(வெருளி நோய்கள் 426-430 தொடர்ச்சி)

உயிரிய மணிப்பொறி (biological clock) தொடர்பான அளவுகடந்த கவலையும் பேரச்சமும் உயிரிய மணிப்பொறி வெருளி
00

    உயிருடன் அடக்கம் செய்யப்படுவோமோ என்ற பெருங்கவலையும் பேரச்சமும் உயிருடன் அடக்க வெருளி.
    இதை முதலில் உயிருடன் புதைதல் வெருளி எனக் குறித்திருந்தேன். ஆனால் புதைவு வெருளி எனத் தனியாகக் குறித்துள்ளதால் இவ்விரண்டிற்கும் குழப்பம் வரக்கூடாது என்றே உயிருடன் அடக்கம் வெருளி என இப்போது குறித்துள்ளேன்.
    Subterranea நிலத்தடி எனப் பொருள்; premorte என்றால் இறப்பிற்கு முன் எனப் பொருள்; இணைந்து இறப்பிற்கு முன் நிலத்தடியில் அடக்கம் செய்யப்படுதல் எனப் பொருளாகிறது.
    இது குறித்த வெருளியே இவ்வெருளி. இதனைச் சியார்சு வாசிங்குடனின் புதைவுவெருளி(George Washington’s taphophobia) என்றும் சொல்வர். சியார்சு வாசிங்கு்டன் இறக்கும் தறுவாயில் (14.02.0979)தன் செயலர் தோபியாசு இலியரிடம்(Tobias Lear) தான் இறந்ததாக அறிவித்தாலும் இருநாள் அடக்கம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். உயிருடன் அடக்கம் செய்யப்படுவோம் என்ற அச்சம் அவருக்கிருந்ததால் இத்தகைய வெருளி சியார்சு வாசிங்குடனின் புதைவு வெருளி எனப்பட்டது. அடக்கம் செய்யப்படுவோம் என அஞ்சியதால் இதை வாசிங்குடனின் அடக்க வெருளி என்பதே சரி.
    00

    உயிர்ப்பிக்குறுமி(dwarf planet Makemak) குறித்த வரம்பற்ற பேரச்சம் உயிர்ப்பிக்குறுமி வெருளி.
    dwarf என்றால் குள்ளன் எனக் குறிக்கின்றனர். அஃறிணையை உயர்திணையாகக் குறிப்பது தவறு. சிலர் குறுங்கோள் என்கின்றனர். குறுமி என்பது சரியாகும். இக்குறுமிக்கு உயிர்ப்புத் தீவில் வழங்கும் இரப்பா நூயி(Rapa Nui) மொழியில் கருவுயிர்ப்பிக் கடவுள் எனப் பொருள்.

    00

    உயர்நிலைப்பள்ளி குறித்த வரம்பற்ற பேரச்சம் உயர்நிலைப்பள்ளி வெருளி.
    தொடக்கப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளி செல்லும் பொழுது மேல் ஆசிரியர்களின் கண்டிப்பு குறித்து அஞ்சி உயர்நிலைப்பள்ளி வெருளி வருகிறது.
    கற்கை வெருளி(Sophophobia) உள்ளவர்களுக்கு உயர்நிலைப்பள்ளி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
    Hisk என்றால் உயர்நிலை. இங்கே உயர்நிலைப்பள்ளி.

    00

    உருசியா தொடர்பானவற்றில் ஏற்படும் அளவுகடந்த அச்சம் உருசிய வெருளி.

    உருசியா அல்லது உருசிய மக்கள் அல்லது உருசியப் பண்பாடு, உருசியப் படைப்பாளிகள் என உருசியா தொடர்பானவற்றில் வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர்.
    உருசியா ஒரு பொதுவுடைமை நாடு என்ற நிலையில் பொதுவுடைமைக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் காரணமின்றி இந்நாட்டுத் தொடர்பானவற்றை வெறுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
    உருசியா இரும்புத்திரை நாடு என அழைக்கப்படுகிறது. இதனாலும் உருசிய வெருளி வருகிறது.
    உருசியா-உக்கிரைன் போர் மூண்ட பின் உருசியாவின் அச்சுறுத்தல் கண்டு அஞ்சி உருசிய வெருளி கொள்வோர் உள்ளனர்.

    இதன் எதிர் நிலைப்பாட்டை – உருசியா, உருசியா தொடர்பானற்றின்மீது நேசம் கொள்ளும் நிலையை – உருசிய நாட்டம் (Russophilia) என்பர்.
    00

    (தொடரும்)