்துப் பால்  15.கற்பு இயல்  கண் விதுப்பு அழிதல் காதலனைக் காணும் வேட்கையால், காதலியின் கண்கள் துடித்தல்.   (01-10 தலைவி சொல்லியவை) கண்தாம் கலுழ்வ(து), எவன்கொலோ? தண்டாநோய்,       தாம்காட்ட யாம்கண் டது.         தீராத்துயர் ஆக்கிய கண்களே!         நீங்கள், அழுவது ஏனோ? தெரிந்(து)உணரா நோக்கிய உண்கண், பரிந்(து)உணராப்       பைதல் உழப்ப(து) எவன்?         விளைவை ஆராயாமல் கண்டகண்,…

1 2 9