(வெருளி நோய்கள் 1086-1090 தொடர்ச்சி)

சூடேற்றி(heater) குறித்த வரம்பற்ற பேரச்சம் சூடேற்றி வெருளி.
சூடேற்றி குறித்து வெப்ப நாடுகளில் ஒரு வகையாகவும் குளிர் நாடுகளில் ஒரு வகையாகவும் காரணமற்ற பேரச்சம் உள்ளது. எனினும் அடிப்படையில் பயன்பாடு சார்ந்தே இப்பேரச்சம் உருவாகிறது.
00

சூட்டடுப்பு (Oven) வெருளி குறித்த வரம்பற்ற பேரச்சம் சூட்டடுப்பு வெருளி.
சிலர் காரணமின்றியே சூட்டடுப்பைப் பயன்படுத்த பேரச்சம் உள்ளதாகக் கூறுகின்றனர். சமையல் வெருளி உள்ளவர்களுக்கும் சூட்டடுப்பு வெருளி வர வாய்ப்புள்ளது.
Fourno என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சூட்டடுப்பு எனப் பொருள். Cliban என்னும் இலத்தீன் சொல்லிற்கும் சூட்டடுப்பு என்று பொருள்.
00

சூரல்(Fern) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சூரல் வெருளி.
Fern என்னும் சிற்றிலைப் படர் செடியினத்தைப் பெரணி என்கின்றனர். அயற்சொல்லைத் தமிழ் வடிவில் மாற்றியுள்ளனரே தவிர தமிழ்ச் சொல்லைத் தரவில்லை. சூரல் என்பதே நடைமுறையில் உள்ள தமிழ்ச்சொல்.
Pterido என்னும் இலத்தீன் சொல்லிற்குச் சூரல் எனப் பொருள்.
00

சூரிய மறைப்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சூரிய மறைப்பு வெருளி.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு இருக்கும் பொழுது அதன் நிழல் பூமியின் மீது விழும வானியல் நிகழ்வே சூரிய மறைப்பு என்பது.
சூரிய மறைப்பு நேருவதற்கு 12 மணி நேரம்முன்பே உண்டுவிட வேண்டும், சூரிய மறைப்பு நேரத்தில் உண்ணவோ உறங்கவோ கூடா, சூற்பெண்டிர்(கருப்பிணிப்பெண்கள்) வெளியேவரக்கூடாது, அந்த நேரத்தில் மறைப்பை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்பன போன்றெல்லாம் சொல்லப்படுவதால்,சூரிய மறைப்பு குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர். இதேபோன்ற காரணங்களால்தான் நிலவு மறைப்பு குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர்.
Obscur என்னும் இலத்தீன் சொல்லிற்கு மறைத்தல் எனப் பொருள்.
00