கலைச்சொல் தெளிவோம் 49 : குழியம்-acetabulum

49.குழியம்–acetabulum
அசெட்டாபுலம்- acetabulum என்பது இடுப்பு எலும்பின் உட்குழிவான பகுதியைக் குறிக்கிறது. பந்துக்கிண்ண மூட்டுக்குழிவு(வேளா.), இடுப்பெலும்புக்குழி(உயி.), கிண்ணக்குழி(மனை.), கிண்ணக்குழிவு(மரு.), இடுப்பு எலும்புக்குழி, ஆழ்குழி(கால்.) என இதனைக் குறிப்பிடுகின்றனர். குழி(௧௭), குழிசி(௧௨), குழித்த(௭), குழித்து(௧), குழிந்த(௩), என்றும் மேலும் சிலவுமாகக் குழிபற்றிய சங்கச் சொற்கள் உள்ளன. இவைபோல் குழிவாக அமைந்த உறுப்புப் பகுதியைக் குழியம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
குழியம்-acetabulum








Leave a Reply