வெருளி நோய்கள் 494-498: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 489-493: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 494-498
- எதிரொளிப்பு வெருளி – Antanaklophobia/Acatoptrophobia
எதிரொளிப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் எதிரொளிப்பு வெருளி.
கண்ணாடி தவிர, நீர்ப்பகுதி, பளபளப்பான பகுதி முதலிய பிறவற்றில் எதிரொளிப்பது குறித்து மிகை பேரச்சம் கொள்கின்றனர்.
00
- எதிர்கால வெருளி – Futurephobia
எதிர்காலம் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது எதிர்கால வெருளி.
பேரிடர், நேர்ச்சி போன்றவற்றால் யாரையோ எதையோ இழந்தவர்களுக்கு எதிர்கால வெருளி மிகுதியாக வருகிறது.எதிர்காலம்பற்றிய அச்சம், நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கையின்மை போன்றவற்றால் எதிர்கால வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
- எதிர்ம எழுது பலகை வெருளி – Boogieboardphobia
எதிர்ம எழுது பலகை(boogieboard) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எழுது பலகை வெருளி.
எதிருரு ஒளிர்வுக் காட்சி முறையில் எழுதப்பெறும் பலகையே இங்கு எதிர்ம எழுது பலகை எனக் குறிக்கப் பெறுகிறது.
அலை பலகையும் ‘Boogieboard’ என அழைக்கப்பெறுகிறது.
00
- எதிர்மறை எண் வெருளி – Neganumerophobia
எதிர்மறை எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் எதிர்மறை எண் வெருளி.
இலத்தீனில் negans என்றால் எதிர்மறை, numerus என்றால் எண் எனப் பொருள்.
00
- எந்திர வெருளி – Mechanophobia
எந்திரங்கள்/இயந்திரங்கள் குறித்த தேவையற்ற அச்சம் எந்திர வெருளி.
எந்திரங்களை விழிப்புடன், எச்சரிக்கையுடன் கையாளாமல் எந்திரத்தில் கை, கால் சிக்கி விடுமோ, எந்திரத்தால் இடர் வருமோ, இன்னல் வருமோ, உறுப்பு இழப்பு வருமோ, உயிருக்குக் கண்டம்/ஆபத்து வருமோ என்றெல்லாம் தேவையற்று அஞ்சுவோர் சிலர் உளர்.
mechano என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எந்திரம் / இயந்திரம்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 2/5
Leave a Reply