(வெருளி நோய்கள் 846-850: தொடர்ச்சி)

காழநீர்(காப்பி) முதலான குடிவகைகளுக்குப் பயன்படுத்தப்படும் நெகிழிக் குவளைகள் பற்றிய அளவுகடந்த பேரச்சம் நெகிழிக்குவளை வெருளி. சுருக்கமாகக் குவளை வெருளி எனலாம்.
சூடான பானங்கள் நெகிழிக் குவளைகளில் ஊற்றப்படுவது உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும். என்றாலும் இது குறித்து மிகையான பேரச்சம் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். இப்பொழுது அரசே நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதால் இத்தகைய வெருளி குறையும், மறையும். (பேரச்சம் காழநீர் மீது என்றால் காழநீர் வெருளி என்றே சொல்லலாம்.)
இப்பொழுது நெகிழி பயன்பாட்டிற்கே தடை விதிப்பதால் இனிக் குவளை வெருளி குறையலாம். என்றாலும் தாள் குவளைகளைப் பயன்படுத்தும் பொழுதும் இவ்வெருளி வரும்.
Poculum(poculo) என்னும் இலத்தீன் சொல்லிற்குக் குவளை என்று பொருள். பழைய உரோமன் மொழியில் ஏனம் என்று பொருள்.
00

  1. குழந்தை முத்த வெருளி – Baowenphobia
    குழந்தை முத்தம் குறித்த வரம்பற்ற பேரச்சம் குழந்தை முத்த வெருளி.
    குழந்தைகளை முத்தமிடும் பொழுது தலையின் உச்சியில் அல்லது பாதத்தின் மேற்பகுதியில்தான் முத்தமிட வேண்டும், உதட்டில் முத்தமிடக் கூடாது என்பன போன்ற சில வரைமுறைகள் உள்ளன. வாய் தூய்மையற்றிருப்பின் அப்பொழுது முத்தமிடுவதும் தவறாகும். இது போன்ற தகவல்களினால் குழந்தைகளுக்கு முத்தமிடும் பொழுது குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தேவையற்ற பேரச்சம் எழுவது இயற்கையே.
    00

கடுஞ்சிக்கலால் ஏற்படும் குழப்பநிலை தொடர்பான அளவற்ற பேரச்சம் குழப்ப வெருளி.
உணர்ச்சி வெருளி உள்ளவர்களுக்குக் குழப்ப வெருளி வரும் வாய்ப்புள்ளது.
00

குழி அப்பம்(waffle) குறித்த அளவுகடந்த பேரச்சம் குழி அப்ப வெருளி.
Vafla என்னும் நார்வே மொழிச்சொல்லின் பொருள் குழியப்பம்.
00