ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 238 – 257 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 206 – 237 இன் தொடர்ச்சி)
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 238 – 257
|
238. உயிரிய ஒலியியல் |
Bioacoustics |
|
239. உயிரிய நுட்பியல் |
Biotechnology |
|
240. உயிரிய நோயியல் |
Pathobiology |
|
241. உயிரிய மரபியல் |
Biogenetics |
|
242. உயிரிய மருத்துவ மரபியல் |
Biomedical genetics |
|
243. உயிரிய மருத்துவப் பொறியியல் |
Biomedical Engineering |
|
244. உயிரிய மின்னணுவியல் |
Bioelectronics / Bionics |
|
245. உயிரிய மீ ஓசையியல் |
Bioultrasonics |
|
246. உயிரிய முறைமையியல் |
Biosystematics |
|
247. உயிரிய மொழியியல் |
Biolinguistics |
|
248. உயிரிய வகைமை யியல் |
Biotypology |
|
249. உயிரிய வரலாறு |
History Of Biology |
|
250. உயிரிய வனைம நுட்பியல் |
Bioprocessing Technology |
|
251. உயிரிய வானிலை யியல் |
Biometeorology |
|
252. உயிரிய வேதி யியல் |
Biochemistry |
|
253. உயிரிய வேதி வகைப் பாட்டியல் |
Biochemical taxonomy |
|
254. உயிரியக் கால நிரலியல் |
Biochronology |
|
255. உயிரியத் தட்பியல்
உயிரியக் காலநிலைத் தொடர்பியல், உயிரிக் கால நிலையியல் எனக் கூறுகின்றனர். Climatology என்பதைச் சுருக்கமாகத் தட்பியல் எனக் குறித்துள்ளோம். ஆதலின் உயிரியத் தட்பியல் எனலாம். காண்க : தட்பியல்-Climatology |
Bioclimatology/ Bioclimatics |
|
256. உயிரியக் கணிதம் |
Biomathematics |
|
257. உயிரிய வளைசலியல்
Bionomics என்பது இருவேறுபட்ட பொருள்களைக் குறிக்கின்றன. கிரேக்கத்தில் bio என்றால் வாழ்வு என்றும் nomos என்றால் சட்டம் என்றும் பொருள். Bionomie என்னும் பிரெஞ்சுச் சொல்லிற்குச் சுற்றுப்புறச் சூழல்கள் என்பது பொருள். (இதன் ஒருமை bionomia) இதனைச் ‘சூழல் தொடர்பு பழக்க வழக்கங்கள் ஆயும் உயிர்நூற் பிரிவு’ என்கின்றனர். விளக்கமாக இருப்பினும் கலைச்சொல்லாக இல்லை. உயிரின சூழியல், உயிர்ச்சூழலியல், உயிரினச் சூழலியல், உயிரிச்சூழ்நிலை யியல், வாழ்க்கை நியமவியல் என்றும் கூறுகின்றனர்.
மேற்குறித்த சொற்களில் முதற்சொல் ஒற்றுப்பிழையுடன் உள்ளது. பிறவற்றுள் சுருங்கிய சொல்லான உயிரியச் சூழலியல் என்பது ஒத்து வருகின்றது. ecology என்பதை நாம் வளைசலியல் என்கிறோம். எனவே, இதனை உயிரிய வளைசலியல் எனலாம்.
இச்சொல் சூழலியல் தொடர்பாக மட்டுமல்லாமல், பொருளியல் ஒழுக்கத்தையும் குறிக்கிறது. இதனையே வாழ்க்கை நியமவியல் என்கின்றனர். இது வேறு பொருள் என்பதால் தனியாகப் பார்க்கலாம். காண்க: பொருள் ஒழுக்கவியல் – bionomics (2) |
Bionomics(1)/ Bioecology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000







Leave a Reply